சீன நாட்டில் அதிக நேரமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனுக்கு தண்டனையாக இரவு முழுக்க அவரின் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்க வைத்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களின் 8 வயது மகனிடம் “நாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நேரமாகும். எனவே, வீட்டு பாடங்களை முடித்துவிட்டு 8:30 மணிக்கு தூங்கு” என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பிய பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் வீட்டு […]
Tag: தொலைக்காட்சி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறப்பு விருந்தினர்கள் வெறுப்பு பேச்சை பேச அனுமதிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சி சேனல் தொகுப்பாளரின் பங்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் ஹிரிஷிகேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது. ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளரின் பங்கு என்பது மிகவும் முக்கியத்துவம் ஆனது. மேலும் அவரது பணி சிக்கல் நிறைந்தவைகள் ஆகும். ஏனென்றால் ஒரு நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்துள்ள நபர்கள் வெறுப்பு பேச்சை பேச […]
பிரபல பாலிவுட் நடிகையான மஞ்சு சிங் திடீரென காலமானார். இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தயாரித்து, தொகுத்து வழங்கியவர் மஞ்சு சிங். இவர் குழந்தைகள் நிகழ்ச்சியான khel khilone எனும் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இதனால் ரசிகர்களால் திதி எனவும் அழைக்கப்படும் வந்தார் மஞ்சு சிங். மேலும் தனது நிகழ்ச்சிகளின் மூலமாக சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி வந்தார். மஞ்சு சிங்கின் திறமையை […]
பிரிட்டனில் கடந்த 1982ஆம் ஆண்டு ‘சேனல் 4’ என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. மக்களை மகிழ்விக்கும் விதமான நிகழ்ச்சிகளை அரசு சார்பில் வழங்குவதற்காக பிரிட்டன் அரசாங்கம் இந்த தொலைக்காட்சியை தொடங்கியது. விளம்பர வருவாய் மற்றும் மக்களின் வரிப்பணம் போன்றவற்றைக் கொண்டு இந்த சேனல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த சேனலை விற்பனை செய்ய உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இதற்கு தொலைக்காட்சி ஊழியர்களும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரிட்டன் அரசோ, நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற […]
நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் யோகிபாபு, பூஜா ஹெக்டே, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் அனிருத் இசையில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஆடியோ வெளியீடு இல்லை என்ற செய்தி வெளியாகி உள்ளது. ஆனாலும் ஆடியோ வெளியீட்டுக்கு பதிலாக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் […]
ரெட்மி நிறுவனம் பல அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி X 43 கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி அன்று அறிமுகமாகியிருக்கிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியை கோடாக் மகிந்திரா வங்கியினுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் வாங்கினால் 1500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரெட்மி நிறுவனமானது, ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனம். ஸ்மார்ட் போன், டிவி, டிஜிட்டல் கருவிகள் போன்றவற்றை ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி […]
இத்தாலியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் குழந்தைப் பேறு இல்லை என்று சென்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசியதை தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. இத்தாலியில் “மேஜிக் ஃபுளூட்” என்று செல்லமாக அழைக்கப்படும் மகப்பேறு மருத்துவரான கியோவானி மினியெல்லோ ( வயது 60 ) குழந்தை பாக்கியம் இல்லை என்று வந்த பெண்ணிடம் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும் “சிறு மார்பகங்கள் கொண்ட பெண்களின் ரசிகன் நான் ” என்று கூறி அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள […]
நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியார் கலந்து கொள்ளாதது குறித்து தொலைக்காட்சி பிரபலம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரித்தானியா தொலைக்காட்சி பிரபலமான பியர்ஸ் மோகன் அரசக் குடும்பம் குறித்து தமது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாக இவ்விவகாரங்களில் பல முறை சிக்கியுள்ளார். இருப்பினும் தமது கருத்துக்களை அவர் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று லண்டனில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் மகாராணியார் கலந்து கொள்ளாதது அனைவருக்கும் அவரின் உடல்நிலை சரியில்லையா என்ற சந்தேகத்தையும் கவலையும் அளித்துள்ளது. ஏற்கனவே […]
தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பற்றியதில் மூதாட்டி கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியில் குப்புசாமி(85) என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ரொட்டி தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து குப்புசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு சரஸ்வதி(75) என்ற மனைவி இருந்தார். இவர் சத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக […]
பாகிஸ்தான் அரசு, தங்கள் நாட்டில் தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பப்படும் தரம் குறைவான காட்சிகளுக்கு தடை அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், நாகரீகமற்ற உடை அணிவது, படுக்கையறை காட்சிகள் தொடர்பான உரையாடல்கள், சைகைகள் மற்றும் கட்டியணைப்பது ஆகிய காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறது. மேலும் கலாச்சாரத்தை அழிக்கும் வகையிலான காட்சிகளை தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, தொலைக்காட்சி தொடர்களில், ஒழுக்கக்கேடான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் புகார் […]
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு சன்சத் தொலைக்காட்சியை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக புதியதாக சன்சத் என்ற பெயரில் தொலைக்காட்சியை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்காய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாளை […]
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தொலைக்காட்சிக்கு முதல் முதலாக வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஜீ தமிழ் விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா . இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே கலகலப்பாக செல்லும். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மேலும் பிரபலமானர். இதை தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு […]
தனுஷின் கர்ணன் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இதுவரை ஓடிடியில் மட்டுமே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கர்ணன் திரைப்படத்தின் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கர்ணன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்க இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் […]
ஜிவி பிரகாஷின் புதிய திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது ‘வணக்கம்டா மாப்ள’ என்கின்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் எப்போது?, எப்படி? ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. […]
டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி செய்ததால் கைதான பார்த்தோ தாஸ் குப்தா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணக்கிடும் டிஆர்பி ரேட்டிங்கில், ரிபப்ளிக் தொலைக்காட்சி உள்பட 3 சேனல்கள் முறைகேடு செய்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. டிஆர்பி இல் ஏற்பட்ட முறைகேடால் ஊடகத்துறை மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. டிஆர்பியில் முறைகேடுகள் நடைபெறுவதாக டிஆர்பியை அளவிடும் ஹன்சா ஆராய்ச்சி நிறுவனத்தின் அலுவலரானநிதின் தியோகர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் அடிப்படையில் […]
மேற்கு வங்கத்தில் இருக்கும் கிராமங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் கேம் விளையாடுவதற்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் பலர் வீட்டில் முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது செல்போனில் கேம் விளையாடுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய பழக்க வழக்கம் இளைஞர்களையும் சிறுவர்களையும் அதிக அளவு பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள சில கிராமங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் செல்போனில் கேம் விளையாடுவதற்கு தடை […]
தொலைக்காட்சியை பார்த்து மெய்மறந்து போன நாயின் சுட்டித்தன வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. நம்மில் பலரும் செல்ல பிராணிகளை அதிக அக்கறையும் பாசமும் கொண்டு வளர்ப்போம். அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அதாவது விளையாட்டு, உணவு உண்ணும் முறை, இவற்றை நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க கற்றுக்கொடுத்து வளர்ப்போம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் முதன்மையாக இருப்பது நாய்தான். பல நண்பர்கள் உறவினர்களுடன் அன்பாக இருப்பதை […]
ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒருபுறம் நடைபெற்று வர, மறுபுறம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், […]
தன்னை விட உயரமான தொலைக்காட்சியை திருடிச் சென்ற பெண், சிசிடிவி கேமராவில் சிக்கிக் கொண்டார். ப்ளோரிடாவில் பட்டப்பகலில் தன்னை விட உயரமாக இருக்கின்ற தொலைக்காட்சி பெட்டியினை ஒரு பெண் திருடி செல்லக்கூடிய காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பெண் பல சிறிய பொருள்களையும், 60 இன்ச் பிளிப்ஸ் தொலைக்காட்சியையும் திருடிக்கொண்டு தள்ளுவண்டியில் ஏற்றி கடையைவிட்டு புறப்பட்டுள்ளார். அக்கடையில் உள்ள அனைவரையும் ஏமாற்றி வெளியேறிய பெண்ணினை அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர் தொலைக்காட்சிப் பெட்டிக்கான ரசீதை தருமாறு கேட்டிருக்கின்றார். அப்போது […]
தொலைக்காட்சி அட்டைப்பெட்டியை மதிப்புமிக்க பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் சாம்சங் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது சாம்சங் நிறுவனத்தின் புதிய முயற்சியாக தொலைக்காட்சியை வைத்து அனுப்பும் அட்டைப் பெட்டிகளை மதிப்புமிக்க பொருளாக மாற்றிக் கொள்ளும்படி புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி வைத்திருக்கும் பெட்டியை கொண்டு புத்தக அறைகள் பூனை கூடுகள், நாளிதழ் அடுக்குகள் போன்றவற்றை உருவாக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி பெட்டியில் இருக்கும் க்யூ ஆர் குறியீட்டை உபயோகித்து அட்டைப்பெட்டியில் எந்தமாதிரியான அமைப்பை உருவாக்க முடியும் என்பதை அறிந்து […]
பத்தாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாடங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மார்ச் 27ஆம் தேதி ஆரம்பமாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் குறையாத காரணத்தினால் மக்கள் நல்வாழ்வு துறை கொடுக்கும் விவரங்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் […]