சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான யுஜிசி- யால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை,முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் மாணவர்கள் நேரிலும் அல்லது http://online.ideunom.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: தொலைதூர கல்வி
தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக வருகின்ற 21 & 22 தேதிகளில் M.E., M.Tech., M.Arch., M.Plan., & […]
புதுச்சேரி பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வியில் B.A, M.A, B.Com, M.Com, BBA, MBA படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி dde.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100 சதவீதம் கட்டணம் இலவசம், மூன்றாம் பாலினத்தவர்கள், கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 50 சதவீதம் கட்டணம் இலவசம். அதுமட்டுமல்லாமல் பட்டியல் இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் உண்டு என்ற […]
அழகப்பா பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி முறையில் பல்வேறு வகையான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. அதன்படி செமஸ்டர் மற்றும் செமஸ்டர் இல்லாத படிப்புகளும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பலரும் வீட்டிலிருந்தபடியே படித்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தொலைதூரக் கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என்று அழகப்பா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி அழகப்பா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 78 வகையான இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் பயில http://alagappauniversity.ac.in இணையதளத்தில் செப்டம்பர் […]
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள் தொலைதூர கல்வி மூலமாக படித்து தேர்வு எழுதி வருகின்றனர். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியிலும் படிக்கலாம். இதற்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.indeunom.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.