கடந்த 16ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நடந்த குரூப் 1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களை, போலீசார் நடத்திய விதம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, தேர்வில் யாரும் மோசடி செய்துவிடக்கூடாது என்பதற்காக, காவல்துறையினர் பெண்களை கடுமையாக சோதித்ததுடன், கையில் வளையல், தாலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றைக் கூட கழற்ற வைத்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வறைக்குள் நுழையவேண்டும் எனில், பெண்கள் ஒரு துளி நகைக்கூட அணியக்கூடாது என வற்புறுத்தப்பட்டனர். குறிப்பாக தாலியைக் கூட கழற்றிக் கொடுக்கும் நிலைக்கு […]
Tag: தேர்வறை
கர்நாடகத்தில் தேர்வறைக்குள் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி வழங்கிய 7 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றம், மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று விதித்திருந்த தடையை உறுதி செய்துள்ளது. இதையடுத்து ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் அனுமதி வழங்கப்படவில்லை. பள்ளிகளில் தற்போது பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில் மாநில கல்வித்துறை ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 40க்கும் […]
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில் தேர்வு எழுதி கொண்டிருந்தபோதே திடீரென மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மைசூரில் உள்ள டி-நரசிபுரா நகரத்தில் உள்ள அக்கூர் கிராமத்தை சேர்ந்த அனுஸ்ரீ என்ற மாணவி அரசுப் பள்ளி ஒன்றில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். கன்னட மொழி பாடத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அந்த மாணவி விடைகளை எழுதிக் கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து தேர்வு அறையில் இருந்த ஆசிரியர், […]