தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முதலில் நாகை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் தொடர் கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
Tag: தொடர் கனமழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்நிலையில் தொடர் கனமழை, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 66 […]
ஊட்டி- மஞ்சூர் இடையேயான சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. நீலகிரி மாவட்டத்தில் சென்ற இரண்டு வாரங்களாகவே தென்மேற்கு பருவ மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் குன்னூர், எல்லநெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று மணி நேரம் கனமழை பெய்துள்ளது. மேலும் நடுவட்டம், மசினகுடி, கேத்தி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஊட்டி- மஞ்சூர் இடையேயான சாலையில் பழமையான ராட்சத மரம் […]
மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், சிந்த் மற்றும் பலுச்சிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக பல வீடுகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து வடகிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மணிக்கு […]
ஹைதராபாதில் கொட்டித் தீர்த்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளன. ஹைதராபாதில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் சியாத் நகரிலுள்ள குடியிருப்புகளில் நேற்று பெய்த கன மழையால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றப்பட்டனர். மேலும் […]
தெலுங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஹைதராபாத் நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். […]
மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மத்திய சீன நாட்டில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. குறிப்பாக ஹெனான் மாகாணத்தின் தலைநகர் ஜென்சூ கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அங்கு ஆண்டிற்கு சராசரியாக 60 சென்டிமீட்டர் மழை மட்டுமே பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தொடர்ந்து ஒரு மணி நேரம் 20 சென்டிமீட்டர் மழை […]
சுவிட்சர்லாந்தில் தொடர் கனமழை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் பெர்ன் மற்றும் சில ஆல்பைன் பகுதிகளில் உள்ள ஏரிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட புயல் தாக்கத்தால் அப்பகுதியில் உள்ள 30 வீடுகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் சுற்றுச்சூழலுக்கான பெடரல் அலுவலகம் இந்த வெள்ள அபாய எச்சரிக்கையை மூன்று அளவுகளாக கணித்துள்ளது. இதில் ஆல்பைன் பகுதிகளில் […]
வட கர்நாடகத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் 28,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் 174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. வட கர்நாடக மாவட்டங்களான கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, விஜயபுரா, பேலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் அபாய எல்லைகளைத் தாண்டி கரைபுரண்டோடும் […]
தெலுங்கானாவில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பருவமழையால் தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அதனால் அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகையை அறிவித்துள்ளார். அதில் மழையால் பாதிக்கப்பட்ட,தாழ்வான பகுதிகளில் வசித்து கொண்டிருக்கும் ஏழைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதியுதவியாகவும், மழையால் முழுவதும் சேதம் அடைந்துள்ள அனைத்து வீடுகளுக்கும் […]
பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் புளியங்கன்டில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களது குடியிருப்புகளை புதுப்பித்த தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை அருவன பகுதியில் வசித்து வந்த மலைவாழ் மக்கள் வெளியேற்றப்பட்டு, நவமலை, ஆழியார், வாய்க்கால் மேடு, புளியங்கன்டி பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளில் வசித்து வரும் இவர்கள், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் […]