மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளித்ததால் ஒரே நாளில் 20,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை சார்பாக நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்திற்கு உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு நேற்று முன் தினம் ஒரு நாள் காலை 8 மணி […]
Tag: தொல்லியல் துறை
உலக பாரம்பரிய வாரம் இன்று நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இந்நிலையில் சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்களை பார்வையிட இன்று(நவம்பர் 19) சுற்றுலா பயணிகளுக்கு இலவசம் என புராதன தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதேபோல மதுரையின் பிரசித்தி பெற்ற […]
தமிழகத் தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் கீழடி, அகரம், கொந்தகையில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் 9, அகரத்தில் 6, கொந்தகையில் 4 என மொத்தம் 19 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதில் கீழடியில் ஒரு உறை கிணறும், அகரத்தில் 4 உறைக்கிணறுகளும் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அகரம் தளத்தில் சரிந்த நிலையில் இரண்டு அடுக்குகள் மட்டுமே வெளிப்பட்டுள்ள நிலையில் தற்போது 9 அடுக்குகள் வரை வெளிப்பட்டுள்ளது. […]
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்து கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமாரிடம் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் அந்த பகுதியில் சிறிய அளவில் மேற்கூரை அமைத்து சிவலிங்கத்தை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இது குறித்து அறிந்த தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு […]
தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் பண்டைய கால யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது 7-வது அகழாய்வு குழியில் தோண்டியபோது பழங்காலத்தில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. இதனை பார்க்கும்போது பண்டைய காலத்தில் யானை தந்தங்களை வைத்து ஆபரணங்கள் போன்ற பொருட்கள் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுடுமண்ணால் செய்யப்பட ஏராளமான அகல்விளக்குகள் கிடைத்துள்ளது. […]
கோயில் நகரமான மதுரை, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்கள் தொல்லியல் சுவடுகளை சுமக்கும் தொன்மையின் சிகரமாக விளங்குகிறது. இந்த பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கவும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் உலகம் முழுவதும் இன்று பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இந்த உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதான சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக சுற்றி பார்க்க தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
மாமல்லபுரம் பிரதான சின்னங்களை சுற்றி பார்க்க முதியோர்களுக்கு பேட்டரி வாகனம் இயக்கப்பட 2020ல் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள பிரதான சின்னங்களான கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, பஞ்ச ரதம் பகுதிகளை முதியோர்கள் மாற்றுதிறனாளிகள் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் வாகனம் இயங்க 2020 தொல்லியல் துறை முடிவு செய்திருக்கிறது.மேலும் சர்வதேச சுற்றுலா “ஐகானிக்” நகரமாக மாமல்லபுரத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி “ரெனால்ட் நிசான்” கார் நிறுவனம் […]
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆய்வு பணிகள் இன்று துவங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில், கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகலாய்வு பணிகள் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த 1903,1904ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழாய்வு பணி நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2004- 2005 ஆம் ஆண்டுகளில் சத்தியமூர்த்தி குழுவினர் அகலாய்வு பணியானது 600 சதுர மீட்டர் அளவில் நடைபெற்றது. அதில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு,வெண்கலப் பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 17 […]
தொல்லியல் முதுநிலை பட்டப்படிப்பில்(PG Diploma in Archaeology) சேர விரும்புவர்கள் வரும் 16ம் தேதி வரை http://tnarch.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையில் பல்வேறு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கு தமிழ் மொழியைப் புறக்கணித்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி முறையிடப்பட்டதை தொடர்ந்து அவசர வழக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் திரு அழகுமணி என்பவர் நேற்று முறையிட்டார். மத்திய அரசின் தொல்லியல் துறையின் தொல்லியல் நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேடர் நொய்டாவில் இயங்கி வருவதாகவும், இந்நிறுவனம் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு […]
பட்டய படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தையடுத்து மத்திய அரசு தமிழ் மொழியினை பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தற்போது சேர்த்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் மத்திய அரசின் தொல்லியல் துறை கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரியில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டுகாலம் முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஆனால் அக்கல்லூரியில் தமிழ் மொழி தவிர்த்து வேறு சில மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் […]
கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகின்றன. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், மதுரை மாவட்ட உதவி இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அகழாய்வின் போது பானை ஓடுகள், உறைகிணறு, அடுப்பு போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விலங்கின் எலும்பு ஒன்று கண்டறியப்பட்டது. முழு உருவத்தோடு உள்ள அந்த எலும்பு எந்தவகையான விலங்கு […]
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,46,628 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் சில தளர்வுகள் வழங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே வரும் 8ம் […]
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் தமிழக அரசால் முதன் முறையாக அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியது. முதற்கட்ட அகழாய்வு பணிக்காக சிவக்களைக்கு ரூ.32 லட்சம், ஆதிச்சநல்லூருக்கு ரூ.26 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே 5 முறை மத்திய தொல்லியல் துறை மற்றும் வெளிநாட்டினரால் ஆய்வு நடத்தப்பட்டது. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட கீழடி அகழாய்வு பணிகள் கடத்த வாரம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வுக்கான முதற்கட்ட பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் […]
உலக பாரம்பரிய தினத்தையொட்டி இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) செங்கோட்டைக்கு அருகே மண் விளக்குகளை ஏற்றி வைத்தது. பாரம்பரிய சின்னங்களை நினைவுகூரும் வகையில் இந்திய வரைபடத்தை விளக்குகளால் ஒளிர வைத்து பிரமிக்க செய்துள்ளது. நினைவு சின்னங்களுக்கும், புராதன இடங்களுக்கான உலக பாரம்பரிய தினம் ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டம் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது. 1982 […]