Categories
தேசிய செய்திகள்

வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு….. கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி…. அதிர்ச்சி சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலம், விஜயவாடா என்ற பகுதியை சேர்ந்த கிரிதர் ரேணுகா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கிரிதர் கூலி தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த வருமானம் போதாத காரணத்தினால் அவர்கள் குடும்பத்துடன் குடிமல் கபூர் என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரிதருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த மனைவி அந்த பெண்ணுடன் இருக்கும் பழக்கத்தை விடும்படி கேட்டுள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனையும், கள்ளக்காதலியையும்….. “அரை நிர்வாணமாக ஊர்வலம்”…..  மனைவி கொடுத்த கொடூர தண்டனை….!!!!

மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்த கணவனையும், அவரது கள்ளகாதலியையும் அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக மனைவி அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உரிபேண்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பழங்குடி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஃபர்சகான் பகுதியில் உள்ள badgai என்ற கிராமத்தில் இருக்கும் பெண்ணுக்கும் தன் கணவனுக்கும் இடையே திருமணத்தை மீறிய பந்தம் இருப்பதை கேள்விபட்டு கடந்த 11ம் தேதி அன்று அங்கு ரகசியமாக சென்று சோதனை செய்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் மந்திரிக்கு தொடர்பு இருக்கிறதா….? ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம்…. கேரளாவில் பெரும் பரபரப்பு….!!!

ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படவிருந்தது. அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 14.82 கோடி ரூபாயாகும். இந்த தங்கத்தை மத்திய சுங்கத்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் ரகசிய வாக்குமூலம் கொடுத்ததாக தற்போது […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்…. வாட்ஸ்அப் வீடியோ காலில் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் உரையாடினார். உக்ரைன் மீது ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன்  உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு  கல்வி மற்றும் வேலைக்காக சென்ற இந்தியாவை சேர்ந்த பிற மாநிலத்தவரும் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சைபர் தாக்குதல் நடத்தினால் தொடர்பு கொள்ள முடியாது…. தமிழக மாணவர்கள் உச்சக்கட்ட பரபரப்பு தகவல்…!!!

ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தினால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். மேலும் உக்ரைன் தலைநகரான கீவ்  பகுதியில் கடுமையான தாக்குதலை ரஷ்யா  நடத்தி வருகிறது. அந்த பகுதியில் உள்ள நேஷனல் மெடிக்கல் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த தமிழக மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மதுரை ஆவினில் முறைகேடு…. ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா…? தொடரும் விசாரணை….!!!!

இந்நிலையில் மதுரையில் ஆவின் முறைகேட்டில் ராஜேந்திரபாலாஜிக்கு தொடர்பு உள்ளதா? என்று ஆவின் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பால்வளத்துறை அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் சுப்ரீம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பாலியல் வழக்கு… அடுத்தடுத்த பரபரப்பு செய்தி…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகருடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு குற்றவாளிகளுக்கு தாவூத் இப்ராகிம் உடன் தொடர்பு…!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் டீ நிறுவனத்துடன் தொடர்பு இருக்கலாம் என கொச்சி நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாக என்ஐஏ  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் ஜாமீன் கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் உளவாளிகளுடன் நடிகர்களுக்கு தொடர்பு… தயாராகும் பெயர் பட்டியல்….!!

பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் பாலிவுட் நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் உளவாளிகள் 15 முதல் 20 வரை பாலிவுட்டில் ஊடுருவியுள்ளனர். அங்கு இருக்கின்ற பிரபலங்கள் இந்த உளவாளிகளுடன் நெருக்கமாக இருக்கின்றனர். இந்த உளவாளிகள் பாகிஸ்தானின்  புலனாய்வு அமைப்புடன்  நெருக்கமாக உள்ளதாக அதிகாரிகளிடமிருந்து தகவல்  வந்த போதிலும் பிரபலங்கள் அவர்களுடனான நெருக்கத்தை கைவிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. சில பாலிவுட் நட்சத்திரங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் சில தனிநபர்கள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கலைஞர்களுடன் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதி..!

கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மூலம் காஞ்சிபுரத்தில் பாதித்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், இதுவரை 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை காஞ்சிபுரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் மொத்தமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் […]

Categories

Tech |