வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அமைச்சர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tag: தொற்று உறுதி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு இன்று மாலை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு இன்று மாலை தொற்று உறுதியாகியுள்ளது. இவர் தனது தைலாபுரம் தோட்ட இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இது தொடர்பாக தனது twitter பகுதியில் அவர் தெரிவித்ததாவது: “நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டு இருந்த எனக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தைலாபுரம் தோட்ட இல்லத்தின் என்னை நான் […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவான்மியூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வந்ததால் கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இருப்பினும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது சென்னையில் திருவான்மியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . இதன் காரணமாக அந்த குடியிருப்பில் வேறு […]
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள், பல நாட்டு தலைவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் ஐரோப்பியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது தாயாரான மகாராணி இரண்டாம் எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் பகுதியில் அவரை சந்தித்து விட்டு திரும்பினார். இதையடுத்து இளவரசர் சார்லசுக்கு அடுத்த […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அடுத்தடுத்து உருமாறி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாவது அலை அதற்கு நேர்மாறாக மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் கண்டு மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் என்று பரவி வருகின்றது. திரைப் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு துறைகளைச் சார்ந்த பலருக்கும் இந்த தொற்று பாதிப்பு […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில எதிர்க்கட்சித் […]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நான்கு முறை தடுப்பூசி செலுத்தி கொண்ட பெண்ணிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து துபாய் விமான நிலையத்திற்கு செல்ல இருந்த 30 வயதான பெண்ணுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், அவர் பல்வேறு நாடுகளில் நான்கு முறை தடுப்பு ஊசி […]
தமிழகத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தெரிவித்தார். ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக நாளை முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் ஏழுநாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயம். ரிஸ்க் நாடுகள் மட்டுமின்றி ரிஸ்க் இல்லாத நாடுகளில் இருந்து வரும் ஏழு நாட்கள் தனிமையில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில்தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அவர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட இருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,819 ஆக உயர்ந்துள்ளது. அதோடு இன்று 84 பேர் தொற்றினால் மரணமடைந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 57,725 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கும் நிலையில் 74,590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் […]
வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கும்பகோணம் பகுதியை சேர்ந்த 42 வயது உள்ள ஒருவர் சில நாட்களுக்கு முன் வெஸ்ட்இன்டீஸ்சில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தகவல் கிடைத்ததும் அவரின்வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் சுகாதாரத்துறையினர் சென்றனர். பின்னர் அவரின் இரத்தத்தை எடுத்து சோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா […]