தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,200ஐ தாண்டியது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துவிட்டது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 77 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,231 ஆக அதிகரித்துவிட்டது. சென்னையில் நேற்று ஒரே […]
Tag: தொற்று
கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கொரோனா தொற்றில் இருந்து […]
தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 528 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 528 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக சுகாதாரத் துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்லோர் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து […]
தமிழகத்தில் கொரோனா பலி குறைந்தது..!!
தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தனர். இதில் 5859 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,40,685 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று மட்டும் 61 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் […]
உலகிலேயே ஒரே நாளில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. உலக அளவில் இதுவரை இரண்டரை கோடி மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 8 லட்சத்து 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கொரோனாவால் அதிக பாதிப்பு அடைந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனிடையில் நேற்று இந்தியாவில் 78 ஆயிரத்து 761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் உலகிலேயே ஒரே […]
தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக முக்கியச் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுபடுத்த இம்மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஞாயிற்றுக் கிழமையான இன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் தலைநகர் சென்னையில் உள்ள அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைககள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செர்பிய வீரரான ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக பால்கன் பிராந்தியத்தில் Djokovic’s Adria Tour exhibition tournament- ல் விளையாடிய பிறகு குரோஷியாவின் போர்னா கோரிக், பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவ் மற்றும் விக்டர் ட்ரொக்கி ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வழக்கு விசாரணை தற்போது இல்லை என உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது. நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நாரிமன், லலித், சந்திரசூட், கான்வில்கர், நாகேஸ்வர் ராவ் அடங்கிய குழு அறிவித்துள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 5ம் கட்ட […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 707 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 672 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 408 பேர் குணமடைந்தனர். மேலும் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 6 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 258 ல் இருந்து 293 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா […]
சென்னை மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதில் சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, சென்னையை அடுத்த மாதவரத்தில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வந்த இரண்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. […]
கொரோனாவை வைரஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாது என்றும் ஃப்ளு போன்று இந்த தொற்று நோய் அடிக்கடி வரும் எனவும் சீனா மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்திருக்கும் என சீனாவின் நோய் கிருமி ஆய்வு கழக இயக்குனர் ஜின்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சார்ஸ் வைரஸோடு ஒப்பிடும் பொது கொரோனா மிகவும் கொடிய வைரஸ் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அறிகுறி எதுவும் இல்லாமல் இந்த வைரஸ் பரவுவதால் மிக பெய்ய […]
செல்ல பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தோற்று பரவுமா? பரவாதா? என்பது பற்றிய தொகுப்பு நியூயார்க் நகரில் பெண்புலி ஒன்றிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அச்செய்தி வலைத்தளங்களில் வைரலாக பரவி செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பல வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தது. வைரலாக தகவல் பரவி வந்தது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் செல்லப் பிராணிகளிடம் இருந்து […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 தொட்டுள்ளது. இதுவரை 113 இந்தியர்களும், 24 வெளிநாட்டினரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 14 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 26 பேரும், கர்நாடகாவில் 11 பேரும் தெலுங்கானாவில் 5 பேரும் டெல்லியில் 8 பேரும் உத்தரபிரதேசத்தில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் கர்நாடகாவில் […]