திருவெற்றியூர் கடற்கரையில் மாயமான நான்கு பேரை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மணலி அருகே அமைந்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனர் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த நிறுவன ஒப்பந்ததாரரிடம் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் நேற்று […]
Tag: தொழிலாளர்கள்
கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினமும் ரூ.437 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஊதிய பாக்கிய வழங்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சி.ஐ.டி.யு. […]
தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பாசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் 3 மெஸ் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள சமையலறை ஒன்றில் தொழிலாளர்கள் சிலர் சாவகாசமாக சோப்பு தேய்த்து குளித்துள்ளனர். இதனைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அதனை தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பார்த்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உணவு சாப்பிட்ட […]
கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கொள்கை விளக்கம் குறித்து அமைச்சர் சி வி கணேசன் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அப்போது பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் “தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக […]
அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் கட்டுவதற்கு, அலுவலகங்களில் பணிபுரியும் வேலையாட்கள் என்று தினக்கூலி தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் அவர்களுக்கு கூலி தொகையை உயர்த்துவதற்கு ஜம்மு-காஷ்மீர் அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இது அனைத்து அரசுத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அரசு துறைகளில் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 225 ரூபாயிலிருந்து […]
ஹைதராபாத்தில் நடைபாதையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் 4 பேர் கார் மோதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலம் கரீம் நகர் பகுதிக்கு அருகே உள்ள காமன் சந்திப்பு பகுதியில் தொழிலாளர்கள் சிலர் வேலை பார்த்துவிட்டு நடைபாதை பகுதியில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று நடைபாதையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் மீது மோதியுள்ளது. இதில் 4 தொழிலாளர்கள் உடல் சிதைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தை மாதம் முதல் நாள் அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை தொடர்ந்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும். பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகையும் கொண்டாடப்படும். இப்பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் […]
இந்தியாவில் மாதச்சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்பு நிதியை கொண்டுள்ளனர். இந்த சேமிப்பு நிதியானது அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியமாகவோ அல்லது மொத்தமாகவோ அவர்களிடம் வழங்கப்படுகிறது. தற்போது ஊழியர்கள் வைப்பு நிதி ஆணையம் PF கணக்கில் பல்வேறு வழிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதில் முதலாவதாக PF கணக்கின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த 30ம் தேதியில் இருந்து […]
கனடாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை என்ற அறிவிப்பை CFIB பரிந்துரை செய்துள்ளது. கனடாவில் கொரோனா பெருந்தொற்றால் தொழிலாளர்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. மேலும் தனி தொழில்களுக்கான கனேடிய கூட்டமைப்பு ( The Canadian Federation of Independent Business – CFIB ) தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கனடாவில் சிறு தொழில்களும் பாதிக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளது. எனவே இந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை தீர்ப்பதற்கு ஊதியத்தை உயர்த்துவது போதுமான ஒன்றாக இருக்காது என்று கூறும் […]
நாகலாந்தில் தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 13 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகாலாந்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து வேலை முடிந்து அவர்கள் ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த மாவட்டத்தில் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங்ஆங் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் தாக்குதல் நடத்த […]
ஸ்விட்சர்லாந்தில் பணிபுரியும் பணியாளர்களில் மூன்றில் ஒருவர் 50 வயதை கடந்தவர் என்று பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது. பெடரல் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, 50 லிருந்து 64 வயது வரை உள்ள நபர்களின் வேலையின்மை 25 விகிதம் இருக்கிறது. கடந்த 2020-ஆம் வருடத்தில் 50 வயதுக்கு அதிகமான பணியாளர்கள் சுமார் 1.65 மில்லியன் பேர் நாட்டில் வசித்து வருகிறார்கள். இது சுவிட்சர்லாந்தில் மொத்தமாக உழைக்கும் மக்கள் தொகையில் 33.5% என்று கூறப்பட்டுள்ளது. […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு 3,000 மற்றும் 1,000 என்ற பரிசு கூப்பன் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ. 3000 மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று கூறியுள்ளார் . மேலும் புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேட்டி, சேலை வழங்கப்படுவது […]
சென்னை ஆலையில் போர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் பெரிய கார் உற்பத்தி புதிய நிறுவனங்களில் ஒன்று போர்டு நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலும், சென்னையில் உள்ள மரமலை நகரிலும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு எக்கோ ஸ்போர்ட்ஸ் எண்டவர் பிகோ மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்பார்த்த அளவு விற்பனைகள் இல்லாத காரணத்தினால், கார் உற்பத்தியை நிறுத்தி விட்டு இந்தியாவில் இருந்து […]
ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊராட்சிக்கோட்டையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய ஒப்பந்த அடிப்படியில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதில் நீர்மின் உற்பத்தி வட்டத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்களை வேலை துண்டிப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் மின் வாரியத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 412 ரூபாய் கூலியை பிடித்தம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து […]
ஜூன் 12, 2002 ஆம் ஆண்டு முதலாளித்துவ சந்தை போட்டியின் விளைவால் மூன்றாம் உலக நாடுகளின் மனித வளம் மிகக் கொடூரமாக உறிஞ்சப்படுவது அடையாளமாக உள்ள குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள நாள், குழந்தை தொழிலாளர் முறைக்கு அடிப்படையாக எது உள்ளது என்பதை அதை ஒரு நாள் அடையாள தினமாக மட்டும் சுருக்கி இருப்பது வருந்தத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம். இந்நிலையில் குழந்தை […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த 16 தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு பாங்கிஷாப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்போது ஆம்பூர் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் […]
அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ. 2000 பணமும், சிறப்பு உணவு தொகுப்பும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு முதல்வராக பதவியேற்றவுடன் பல நல்ல திட்டங்களை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் கடந்த மே 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தினக் கூலிகள், ஆட்டோ -டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள்,ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள் மற்றும் முடி திருத்துவோர் உள்ளிட்டவர்களுக்கு உடனடியாக […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சன்னிலியோன் உணவு வழங்கி உதவி செய்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பல பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வேலை இழந்தவர்கள் என பலருக்கும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பிஎம் கேர்க்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்தியாவில் மாநிலம் விட்டு […]
கேரளாவில் பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ள காரணத்தினால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச உணவு வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என்று அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு தினசரி தொற்று […]
தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் குடும்பநல நிதி உதவி வழங்கப்படும் […]
மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையில் உறுப்பினராக உள்ள நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படும் என்று இபிஎஸ் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. உழைப்பாளர் தினமான இன்று அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழ்நாடு சட்டமன்ற […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி தாங்கள் தங்கியுள்ள இடத்திலேயே இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி […]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் உப்பு உற்பத்தி 9 ஆயிரம் ஏக்கரில் நடைபெறுகிறது. இந்த தொழிலில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வருடம் மழைக்காலம் முடிந்தவுடன் உப்பு பாத்திகள் சரி செய்யப்பட்டு உற்பத்தி நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் பகுதியில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் உப்பு […]
சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்களின் மீது தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், கட்டுமான நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகிய தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கவில்லை என்றால் அந்த நிறுவனங்கள் மீது குற்றவியல் […]
அசாமில் 7.47 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கணக்குகளில் அசாம் சா உதயன் தன் புராஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.3000 டெபாசிட் செய்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டு அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாயை இரண்டு கட்டங்களாக டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இந்த ஆண்டு வெளியான 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் தேயிலைத் தொழிலாளர்களின் நலனுக்காக ரூ . 1,000 கோடி ஒதுக்கீடு […]
சீனாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷான்டோங் மாகாணத்தில் யன்டாய் நகரில் குவிக்சியா என்ற பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. கடந்த வாரம் அந்த சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் சுரங்க பணியில் இருந்த 22 தொழிலாளர்கள் அதில் சிக்கி கொண்டனர். அவர்களை தொடர்பு கொள்வதற்கு எந்தவித வாய்ப்புகளும் இல்லை என்று அலுவலர்கள் தெரிவித்தனர். சிக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்பதற்காக 300க்கும் […]
இந்தியாவின் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. போறவளே போறவளே கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விதிகள் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான தகவல்களைப் பெறவும், புகார் தெரிவிக்கவும், சந்தேகங்களை கேட்கவும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சூழலில் பிஎப் சந்தாதாரர்களுக்கு தடையற்ற சேவை வழங்க வாட்ஸ்அப் மூலம் தொடங்க முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து சந்தாதாரர்களை நேரடியாக அணுகி பிரச்சினைகளை தீர்க்க முடியும் என தொழிலாளர் அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திற்கு உள்ள 138 மண்டல அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் உதவி மையம் […]
நிரந்தரம் இல்லா வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வேண்டுமென தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். பணி நிரந்தரம் இல்லாமல் வேலை பார்க்கும் மின்வாரிய தொழிலாளர்களை பணியை நிரந்தரமாக்க, தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சென்ற 15 வருடங்களாக வேலை பார்த்து வரும் 5,000 பேரையும் வேலையில் நிரந்தரம் செய்திட வேண்டும். மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி கூலி […]
நெல்லையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திரையரங்கு தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தலங்களுக்கு அனுமதி அளித்த அரசு திரையரங்குகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்கு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றார்கள். தினசரி உணவிற்கே கஷ்டப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் அரசு தங்களுக்கு உரிய […]
லாபகரத்தில் இயங்கும் ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசை கண்டித்து திருவொற்றியூரில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது 55 வயதுடைய தொழிலாளர்களுக்கு கட்டாயம் பணி ஓய்வு வழங்குவதை கைவிட வேண்டும். ரயில்வே வழித்தடங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர். இதனிடையே மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை 2020 திரும்பிப் பெற வலியுறுத்தியும் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் திட்டத்தை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் வடிக்கும் தொழில் மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது கொடுக்கப்பட்ட தளர்வுகளால் 50 சதவீதம் பணியாளர்களுடன் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளான கோதை ஆறு, குற்றியாறு, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ரப்பர் பால் […]
இந்திய தொழிலாளர்கள் ஐந்து மாதங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணத்தால் உலகம் முழுவதும் இருக்கின்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பணியை நிறுத்தியுள்ளன. அதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைப் பார்க்க சென்றிருந்த இந்திய தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி இருக்கின்றனர். இத்தகைய நிலையில் குவைத்திற்கு வேலை பார்க்கச் சென்ற தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார், ஒடிசா போன்ற பல்வேறு […]
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா என்ற பகுதியில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதில், 24 பேர் உயிரிழந்துள்ளார். 15 பேர் மிகவும் மோசமாக படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு […]
VandeBharathMission இன் கீழ் 23 விமானங்கள் மூலம் சுமார் 4000 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இதுவரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 4,000 இந்தியர்கள் 23 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேபோல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 468 சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 101 […]
இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் மாநிங்களில் உள்ள புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.தமிழக அரசிடம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கவேண்டுமென்று ஏற்கனவே பதிவு செய்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ அனுப்பி வைக்கக் கூடிய நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ச்சி மேற்கொள்ளப்பட்டு […]
மகாரஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குப்வாட் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிமாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு […]
கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்து கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 18 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்ததாக அம்மாவட்ட டி.எஸ்.பி உமகாந்த் சவுத்ரி கூறியுள்ளார். தற்போது லாரி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், லாரியின் கலவையில் தொடரில் ஒளிந்திருந்தவர்கள் மற்றும் டிரைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனவால் 11,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வீரியமாக பரவ […]
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் தங்களது சொந்த மாநிலத்திற்கு அழைத்துவர மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் […]
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்தஊருக்கு அனுப்பும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் மாநிலம் விட்டு மாநிலம் வேலை செய்யக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு நடைப் பயணம் மேற்கொள்கிறார்கள். இது நாடு முழுவதும் நிகழ்ந்தது. எனவே அந்தந்த மாநில அரசாங்கம் அவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள வேண்டும், அவர்களை பத்திரமாக வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தன. இதில் குழந்தைகளும் […]
உலக தொழிலாளர் தினம் – வரலாறு
பல நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டுக் கிடந்த தொழிலாளர் வர்க்கம் மறுக்கப்படும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருந்தது என்பதே உண்மை. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். முதன்முதலாக 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10 மணி நேர வேலை கேட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. உறங்குவதாய் எண்ணப்பட்ட தொழிலாளர்களின் உரிமை குரல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலித்தது. இம்முறை தொழிலாளர்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. அதனால் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் சொந்த மாநிலத்துக்கு செல்லக்கோரி போராடிய தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் 300 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரி சாலைகளில் இறங்கி, அங்கு இருக்கக்கூடிய பொருட்கள், கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே போல டெல்லியில் உள்ள சில முகாம்களில் தொழிலாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 2000க்கும் […]
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்சநீதிமந்திற்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பேரழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரத் துறை நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் மாநில ஆலோசனைக் குழுவை […]
ராஜஸ்தானைச் சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச எல்லையில் உத்தரவிற்கு காத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் இந்தியாவையே முடக்கியுள்ளது. இதன் எதிரொலியால், நாடு முழுவதும் வருகின்ற 14ஆம் தேதிவரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதில் சிலர் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் டெல்லியில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 10,000 பேர் 500 கிலோ மீட்டர் […]
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்க உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்கு உசிலம்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வந்துள்ளனர். சுமார் 3 நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட இவர்கள் 134.6 கி.மீ கடந்து வந்து போடிமேட்டு எல்லை சோதனைச் சாவடியை நேற்று வந்தடைந்துள்ளனர். இந்த தொழிலார்கள் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் அருகே அமைந்துள்ள தொடுபுழா பகுதியில் அன்னாசிப்பழ பண்ணையில் கூலி தொழிலார்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் […]
உலகையே பீதியில் அச்சுறுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா தொற்று நோய் இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களில் பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளது. வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649. இதையடுத்து கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேருக்கும், கேரளாவில் 118 […]
கொரோனாவால் பிரிட்டனில் வேலையிழப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு 80 விழுக்காடு ஊதியத்தை அரசு வழங்கும் என்று நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் தீயாக பரவி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வரும் கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனிலும் தொழில்துறையும், பொருளாதாரமும் மிகவும் கடுமையாக […]