Categories
தேசிய செய்திகள்

“போடு ரகிட ரகிட” தேர்தல் பணியில் ஈடுபட்ட…. அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!

தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு சிறப்பு ஊழியம் விரைவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள் மற்றும்  அரசு ஆசிரியர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் லுதியானா  மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் […]

Categories
அரசியல்

மக்களே..! தீபாவளி, ஹோலிக்கு சிலிண்டர் இலவசம்….!! சூப்பர் வாக்குறுதி….!!

உத்தரபிரதேசத்தில் ஆறாவது கட்ட சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த தேர்தலுக்கு பிறகு உத்திரபிரதேச அரசாங்கம் மூன்று எஞ்சின் கொண்ட அரசாக இருக்கும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நோக்கம் பொதுமக்களின் பங்கேற்பு என மூன்று எஞ்சின் கொண்ட அரசாக செயல்படும். இந்தமுறை உத்திரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் தீபாவளி மற்றும் ஹோலி தினத்தன்று […]

Categories
அரசியல்

யோகியின் தொகுதி உட்பட…. நாளை 6ஆம் கட்ட தேர்தல்….!! உ.பியின் தலையெழுத்து என்ன….??

உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்ட தேர்தல்கள் முன்னதாகவே முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது ஆறாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. அந்த வரிசையில் 10 மாவட்டங்கள் அடங்கிய 57 தொகுதிகளில் நாளை காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. ஏற்கனவே நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

“என் கை சுத்தமா இருக்கு”…. திடீர் விசிட் அடித்த முதல்வர்…. கையில் கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!!

மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் குறித்த ரிப்போர்ட் முதல்வர்  ஸ்டாலினுக்கு சென்றுள்ளதால் அவர் டென்ஷன் ஆகி உள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உள்ளாட்சியில் தி.மு.க ஆட்சிதான் என்கிற நிலையை உருவாக்கி விட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின். இதனையடுத்து  அடுத்ததாக மக்களவைத் தேர்தலுக்கான பணியில் இறங்கி விட்டார் என்கின்றார்கள். இந்நிலையில்  உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராய் விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ,பீகார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போன் போட்டு ஜெயக்குமார் மனைவிக்கு ஆறுதல்…? சசிகலாவின் மாஸ்டர் பிளான்…!!!

கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரின் மனைவிக்கு சசிகலா ஆறுதல் சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 30 சதவீத இடங்களில் கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகள் தங்கள் வசமாகும்  என தீர்மானித்திருந்தனர். ஆனால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வுக்கு இந்த பலத்த அடி காரணமாக சசிகலா கட்சிக்குள் நுழைவது  எளிதாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க தரப்பில் […]

Categories
மாநில செய்திகள்

வி.ஐ.பி வேட்பாளர் விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு… பெரும் பரபரப்பு.!!

சென்னை அம்பத்தூர் 90 வது வார்டில் பா.ஜ.க சார்பில் நடிகை விஜயலட்சுமி திமுக சார்பில் ராஜகோபால் மற்றும் அதிமுக சார்பில் அய்யனார் போன்ற தேர்தலில் போட்டியிட்டனர். இதில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த எந்திரத்தை  மாநகராட்சி அலுவலர்கள் வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது எந்திரத்தை மாற்றி கள்ள ஓட்டு போட முயற்சி செய்வதாக பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமி, பா.ஜ.கவினர் சிலர் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாராலையும் அசைக்க முடியாது…. வால்பாறை நகராட்சி இனி திமுகவின் கோட்டை…!!!!

தமிழகத்தில் 27 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இவற்றில் மொத்தம்  12 ஆயிரத்து 838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு பல்வேறு போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து  பல்வேறு மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் சென்னையில் மட்டும் மந்தமாகவே நடைபெற்றது. இந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்”…! தமிழக அரசு புதிய அதிரடி?…!!

தேர்தல் பணி காரணமாக நாளை ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி  பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிரமாக நாடடைபெற்ற தேர்தல் …. முத்தாடியின் செயல் …. குவியும் பாராட்டுக்கள் ….!!

ஆம்புலன்ஸ் மூலம் வந்து வாக்கு செலுத்திய மூதாட்டியை பலர்  பாராட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்  கோவிந்தம்மாள் என்ற மூதாட்டிஉடல் நிலை சரி இல்லாததால்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில்   உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்களின் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து கோவிந்தம்மாள் தனதுவாக்கினை செலுத்தி  ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அதன் பின்னர் கோவிந்தம்மாள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“கடமையை நிறைவேற்றினோம்”ஒரே பிரவசத்தில் 3 பிறந்த குழந்தைகள்…. வாக்குச்சாவடியில் சுவாரசியம்…. !!

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் முதல் முறையாக தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி கிராமத்தில் மகேஸ்வரன்- மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராமலட்சுமி, விஜயலட்சுமி, ராமகிருஷ்ணன், ஆகிய ஒரே பிரசவத்தில் பிறந்த பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3 பெரும் முதல்முறையாக சின்ன காரியாபட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது முதல் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தாங்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் தங்களது ஜனநாயக […]

Categories
மாநில செய்திகள்

சூப்பராக முடிந்த “உள்ளாட்சித் தேர்தல்”…. “பல கிலோ மீட்டர் தூரம் நடந்து”…. கெத்து காட்டிய “மலைவாழ் மக்கள்”….!!

உடுமலை அமராவதி வனச்சரகம் பகுதியிலுள்ள 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்காக வாட்ச் டவரில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு வந்து சுமார் 304 பேர் தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள். உடுமலை அமராவதி வனச்சரகம் பகுதியில் 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளது. இந்த மலை பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளி பேரூராட்சியில் மேல் குருமலை, பூச்சி கொட்டாம் பாறை, குருமலை ஆகிய மலைவாழ்மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

சட்ட ரீதியான நடவடிக்கை கட்டாயம்…. தேர்தலையொட்டி நடந்த பிரச்சனை…. “சைலேந்திரபாபு” அதிரடி….!!

பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தேர்தலை ஒட்டி நடந்த சில நிகழ்வுகள் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஆனால் தேர்தலையொட்டி சில இடங்களில் சாலை மறியல், வாக்குவாதம் போன்ற பிரச்சினைகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்டியுள்ளார்கள். […]

Categories
மாநில செய்திகள்

பதட்டமான “5000 வாக்குசாவடிகள்”…. “வெப் கேமரா” வைத்து கண்காணிப்பு… மாநில தேர்தல் கமிஷனர் தகவல்…!!

தமிழகம் முழுவதுமுள்ள பதட்டமான 5000 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு இணையத்தின் வாயிலாக மாநில தேர்தல் கமிஷனில் 30 அலுவலர்கள் தலைமையில் கண்காணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்திலுள்ள மொத்த 25,735 ஓட்டுச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான 5000 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு மாநில தேர்தல் கமிஷனில் 30 அலுவலர்கள் தலைமையில் இணையத்தின் வாயிலாக நேரடியாக வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் கமிஷனரான பழனிக்குமார் கூறியதாவது, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

80 க்கு மேற்பட்ட உபகரணங்கள் …. 100% வாக்குகள் ….. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

பொதுமக்கள் தங்களது 100 சதவீத வாக்குகளை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் தேர்தல் மேற்பார்வையாளர் தங்கவேல், ஆர்.டி.ஓ. முத்து கழுவன், நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேர்தலுக்கு தேவையான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பதற்றமான  வாக்குச்சாவடி…. தேர்தல் எப்படி நடக்கிறது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி ஆய்வு….!!

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பதற்றமான  வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர்  தேர்தல் எப்படி நடக்கிறது என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின்னர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவை வைத்து மக்கள் தங்களது வாக்குகளை எவ்வித பிரச்சனை இன்றி  செலுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் தங்களது  வாக்குகள்  நடைபெற […]

Categories
சினிமா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட தளபதி…. எதுக்கு தெரியுமா?….!!!

நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் சென்று வாக்களித்துள்ளார். இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குபதிவு காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடந்தது. பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு மிதிவண்டியில் சென்று ஓட்டு போட்டார். தற்பொழுது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு காரில் வந்துள்ளார். இவர் […]

Categories
அரசியல்

வெற்றி உறுதியானால்…. ஒரு டோக்கனுக்கு 20 ஆயிரமாம்…. அடிச்சது ஜாக்பாட்…!!!

கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு விலை உயர்ந்த டோக்கன்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் உள்ளன. அம்மாவட்டத்தில் மொத்தம் 802 பகுதிகளுக்கு 3 ஆயிரத்து 366 பேர் போட்டியிடுகின்றனர். அதில் அதிமுக-பாஜக தனித்து போட்டியிட்டாலும் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி தேர்தல் களத்தை சந்திக்கின்றனர். மேலும் கோவை மாவட்டத்தில் மொத்தம் 23 […]

Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு?…. அரைநிர்வாணமாக வாக்களிக்க வந்த நபர்…..!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் 12வது வார்டுக்கான வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வந்த மகேஷ்குமார் என்பவர் அரைநிர்வாணமாக வந்ததால் காவல்துறையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். நகை மதிப்பீட்டாளர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. உங்களுக்கு வாக்களிக்க விருப்பம் இல்லையா?…. இதை செய்யுங்க….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா இல்லாததால் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் இருக்கும் தேர்தல் அதிகாரிகளிடம் 17-B […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் 106-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் விற்பனையாகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

வாவ்…! கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி…. செம சூப்பர் அறிவிப்பு…!!!

மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அறிக்கையை பா.ஜ.க கட்சியின் தேசிய தலைவர் கோபிநத்  வெளியிட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதில் முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5-ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேலும் இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மணிப்பூரில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பா.ஜ.க கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களை பெறும் அட்டைதாரர்களை தவிர்த்து வெளிநபர்கள் ரேஷன் கடைக்கு முன்பு கூட்டமாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கு வேண்டுமென மண்டல இணை பதிவாளர்களை, கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், பணபலம் படைத்த சுயேச்சை வேட்பாளர்களும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதில் ஆளும் கட்சியாகவுள்ள தி.மு.க.,வும், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களாக உள்ள அ.தி.மு.க.,-வும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி, ரேஷன் கடைகளிலேயே […]

Categories
மாநில செய்திகள்

இன்று (பிப்.18) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் நாளை (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை (பிப்.19) அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (பிப்.18) தேர்தல் பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் இன்றும் (பிப்.18) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு […]

Categories
அரசியல்

நான் ஒன்று சொன்னால்…. அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்…!! முதல்வர் பேச்சு…!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது அந்த வகையில் நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியது மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் வரை அனைவரும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! மார்ச்-18 முதல் இலவச சிலிண்டர்…. வெளியான செம சூப்பர் நியூஸ்…!!!

மார்ச்-18 முதல் இலவச காஸ் சிலிண்டர் வழங்க உள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகள் வரலாறு காணாத உச்சத்தில்  உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் களைகட்டி வருகிறது. உத்திரபிரதேச மாநிலதில் யோகி ஆதித்ய நாத் தலைமையில்  நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தலுக்கு பிறகு…. பெட்ரோல் விலையில் மாற்றம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் 102-வது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 100 நாளை கடந்தும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற சந்தோசம் வாகன ஓட்டிகளுக்கு நீண்ட நாள் நீடிக்க போவதில்லை. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுக்கு வந்த பிறகு கட்டாயம் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகின்ற 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான 19-ஆம் தேதி வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அவர்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என்று தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது…! பைக்கில் 3 பேர் போனால் அபராதம் இல்லை…. வித்தியாசமான வாக்குறுதி…!!!!!

இந்தியாவில் உத்திரப் பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தலைவர்கள் பலர் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், வருடத்திற்கு 3 சிலிண்டர் இலவசம் என பல்வேறு வாக்குறுதிகள் அதில் அடங்கும். உத்தரபிரதேச மாநில எம்எல்ஏவும் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவருமான ஒ.பி ராஜ்பார் “எங்களது ஆட்சி அமைந்தால் இருசக்கர வாகனத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடடே…! KG முதல் PG வரை இலவச கல்வி…!! வெளியான செம சூப்பர் நியூஸ்…!!!!

உத்திரபிரதேசத்தில் நாளை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியைக் காப்பாற்ற பாஜக என்னென்னவோ திட்டங்களை கூறி மக்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அகிலேஷ் யாதவின் பகுஜன் சமாஜ் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பழங்குடியினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. அரசின் திட்டம் என்ன?…. சுகாதாரத்துறை செயலாளர் அளித்த விளக்கம்….!!!!

ஜனவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா மூன்றாவது அலை தாக்கம் இரவு நேர ஊரடங்கு, வார இறுதியில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22-ஆம் தேதி என்று வாக்கு எண்ணிக்கையும் மேற்கொள்ளப்பட […]

Categories
தேசிய செய்திகள்

இலவசம் இலவசம்…! சிலிண்டர் முதல் பைக் வரை…. பாஜக செம சூப்பர் அறிவிப்பு…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் வருகின்ற 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் பின்வருமாறு, * அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்காக இலவச மின்சாரம் வழங்கப்படும். * விதவைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 800 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படும். அதோடு ஊனமுற்றவர்களுக்கான ஓய்வூதியமும் 1500 ரூபாயாக உயர்த்தப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! சம்பளத்துடன் ஒருநாள் விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

கோவாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால்  14ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல்  கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், இந்த 5 மாநிலங்களில்நடைபெறஇருக்கிறது. இந்நிலையில் இந்நிலையில் இந்த 5மாநிலங்களில் சட்டசபை    தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அந்தவகையில்  உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இதில் முதற்கட்ட முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதியன்று தொடங்குகிறது.  கடைசி ஏழாவது கட்ட தேர்தல் மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து…. தேர்தல் ஆணையம் அதிரடி…. பரபரப்பு….!!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்வு ரத்து…. ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை 1, கணினி பயிற்றுனர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வுக் கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியமானது வெளியிட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முதுகலை […]

Categories
அரசியல்

திமுக Vs அதிமுக…. மனைவிகளை களமிறக்கும் சகோதரர்கள்…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!!

அய்யலூர் பேரூராட்சி தேர்தலில் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் தங்களுடைய மனைவிகளை போட்டியாளர்களாக ஒரே வார்டில் களத்தில் இறக்கியுள்ளனர். அதன்படி 3-வது வார்டில் அதிமுக சார்பில் மணிகண்டனின் மனைவி கலைச்செல்வியும், திமுக சார்பில் மணிகண்டனின் உடன்பிறந்த சகோதரர் கார்த்திகேயன் மனைவி மாலாவும் களத்தில் உள்ளனர். அதேபோல் 2-வது வார்டில் கனகராஜன் என்பவரது மனைவி நாகலட்சுமி அதிமுக சார்பிலும், கனகராஜன் உடன்பிறந்த சகோதரன் நாகராஜன் மனைவி நித்யா திமுக சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த சில தேர்தல்களில் […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. இவ்வளவு பேர் வேட்புமனு தாக்கல்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் நாளில் அனைத்து பதவி இடங்களுக்கும் சேர்த்து 19 நபர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதையடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மனு தாக்கல் இல்லை. அதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. “இத யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க”…. முதல்வரின் முயற்சியை பாராட்டிய பிரதமர் மோடி….!!!!

உத்தரபிரதேசத்தில்  தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வருகிறார். உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்  நடைபெற உள்ள நிலையில்,    காணொலி  வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி     பேசிய போது  ; கிரிமினல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் சட்டத்தின் ஆட்சியை உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் நிலை நிறுத்தியுள்ளார்.  21 வது  நூற்றாண்டில் உத்திரபிரதேசம் தொடர்ந்து இரு மடங்கு வேகத்துடன் பணியாற்ற வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?…. தேர்தலுக்குப் பின்னர் வெளியாகும் அறிவிப்பு…. பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாவது அலை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இதன் விளைவாக தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியவை ரத்து […]

Categories
அரசியல்

இந்த 8 மாசத்துல மக்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும்… அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம்… சசிகலா பேச்சு…!!!

அம்மாவின் ஆட்சியை கட்டாயமாக தமிழ்நாட்டில் கொண்டு வருவோம் என்றும் யார் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்பதை கடந்த 8 மாதங்களில் மக்கள் புரிந்து வைத்திருப்பார்கள் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை தி-நகரில் இருக்கும் இல்லத்தில் அவரின் உருவப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, அம்மாவின் ஆட்சியை கண்டிப்பாக தமிழ்நாட்டில் கொண்டு வருவோம். யார் ஆட்சி செய்தால் நல்லது, என்று இந்த 8 மாதங்களில் […]

Categories
அரசியல்

“நள்ளிரவில்” தி.மு.கவில் நுழைந்த வேட்பாளர்…. கதறும் அ.தி.மு.க…. சர்ச்சையில் சிக்கிய ஆம்பூர் தொகுதி….!!!

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அ.தி.மு.க கட்சி ஆம்பூரில் 14-ஆவது வார்டில் போட்டியிடுவதற்காக வேட்பாளராக தமிழருவி என்பவரை அறிவித்துள்ள நிலையில் அவர் திடீரென தி.மு.கவில் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடப்பு மாதத்தின் 19ஆம் தேதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அ.தி.மு.க சார்பாக ஆம்பூரில் 14-ஆவது வார்டு வேட்பாளராக போட்டியிடுவதற்கு அக்கட்சி தமிழருவி என்பவரை அறிவித்துள்ளது. […]

Categories
அரசியல்

ஒரே வார்டில் களமிறங்கும் நாத்தனார்-அண்ணி…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!!

அ.தி.மு.க சார்பாக முன்னாள் எம்எல்ஏ வான நாஞ்சில் முருகேசனின் மகள் போட்டியிடம் அதே வார்டில், பா.ஜ.க சார்பாக அவரின் மருமகளும் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக அங்கு தேர்தல் நடக்கிறது. எனவே, தி.மு.க, அதிமுக மற்றும் பாஜக முதல் மேயர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று கடுமையாக போட்டியிட்டு வருகிறது. நாகர்கோவிலில் தி.மு.க வும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால், பா.ஜ.க மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்”…. தேர்தல் ஆணையம் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் ஆணைய அடையாள அட்டையுடன் மத்திய, மாநில அரசின் புகைப்படத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் இதற்கு திடீர் கட்டுப்பாடு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி இந்த வருடமும் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோவில்களில் நாளை சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு திடீரென்று கட்டுப்பாடு விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் […]

Categories
அரசியல்

பா.ஜ.க வில் யார் நின்னாலும் தோக்கப்போறது நிச்சயம்… அகிலேஷ் யாதவ் பேட்டி…!!!

உத்திரப்பிரதேசத்தில் முதல் முறையாக தேர்தலில் களமிறங்கிய சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கர்ஹாலை எதிர்த்து பாஜகவின் சார்பாக மத்திய மந்திரி எஸ்.பி. சிங் பாகெல் களமிறங்கியிருக்கிறார். ஆக்ரா தொகுதியினுடைய பா.ஜ.க கட்சியின் எம்.பி யான பாகெல் தேர்தலில் களம் இறங்குவதாக அறிவிப்பு வெளியானதால், கர்ஹால் தொகுதியில் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கிறது. அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வந்த போது பேசியதாவது, கர்ஹால் தொகுதியில் பாஜக சார்பில் யார் தேர்தலில் நின்றாலும் […]

Categories
அரசியல்

அப்படிப்போடு…! அப்பா போன ரூட்டில்…. “தேர்தலில் களம் இறங்கி கலக்க உள்ள அமைச்சர் மஸ்தானின் வாரிசு”….!!!!

விழுப்புரம் மாவட்டத்தை பொருத்தவரை பரபரப்பு மிக்க தொகுதியாக செஞ்சி விளங்குகிறது. இந்த தொகுதியில் கடந்த 1986 முதல் தற்போது வரை அமைச்சர் மஸ்தான் 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் செஞ்சி மஸ்தான் தலைமையில் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் செஞ்சி மஸ்தானின் மகன் மொகத்தியர் மஸ்தான் நேர்காணலில் கலந்து கொண்டார். செஞ்சி தொகுதி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மொக்தியார் மஸ்தான் இந்த தேர்தலில் களமிறங்குகிறார் என […]

Categories
அரசியல்

பா.ஜ.கவிற்கு வாக்களியுங்கள்…. உத்திரப்பிரதேசத்தை நம்பர் 1-ஆக மாற்றுவோம்…. அமித்ஷா பேச்சு…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டிருப்பதால் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்தித்திருக்கிறார். சட்டசபை தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா மீண்டும் பயணித்து வருகிறார். அப்போது ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது, ரஷ்ட்ரிய லோக்தள் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது பற்றி விமர்சனம் செய்தார். சமாஜ்வாதியின் தலைவரான அகிலேஷ் யாதவும், ரஷ்ட்ரிய லோக்தள் கட்சியின் தலைவரான,  ஜெயந்த் […]

Categories
அரசியல்

“ஐந்தரை ஆண்டுகள் இழுத்தடித்தவர்களுக்கு 5 நாட்கள் கூட அவகாசம் கொடுக்க மனமில்லை…” பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டம்..!!

தேர்தலை ஐந்தரை ஆண்டுகளாக தாமதப்படுத்திய தேர்தல் ஆணையத்தால் 5 நாட்கள் கூட கால அவகாசம் தர முடியவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, பாட்டாளி சொந்தங்களுக்கும் என் முதற்கண் வணக்கம். இந்த வாரத்தில் நான் எழுதும் இரண்டாவது மடல் இது. தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து என் எண்ணம் முழுவதும் தேர்தல் குறித்து தான் இருக்கிறது. கடந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மிக முக்கிய உத்தரவு…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!

சென்னையில் நகராட்சி தேர்தலை முன்னிட்டு பொது சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த முறை வாக்காளர் பட்டியலில் 10.17 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே எதாவது புகாரா?…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. தமிழக அரசு வெயிட்யிட்ட அறிவிப்பு….!!!!

சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் விதிமீறல்களில் ஈடுபடும் காட்சிகள் மற்றும் நபர்கள் தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . அதாவது, 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |