இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதான நளினி, முருகன் உட்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இவர்கள் 30 வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, தமிழக மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் […]
Tag: தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி தொல். திருமாவளவன் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் நினைவு நாளில் அவருடைய திருவுருவப்பட வைத்திருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இதனால் எம்பி பதவியில் இருந்து தொல் திருமாவளவனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தற்போது வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தடை […]
தமிழகம் முழுதும் நேற்று மாலை நடந்த சமூக நல்லிணக்க மனிதசங்கிலி அறப்போரில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்யும் பிரிவினைவாதிகளை இங்கு ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னெடுப்பால் தமிழகம் முழுதும் நேற்று இந்த பேரணி நடந்தது. இவற்றில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 26 கட்சிகள் மற்றும் 44 அமைப்புகள் சார்பாக […]
இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியான இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவருடைய மணிமண்டபத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். அதன்பின் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, சமூக புறக்கணிப்பு என்பது மிகப்பெரிய கொடுமை. பள்ளிக் குழந்தைகள் மீது ஜாதி வெறியாட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு ஆர்எஸ்எஸ் பாஜக போன்றவற்றை அகில இந்திய அளவில் தனிமை படுத்துவதற்காக சனாதான சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்ற பெயரில் […]
ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இது பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்கிறோம் என கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை […]
உள்ளாட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் பொறுப்புகளுக்கு இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்திருக்கிறார். சென்னை உட்பட மூன்று நகராட்சிகளை தனித்தொகுதிகளாக மற்றும் பெண்களுக்கு தனியாக 11 மாநகராட்சிகளை ஒதுக்கிய தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி கூறியிருக்கிறார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இதுபற்றி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், சென்னை ஆவடி […]
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வீடியோ தொடர்பாக கட்சி செய்தி தொடர்பாளர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். முழங்காலளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலி போட்டு தம்பிகள் உதவுகிறார்கள் இதுகூட பொறுக்கமுடியாத வன்மத்தர்களும், அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள் என்று வன்னிஅரசு கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று திடீரென ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீட்டில் இருந்து வெளியே வருகிறார். அப்பொழுது முழங்கால் அளவு தண்ணீர் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]
ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்த நடிகர் சூர்யாவிற்கு தொல் திருமாவளவன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சமூக மாற்றங்களுக்கு மிகப் பெரும் உந்துதலாக ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று ஜெய் பீம் திரைப்படம் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிக்கவும், நடிக்கவும் துணிந்து முன் வந்ததன் மூலம் தனது சமூகப் பொறுப்புணர்வையும் முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள ‘கலை நாயகன்’ சூர்யாவையும் அதனை உயிர்ப்புடன் படமாக்கம் செய்த ஞான […]
நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக அறிவித்து தனிக்கொடியை அறிவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன் மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட அந்நாளை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மாநிலம் பிறந்தநாள் எனக் கொண்டாடி வருகின்றனர்.தனி மாநில கொடியை கர்நாடகா அறிவித்து நீண்ட காலமாக கொண்டாடி வருகிறது. அதே போன்று தமிழ்நாடு மக்களும் அந்நாளை கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை கைப்பற்றி உள்ளது. ஆனால் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதனை அடுத்து திமுகவின் வெற்றி குறித்து இபிஎஸ்- ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தை திமுக தங்களுடைய கைப்பாவையாக மாற்றி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவ்வாறு அவர்களின் அறிக்கையை பார்க்கும் பொழுது கடந்த காலங்களில் அதிமுக அப்படிதான் வெற்றி பெற்றதா? என்று கேள்வி எழுப்புகிறது. அதிமுகவில் சரியான தலைமை கிடையாது. […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “பல்வேறு நிகழ்ச்சிகள் இரட்டைமலை ஸ்ரீநிவாசன் நினைவாக நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய இளைஞர்களிடம் அவரது வாழ்க்கை நடைமுறைகளை பற்றி நாம் எடுத்துரைக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் நீட் தேர்வால் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இத்தேர்வால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அனிதா முதல் சௌந்தர்யா என நீண்டு கொண்டே வருகிறது. இதனால் பல […]
மேட்டூர் அருகே உள்ள கூழியுரைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன் தனது பள்ளிப்படிப்பை 2019ஆம் வருடம் முடித்த நிலையில் இரண்டு முறை நீட் தேர்வை எழுதி இருக்கிறார். அந்த இரண்டு முறையும் அவர் தோல்வியடைந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார். இருப்பினும் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து […]
கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமூகம் அணி திரண்டு இவற்றுக்கு எதிராகப் போராட வேண்டுமென தொல் திருமாவளவன் கூறியுள்ளார். காசா பகுதியில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்த தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 35 பேர் பலியாகினர். அதுமட்டுமில்லாமல் 50க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் அமைப்பினர் அனுப்பியதாக ஹமாஸ் இயக்கத்தினர் […]
மணல் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விசிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவளத்தில் தேர்தலுக்கு பின்பு இரட்டைக் கொலை நடைபெற்றது. குறிப்பாக கோவளத்தில் உள்ள அதிமுக பிரமுகர் ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளரை அவர்களது ஊருக்குள் இளைஞர்கள் அனுமதிக்கவில்லை. இந்த முன்விரோதம் காரணமாக இரண்டு நாட்களுக்கு […]
சர்ச்சையாக பேசுவதை தான் திருமாவளவன் கொள்கையாக வைத்துள்ளார் என பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது பாஜகவின் தலைமை ஆணையிட்டால் நான் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். அப்போது ஒரு அப்பாவுக்கு பிறந்த விநாயகர் ஹிந்தி கடவுள் முருகன் தமிழ் கடவுளா என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் திருமாவளவன் பேசியது குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் […]
ரஜினி அரசியலுக்கு வந்து மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் 2017 ஆம் வருடத்திலிருந்து அரசியலில் ரஜினி களமிறங்க இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் இதுவரை கட்சி தொடங்குவது பற்றியும் அரசியலில் இறங்க போவது பற்றியும் ரஜினி தரப்பில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதனால் உண்மையில் அவர் அரசியலுக்கு வருவாரா என்பது குழப்பமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரஜினி அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து இருப்பதால் கட்சி தொடங்க […]
மனுதர்மத்தை தடைசெய்ய வலியுறுத்தி வி.சி.க ஆர்ப்பாட்டம். பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் நூலை தடை செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் விடுதலை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு தொல் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சமீபத்தில் இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராகவும், திருமாவளவன் எதிராகவும் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் தற்போது திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து மத பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை […]
தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி, ரவிக்குமார் எம்பி ஆகியோர் வீட்டில் இருந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியரசும் அவரது வீட்டில் இருந்து ஆர்ப்பாட்டம் […]
ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் எடுக்கப்போகும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி கேட்டுள்ளார் உலகையே அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அந்த உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதற்குப் பிறகு மத்திய அரசு என்ன செய்யும், என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியப் […]
கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி– செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் 5 நாட்களாகியும் இளமதி எங்கே இருக்கிறார் […]