தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில், கரும்பு மற்றும் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசுகள் தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் […]
Tag: தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளக்காடாக் காட்சி அளித்து வருகிறது. வெள்ள நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதாக கூறியுள்ளார். சென்னையில் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று […]
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டை, உடைசலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது தமிழக மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளதாக தேமுதிக தலைவர்குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல அரசு பேருந்துகள் தரமற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் இயக்கப்படும் 30 சதவீத பேருந்துகள் காலாவதியாகிவிட்டன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் முன்னதாகவே தேமுதிக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் விலை உயர்வு, பணிநிரந்தரம், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு ஆகிய பல காரணங்களுக்காக இன்றும், நாளையும் நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அதில் காப்பீடு துறை, வங்கி, மின் துறை, போக்குவரத்து துறை பணியாளர்கள் என 20 கோடி பேர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழக […]
ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முகநூலில் தெரிவித்துள்ளதாவது, அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அந்த எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார். அதன்படி இட ஒதுக்கீட்டு முறையை சரியாக பின்பற்றி ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். […]
மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிகவினர் உதவி செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தொடர் மழையால் பல பகுதிகளில் அணைகள், ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோரம் வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தி, அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு மருத்துவம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மழைக்காலங்களில் […]
அண்மையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும், குறைக்கப்பட்டது. அதேபோன்று பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டது. முன்னதாக, தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபின்னர், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே திமுக அரசு குறைத்தது. எனவே தமிழக […]
100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. கழகத்தின் மீது அவதூறு பரப்புவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே உயர்ந்த நோக்கதோடும், இலட்சியத்தோடும் ஆரம்பிக்கப்பட்ட கழகம் தேமுதிக என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எந்த சுயநலமும் இல்லாமல், மக்கள் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 69வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்கள் என அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேமுதிக நிறுவனரும் , தமிழக மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீண்ட நாட்கள் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் குணமடைந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஜயகாந்த் அவர்கள் மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை, ஹைட்ரோகார்பன் திட்டத்தை […]