வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுக்கும் தொனியில் ட்விட் பதிவிட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதையே தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். 214 வாக்குகள் மட்டுமே டிரம்ப்புக்கு கிடைத்திருக்கின்றன. அசோசியேட் பிரஸ் என்று சொல்லக்கூடிய நம்பகமான செய்தி நிறுவனங்களின் தகவலின் அடிப்படையில் வெறும் 6 வாக்குகள் […]
Tag: தேர்தல்
வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். டிரம்ப்புக்கு 214 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது என அசோசியேட்டட் பிரஸ் என்ற நம்பகமான செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபராக ஜோ பைடனுக்கு வெறும் 66 வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையில் முற்றிலுமாக அவர் […]
அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குளறுபடி தொடர்பாக டிரம்ப் நீதிமன்றம் சென்ட்ரல் அவருக்கு சாதகமான உத்தரவு வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அமெரிக்கா தேர்தலில் ஜோ பைடனா ? டொனால்ட் டிரம்ப்பா ? யார் அமெரிக்க அதிபராக போகிறார்கள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்காவை ஆளப்போவது யார் ? என்ற மிக முக்கியமான கேள்வி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு முறை அதிபராக இருந்து விட்டு….. அதிபராக இருக்கும் போதே தோல்வியை சந்திக்க […]
அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகும் வாய்ப்பே அதிகம் உள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 213 தேர்தல் சபை வாக்குகளை பெற்று, அதிபர் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த 2 மணி நேரம் தேர்தல் முடிவில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் 118 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலும், முடிவுகளை அறிவிக்காத முக்கிய மாநிலத்தில் ஜோ பைடனை விட அதிக வாக்குகளை […]
அமெரிக்கா அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் ஆகவே பார்க்கவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலமான மேற்குக் கரையோரத்தில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாநிலத்தில் ஜோ பைடன் வென்றிருக்கிறார். கலிபோர்னியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சி வெல்லக்கூடிய மாநிலம். 55 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய […]
அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 129 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 90க்கும் வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்று பின்தங்கிஇருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே […]
அமெரிக்காவில் யார் அதிபர் ஆனாலும் ஈரானின் கொள்கை மாறாது என அந்நாட்டு மூத்த தலைவர் தெரிவித்துள்ளார் ஈரானுடன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மோதல் போக்கை தொடர்ந்து வந்தார். அதன் ஒரு பகுதியாக ஒபாமா அதிபராக இருந்தபோது கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு வெளியேறுவதாக அறிவித்தார். அதோடு கடுமையான பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது விதித்தார். இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நான்கு வருடங்கள் டிரம்ப் அதிபராக இருக்க போகிறாரா […]
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் உற்று நோக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவினுடைய கிழக்கு கடற்கரை பகுதியில் பெரும்பாலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 91 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ஆனால் தற்போதைய அதிபர் குடியரசுக் கட்சியைச் சார்ந்த டொனால்ட் டிரம்ப் 73 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 538 தேர்தல் […]
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெற இருக்கும் நிலையில் புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் என்.பி.டி மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஜோ பிடனுக்கு 52 சதவீத ஆதரவும் ட்ரம்புக்கு 42 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது. ஹரிசேனா, அயோவா, ஜோர்ஜியா, மிச்சிகன், மினசோட்டா, பென்சில்வேனியா, நியூ ஹாம்ப்ஷயர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த 12 மாநிலங்களில் பிடன் முன்னிலை வகிக்கிறார். அக்டோபர் 29 மற்றும் 31 இல் நடத்தப்பட்ட […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியை தேர்வு செய்ய அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு வகித்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். ஏற்கனவே தலைவராக இருந்த சோனியா காந்தி 2019ஆம் […]
நடிகர் ரஜினிகாந்த் இனி எப்போதும் அரசியலுக்கு வரமாட்டார் என செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி இரவு நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியிருந்தது. முக்கியமாக சில நபர்கள் இருக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுவில் மட்டும் இது பரவியது. இதையடுத்து ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பகிர்ந்து வந்தனர். அந்த அறிக்கையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அரசியலுக்கு வர மாட்டேன். மருத்துவர்கள் என்னுடைய உடல்நிலை சார்ந்து கவனிக்க சொன்னார்கள் என அறிக்கையில் […]
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் எதிரொலியாக தேர்தல் பணியாளர்களுக்கு முகக்கவசம் கையுறை சனிடைசர் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். வாக்குச் சாவடிகள் அனைத்திலும் துணை […]
கொரோன அச்சுறுத்தலுக்கு இடையே பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டில் கொரோனா சூழலுக்கு மத்தியில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இந்த பீகார் சட்ட மன்ற தேர்தல். மொத்தமாக 71 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் திருவிழாவில் அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார். தற்போது அவுரங்காபாத்தில் இடத்தில் இரண்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, அவை செயலிழக்க […]
பீகார் மாநிலத்தில் ஊழல் திளைக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறைக்கு அனுப்பப்படும் காலம் தொலைவில் இல்லை என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பிஹாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளியாக சுழன்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் ஹெலிகாப்டரில் பேசிய லோக் ஜன சக்தி கட்சி தலைவர் திரு சிராக் பஸ்வான் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து […]
பிஹார் தேர்தலில் தங்களின் லோக் ஜன சக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார் என திரு சிராகபாஸ்வான் தெரிவித்துள்ளார். பீகார் சட்ட மன்ற தேர்தல் வரும் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெற உள்ளது. தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர். திரு […]
24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் மோடியை மட்டும் காட்டுகிறார்கள் என ராகுல் காந்தி வேதனையை தெரிவித்துள்ளார். நேற்று பீகார் மாநில தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, என்னுடைய பேச்சு இப்போது நடந்து கொண்டிருக்கிறது, மோடியும் பேசுவார். நீங்கள் தொலைக்காட்சியை பாருங்கள். உங்களுக்கு தொலைக்காட்சியில் காங்கிரஸ் தெரியாது, ராகுல்காந்தி தெரியமாட்டார், உங்களுக்கு தொலைக்காட்சியில் வெறும் நரேந்திர மோடி மட்டுமே தெரிவார். நீங்கள் யோசித்து இந்த கேள்வி கேளுங்கள் 24 மணி நேரமும் நரேந்திர மோடியை ஏன் காண்பித்துக் […]
சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, குமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் […]
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாஜக மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு வரும் 28 மற்றும் அடுத்த மாதம் 3,7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்வர் திரு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜகவும், […]
காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு சத்யபிரதா சாகு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரசைை சேர்ந்த திரு வசந்த் குமார் காலமானதை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட […]
உத்திரப் பிரதேசத்தில் 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவையின் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதம் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.அதில் உத்திரபிரதேசத்தில் 10 இடங்கள் மற்றும் உத்தரகாண்டில் ஒரு இடம் காலியாகும். அந்த பதவிக்கான இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று […]
எங்களைப் பொறுத்தவரை இந்த கூட்டணியில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தான் தேர்தலை சந்திக்கும் என்று அமைச்சர் . கூறியுள்ளார். சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் அரசு சார்பாக கட்டப்பட்டு வருகின்ற கட்டிடங்களை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த கூட்டணி கட்டாயம் அதிமுக தலைமையில் தான் அமையும். கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து […]
திமுக கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறாது என்றும் திமுக மூழ்கும் கப்பல் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் எச். ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “திமுக ஒரு மூழ்கும் கப்பல். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.திமுக கூட்டணி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் வெற்றி காண முடியாது”என்று அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் பாஜக இடம்பெற வாய்ப்பு உள்ளது என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் […]
சசிகலாவுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அதிமுக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கும் என்பது பலரிடமும் எழுந்த கேள்வி. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் இன்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் சிறையில் […]
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துணை முதலமைச்சர் அவர்களை இன்று மாலை அவரது வீட்டில் சந்திக்க உள்ளார். இன்று காலை 10 மணியளவில் அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவும்,அதிமுகவின் சட்டமன்ற தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ் பி வேலுமணி ,ஜெயக்குமார்,சி வி சண்முகம், காமராஜ், ஜே சி டி […]
அதிமுகவில் பிரச்சனை வெடிக்காதா என எதிர்பார்த்திருந்தவர்களின் எண்ணத்தில் மண் விழுந்து விட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணி அளவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றவர்கள் யார்? என்ற சர்ச்சைகான விடை கிடைத்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழிகாட்டுதல் குழுவின் பெயர்களை அறிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மறைந்த முதல்வர்களான அறிஞர் அண்ணா […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை செய்தியாளர்களிடையே சற்றுமுன் அறிவித்தார். இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவர் என்று அதிமுக தலைமை சார்பில் முன்னதாகவே கூறப்பட்டிருந்த நிலையில் பதிக்கையாளர்கள் சந்திப்பு இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கூட்டாக தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.வழிகாட்டுதல் குழுவில் யார் யார் இடம்பெறுவர் என முன்னதாவே சிலரின் பெயர்கள் சலசலக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் […]
முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என மகிழ்ச்சியுடன் அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படுவர் என ஏற்கனவே கட்சி தலைமையகம் சார்பில் கூறப்பட்டிருந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.அதன் பின்னர் சற்றும் முன் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முன்னதாக அதிமுக அரசின் 11 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவினை அறிவித்தார். அதை தொடர்ந்து […]
இன்று காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கட்சி அலுவலகம் தொண்டர்களின் வருகையால் கலை கட்டியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இன்று காலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவு அமைச்சர்களுடன் இன்று அதிகாலை 3:00 மணி வரை ஆலோசனை நடத்தினர். இன்று காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்பும் கூட […]
அதிமுகவில் நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலைமைச்சர் ஓ .பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய வண்ணம் உள்ளனர். முதலில் அமைச்சர்கள் காமராஜ், சி.வி சண்முகம், கே.பி அன்பழகன் ஆகியோர் முதல்வர் இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து இன்று மாலை அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் முதல்வரின் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை மேற்கொண்டனர். […]
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என கோஷமிட்ட அதிமுக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனிக்கு திரும்பினார்.அதன் பின்னர் பல அமைச்சர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.இதனை அடுத்து சென்னை திரும்பாமல் தேனியிலேயே முகாமிட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் தேனியில் நாகலாபுரத்தில் நடைபெறவிருக்கும் “நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை” தொடக்கி வைப்பதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்பொழுது […]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் திரு தேஜஸ்விஆதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் திரு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு நிதிஷ்குமார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.அரசியல் கட்சிகளின் சார்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக தற்போது முக்கிய முடிவினை அறிவித்துள்ளது. இதுவரை தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் ஒரே ஒரு பொறுப்பாளர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது திமுக […]
நடிகர் சங்க தேர்தல் வழக்கில் இருந்து நீதிபதிகள் சுந்தரேஷ் ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விலகி உள்ளது. இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை ரத்து செய்ய உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து விஷால் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் […]
நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கை நடத்துவதா என்பது குறித்து நடிகர்கள் விஷால் தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினர் வரும் 24-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி, மற்றும் நாசர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு […]
தேர்தல் சிறப்பு அதிகாரி திரு சந்திரமோகன் தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிக்காண தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிக்காண தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு பேருக்கு தேர்தல் சிறப்பு அதிகாரி திரு சந்திரமோகன் வெற்றி பெற்ற சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 786 வாக்குகள் பதிவாகின இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்டன.
நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பதவி விலக கோரி பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மகளிர் அமைப்பினர் பங்கேற்றனர். பெலாரஸ் நாட்டின் அதிபராக கடந்த 26 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லூகாஸ்ஸன்கோ பதவி வகித்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் தில்லுமுல்லு அரங்கேற்றி அவர் வெற்றி பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ஆசிரியை சிகார் […]
அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து உரையாற்றும் பொழுது கொரோனா விரைவில் ஒழித்துக்கட்டப்படும் என கூறியுள்ளார். அதிபர் வேட்பாளர் தேர்வை டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாபெரும் விழாவில் மனைவி மெலனியாவுடன் கலந்து கொண்டு சிறப்பித்த அதிபர் டிரம்ப், குடியரசு கட்சியின் பிரசாரத்தையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். மேலும் அதிபர் வேட்பாளராக கட்சி சார்பில் 2வது முறை அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் உரையாற்றினார். அந்த உரையில், […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்ற வாரம் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஜோ பிடனை வேட்பாளராக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த நிலையில் வட கரோலினாவின் சார்லோட் நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்பை அதிபர் வேட்பாளராகவும், மைக் பென்சை துணை அதிபர் வேட்பாளராகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அந்த மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், “நான் மேலும் 4 ஆண்டுகள் அதிபராக இருப்பது உறுதி” என்று அவர் […]
வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட உள்ளதாக நடிகை நமீதா தெரிவித்திருக்கிறார். பாஜகவில் இணைந்த பின்னர் முதல் முறையாக அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நடிகை நமீதா வருகின்ற தேர்தல் கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், பிரச்சாரத்திற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார். மேலும் வேறு கட்சி என்ன செய்கிறதோ அதனை பற்றி சிந்திக்காமல் பாஜகவின் செயல்பாடு திட்டங்களை முன்னெடுத்து வாக்கு கேட்பேன் என்றும் நடிகை நமீதா மகிச்சியுடன் தெரிவித்தார் . தமிழக முதலமைச்சர் […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்துக்களின் வாக்குகளைக் கவர்வதற்கு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகையின் படி, ஒரு சதவீதம் பேர் இந்துக்களாக இருக்கின்றனர். ஆனால் அமெரிக்க அரசியலில் இந்துக்களுக்கான முக்கியத்துவம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. அதன் அடையாளமாக வருகின்ற நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்து சமூகத்தின் வாக்குகளை கவரும் விதத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் […]
நியூசிலாந்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த பொதுத்தேர்தல் கொரோனா அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து 702 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான ஆங்லாந்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பற்றிய அச்சம் மக்களிடையே மீண்டும் ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்தல் […]
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பீகார் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராஷ்ட்ரீய ஜனதாதளம் லோக் ஜனசப்தி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மக்கள் உயிர் […]
அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். ஜனாதிபதி தேர்தலுடன் சேர்ந்து துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் நடக்க உள்ளது. அதன்படி குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடவுளளார். ஜனநாயக கட்சி […]
தமிழ் திரையுலகில் ஒற்றுமை இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார் . தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரையுலகில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது ” திரையுலகினர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. நடிகர் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். அதுபோலவே தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். தயாரிப்பாளர்கள் சங்கமாக இருந்தாலும், நடிகர்கள் […]
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்துவரும் நிலையில், இந்தியப் பிரதமர் மோடி போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராகப் பதவியேற்ற கோத்தபய ராஜபக்ச மார்ச் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கையில் எப்போதும் தேர்தல் நடைபெற்ற அன்றே வாக்கு எண்ணிக்கை […]
அமெரிக்க தேர்தல் கருத்துக் கணிப்பில் பின்னடைவை சந்தித்த அதிபர் ட்ரம்ப் தன் பரப்புரை நிபுணரை பதவி விலக்கியுள்ளார். உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்கா தற்போது கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிபர் ட்ரம்ப் பெரும் தோல்வி அடைந்ததாக பெரும்பாலானோர் குற்றம் கூறியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலானது வருகின்ற நவம்பர் மாதம் 3-ல் நடக்க உள்ளது. அதுபற்றி குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் […]
அமெரிக்கா தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் இந்தியர்களுக்காக வாக்குறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தலானது இந்த ஆண்டு இறுதியான நவம்பர் மாதம் நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அங்குள்ள மக்கள் இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். ஒன்று குடியரசுக் கட்சி, மற்றொன்று ஜனநாயக கட்சி. தற்போது இரண்டு கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதிகளை மக்களிடையே தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளரும் முன்னாள் […]
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனஅதிபர் ட்ரம்ப் அவசர காலக்கெடு வைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்பாக கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும் என அதிபர் அதிகாரிகளை முடுக்கிவிட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. உலக அளவில் மற்ற நாடுகளை விட தொற்றால் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிபர் கொரோனா தொற்று பரவலை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை என விமர்சனங்கள் மக்கள் மத்தியில் […]
அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தலையிடும் எண்ணம் இல்லை என சீனா தெரிவித்துள்ளது அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் அடுத்த வாரம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிடம் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றிபெற தனிப்பட்ட முறையில் உதவி கேட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தகவல் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியானது. […]
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற சீன அதிபரின் உதவியை நாடியதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் ஒன்றை அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. வெளியான பகுதியில், […]