பிளஸ் 1 துணை தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் ஒன் மாணவர்களுக்கு கடந்த ஜூன் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் […]
Tag: தேர்வுத்துறை
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. விடைத்தாள்களை ஆசிரியர்கள் மன உளைச்சல் இன்றி திருத்த ஏதுவாக பல சலுகைகளை தேர்வுத்துறை வழங்கியுள்ளது. அதில் ஒன்றாக ஆசிரியர்கள் […]
தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 பேர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று […]
தமிழகத்தில் எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொது தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மறுபக்கம் தேர்வு நெருங்கி வருவதால் தேர்வு மையம் அமைக்கும் பணியில் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்வு […]
பத்து முதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் எந்த பாடத்திட்டத்தில் அமையும் என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விளக்கமளித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நடப்பு கல்வி ஆண்டின் போது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்வு இந்த பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு […]
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்ததையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 10-ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த பிப்.9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரைநடைபெற்றது. மேலும் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்.4 ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து […]
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கடந்த 2 வருடங்களாக அதிகரித்த காரணத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. மேலும் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பருவத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புக்கள் நடைபெற்றன. மேலும் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு கால அட்டவணையை மார்ச் 2-ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதாவது, 10 முதல் […]
பொதுத்தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெறுவதற்கான விண்ணப்பங்களை உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகை பெற விரும்புவோர் மருத்துவ குழு பரிந்துரை கடிதம் பெற்று உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும். அதன்படி காது கேளாதோர், பார்வைத்திறனற்றோர், விபத்தால் ஊனமுற்று பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர் உள்ளிட்டோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், […]
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மதம், ஜாதி உள்ளிட்ட 12 வகையான விவரங்களையும் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், அனைத்து பணிகளையும் நவம்பர் 22ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தேர்வுத்துறை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் மேல்நிலை கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி யிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வரும் தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பள்ளியில் தேர்வர்கள்/பெற்றோர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க […]
புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதை குறித்து முடிவான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், யூஜி முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் மற்றும் பிஜி முதல் செமஸ்டர் ஜூலை 26முதல் நடத்த திட்டமிப்ப்பட்டிருந்தது. மேலும், இறுதியான்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இன்டெர்னல் மதிப்பெண் […]
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
10,12 வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வுகள் மட்டும் தகுந்த சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது செப்டம்பர், அக்டோபரில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. […]
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி அளிக்க தேர்வுத்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெறவில்லை என செய்திகள் வெளியான நிலையில் தற்போது தேர்வுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக 10,11,12ம் வகுப்பு தேர்வுகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, […]
10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி வரும் 29ம் தேதி தொடங்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை இணையத்தில் மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இணையத்தில் மதிப்பெண் பதிவேற்றும் போது, தேர்வுத்துறை இயக்குநரின் உத்தரவின்றி அறையை விட்டு வெளியேறக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் […]
தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்வுத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் மே மாதம் 27ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. 202 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் நடைபெற்றது. 48 […]
10,11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அரசு தேர்வுகள் இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று காணொளி மூலம் மக்களிடையே உரையாற்றிய […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் 12ம் வகுப்பு தேர்வு […]