தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி கூறுகையில், ” தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வராத நிலையில், பெற்றோர்கள் தரும் ஆவணத்தின் படி சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கான 2020-2021 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு […]
Tag: தொடக்கம்
ஜம்மு – காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களுக்கு அதிவேக 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பல் மற்றும் உத்தம்பூர் மாவட்டங்களில் 4ஜி அதிவேக இணைய சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மருத்துவ சேவை மற்றும் கல்விக்காக 4ஜி இணைய சேவை வழங்கவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இது பற்றி விரைவில் முடிவு எடுக்க உயர்நிலைக்குழு அமைப்பதற்கு உத்தரவிட்டது. அதனை செயல்படுத்த வில்லை என்று […]
50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்தை சீனா தொடங்கியுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பிய சீனா, தற்போது அதன் நாட்டில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. கொரோனா பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுவிட்டது. அங்கு தற்போது 50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து சீன சிவில் விமான போக்குவரத்து துணை இயக்குனர் […]
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘வரி செலுத்துவோர் சாசனம்’ தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வரி செலுத்துவோர் மதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். அதன் […]
இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது. 117 நாட்களுக்குப் பிறகும் தொடங்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இந்திய நேரப்படி 03:30 மணிக்கு தொடங்குகிறது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த […]
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது. 2வது அணு உலையில் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதால் மின்னுற்பத்தி கடந்த 21ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகள் பராமரிப்பு பணிகளுக்காக ரஷ்யாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் 2-வது அணுஉலையில் ஜெனரேட்டர் பகுதியில் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதால் முழுஅளவில் […]
கீழடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்.24ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 3ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது தமிழக அரசு தரப்பில் சில ஊரடங்கு தளர்வுகள் வெளியிடப்பட்டன. அதில் கட்டுமான […]
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சகைக்கான முதற்கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிகிச்சை முழு பயன்பாட்டிற்கு வர குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை செய்ய 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் […]