தேர்தலை முன்னிட்டு இணையதளம் மூலம் நடைபெறும் தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ‘பேட்ஜ்’கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ‘பேட்ஜ்’கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட […]
Tag: தேர்தல் விழிப்புணர்வு
திண்டுக்கல் கொடைக்கானலில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]
சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் அழைப்பிதழ் அச்சடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 100% வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள், காலையிலேயே கண்ணியத்துடன் வாக்களிக்க வருமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் […]
சிவகங்கை இளையான்குடியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சார வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 100% வாக்களிப்பது, பொது மக்கள் வாக்களிக்கும் முறை ஆகியவை குறித்து குறும்படங்களை தாசில்தார் ஆனந்த், பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த பிரச்சார வாகனம் […]