தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுணர் பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பதவிகளுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் புயல் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட […]
Tag: தேர்வு தேதி
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநில அளவிலான கால்பந்து வீரர்களுக்கான தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஆண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதியும், பெண்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனவே நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் நாளை மறுநாள் முதல் மே-7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் தேவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவிக்கான மெயின் தேர்வு தேதி மாற்றம் செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு பிப்ரவரி 23 (நேற்று) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் எனவும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை நேற்று வெளியிடப்பட்டது. மே 21-ஆம் தேதி நடைபெற உள்ள […]
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பிப்ரவரி 23-ஆம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேர்வர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தொழில் துறை ஆணையர் மற்றும் வணிகம், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை பிரிவு, நகராட்சி ஆணையர், வணிக வரி அதிகாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு சங்க ஆய்வாளர், நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஸ்டெனோ டைப்பிஸ்ட், […]
யுபிஎஸ்சி தேர்வாளர்களுக்கு தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது யுபிஎஸ்சி ( UPSC ) சிவில் சர்வீஸ் 2022-ஆம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 5-ஆம் தேதி அன்று முதல்நிலை தேர்வுகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஎஸ் உட்பட 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ( பிப்.22-க்குள் ) upsc.gov.in அல்லது https://upcoming.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பித்து […]
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட […]
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி கிடங்கு ஊழியர், வட்டார சுகாதார புள்ளியியலாளர் , புள்ளியியல் உதவியாளர் பணிகளில் காலியாக உள்ள 191 பணியிடங்களுக்கு நவம்பர் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு ஜனவரி 9ஆம் தேதி எழுத்துத் […]