கொரோனா தொற்றால் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பேமெண்ட் பக்கம் திரும்பியுள்ளதால், சாலையோர கடைகளிலும் ஆன்லைன் பேமெண்ட் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இருப்பினும் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கும் சமயத்தில், கடை வியாபாரிகளிடமிருந்து இடைவெளியைப் பின்பற்றினாலும், பணம் செலுத்த அருகில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுமட்டுமின்றி பணத்தில் மூலமாகவும் கரோனா தொற்று பரவலாம் என்ற தகவலும் […]
Tag: தொழில்நுட்பம்
தெரியாத எண்கள்: வாட்சப்-ல் தெரியாத எண்களைப் பற்றி நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், அதைத் துண்டிக்கவும். இது டெலிமார்க்கெட்டர்கள் அல்லது மோசடி செய்பவர்கள் அதிகமாகி உள்ளனர். இந்தியா எண் இல்லாத போன் நம்பர்கள்: மேலும், ஏதேனும் வெளிநாட்டு அழைப்புகளைத் எடுப்பதற்கு முன் எண்களைப் பற்றி கவனமாக இருங்கள். இந்தியாவுக்கு வெளியே உங்களுக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் இல்லையென்றால், 91 முன்னொட்டு இல்லாத எண்களிலிருந்து அழைப்புகளை எடுக்க வேண்டாம் – […]
தொழில்நுட்ப கோளாறினால் 4 ரயில்கள் 20 மணி நேரம் ஒரே இடத்தில் நின்று அதற்கு மக்களிடம் நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது ஹென்டே நகரில் இருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட 4 ரயில்கள் திடீர் தொழில்நுட்ப கோளாறினால் போகும் வழியிலேயே நின்றுவிட்டது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உண்ண உணவு குடிக்கத் தண்ணீர் இன்றி சுவாசிக்க காற்று கூட இல்லாமல் அவதிப்பட்டு உள்ளனர். அதோடு ரயில் போக்குவரத்து பொதுப்போக்குவரத்து என்பதால் முக கவசத்துடன் பெரும் பாடுபட்டனர். முதலில் பயணிகளுக்கு தண்ணீரும் […]
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆபத்தான செயலிகளை நீக்கம் செய்யாவிட்டால் பணம் திருட்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலிகள் மூலம் நாம் அனைத்து வேலைகளையும் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் சில செயலிகள் மூலம் நம்முடைய மொபைல் போன்களுக்கோ அல்லது நமது பேங்க் அக்கவுண்டிலிருந்து பணத்தை திரட்டுவதற்கோ அதிக வாய்ப்புள்ள சில செயலிகள் நம்முடைய பிளே ஸ்டோரில் […]
இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்கும் நோக்கில் வரும் பன்டிகை காலத்தில் ஆப்பிள் நிறுவனம் பல அதிரடி ஆப்பர்களை வழங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. உலகிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிக ஸ்மார்ட்போன் பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், ஆப்பிள் நிறுவனத்தால் பெரிய அளவு இந்திய சந்தையை கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க ஆப்பிள் முயன்றுவருகிறது. மற்ற […]
டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை வாங்க ட்விட்டர் நிறுவனம் முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. சமீப காலங்களாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தடுப்பூசி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி, அதனை அமெரிக்கா மூடியது. ஆனால், சில நாள்களிலேயே சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்க தூதரகத்தை மூடியது. இத்தகைய தொடர் சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், […]
சிக்கல் மிகுந்த நிறுவனமாக வலம் வந்த டிக்டாக், தங்களின் படைப்புகளை ஃபேஸ்புக் நிறுவனம் திருடி, புதிய செயலிகளை வெளியிடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. டிக்டாக் மீது புகார்கள் வரத் தொடங்கியதை அடுத்து ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ‘ரீல்ஸ்’ எனும் குறும் காணொலி பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் ஒரு திருட்டு நிறுவனம் என டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் விமர்சித்துள்ளது.டிக்டாக் மீது புகார்கள் வரத் தொடங்கியதை அடுத்து ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ‘ரீல்ஸ்’ […]
அமேசான் சலுகை விற்பனை நாளில் சந்தைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் பல நிறுவனங்களின் கைபேசிகளுக்கு போட்டியாளராக வரவிருக்கிறது. இந்த கைபேசியின் மூலம் பயனர்கள் அனுபவிக்கயிருக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பதைக் காணலாம்… அமேசான் சலுகை விற்பனை தொடங்கும் நாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி சந்தைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் பல நிறுவனங்களின் கைபேசிகளுக்கு போட்டியாளராக வரவிருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்: திரை 6.5 அங்குல தொடுதிரை கொண்ட அமோல்ர்ட் திரை (91% காணும் அளவு) […]
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் புகைப்பட பகிர்வு தளமான ஸ்னாப்சாட், டிக்டாக் போன்ற குறு காணொலிகளை பகிரும் அம்சங்களை உட்புகுத்தி சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது. சில நாடுகளில் டிக்டாக் தடையை தொடர்ந்து அதுபோன்ற செயலியை உருவாக்குவதில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்புக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தங்கள் நிறுவன ஸ்னாப்சாட் செயலியில் டிக்டாக் தளத்தில் உள்ள அம்சங்களை உட்புகுத்த ஸ்னாப் நிறுவனம், வார்னர் ம்யூசிக் குரூப், யுனிவெர்சல் ம்யூசிக் பப்ளிஸிங் குரூப், மெர்லின் ஆகிய பெரும் […]
கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று (ஆக.3) வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் சார்பில் ஆண்டுதோறும் பிக்சல் ஸ்மார்ட்போன் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் கூகுள் பிக்சல் 4 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஏகப்பட்ட புதிய வசதிகளை கொண்டிருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகவில்லை. இந்நிலையில், பிக்சல் நிறுவனம் தற்போது பிக்சல் 4ஏ என்ற புதிய […]
பாப்அப் செல்பி கேமரா, 5000 mah பேட்டரி உள்ளிட்ட அட்டகாசமான பல வசதிகளுடன் ’மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்’ என்ற புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்கள் வெளியீடுகளைத் தள்ளி வைத்தனர். தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மொபைல் நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. அதன்படி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த ’மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ்’ ஸ்மர்ட்போன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மோட்டோரோலா […]
தடை செய்யப்படுமா டிக் டாக் செயலி ? கடந்த சில நாட்களாகவே #BANTIKTOK, #TIKTOKvsYOUTUBE இந்த மாதிரி ஹேஷ்டாக்குகள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகிக்கொண்டே இருந்தது. அதனைத் தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர்லயும் டிக் டாக் செயலின் நட்சத்திர மதிப்பீடு 4.5திலிருந்து தற்போது 1.4 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. எதனால தற்போது டிக்டாக் இந்த பிரச்சனையை சந்தித்து இருக்கு அப்படினு தான் பார்க்க இருக்கிறோம் இந்த தொகுப்புல. இது நாட்டுக்கு முக்கியமான விஷயமாக நீங்க நினைப்பீங்கனு […]
வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் யூடியூப்பை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த புதிய வசதிகளை யூடியூப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் இணைய பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக யூடியூப், நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்டிரீமிங் தளங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. பயனாளர்கள் நீண்ட நேரம் ஸ்டிரீமிங் தளங்களில் தங்கள் நேரத்தைச் செலவழிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த யூடியூப் நிறுவனம், தற்போது பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. ‘Take a […]
ட்விட்டர் ஒரு புதிய அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது. பயனர்கள் தங்கள் உரையாடல்களில் யார் பங்கேற்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய இது உதவுகிறது. உங்கள் கைபேசியில் ட்விட்டர் பயன்பாட்டைத் திறந்தால், பிறர் உங்கள் ட்வீட்டுகளுக்குப் பதிலளிக்க முடியுமா, இல்லையா என்பதை இதன்மூலம் நீங்கள் தேர்வுசெய்ய முடியும். பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையில்லாத பின்னூட்டங்களைத் தடுக்க ட்விட்டர் புதிய அம்சத்தை உருவாக்கி சோதனை செய்துவருகிறது. என்னென்ன மாற்றங்கள் பயனர்களுக்குக் கிடைக்கும்: இதன் மூலம்; (அனைவரும், நான் தொடருபவர்கள், நான் சுட்டிக்காட்டிய கணக்குகள்) […]
மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த புதிய மோட்டோ ஜி 8 பவர் லைட் (Moto G8 Power Lite) ஸ்மார்ட்போன் மிரட்டலான படக்கருவிகளுடனும், அம்சத்துடனும், பெரிய பேட்டரி பேக்கப் உடனும் இந்தியாவின் நடுத்தரப் பயனர்களுக்கான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவாவின் கிளை நிறுவனமான மோட்டோரோலா, 5000mAh மின்கலத் திறன், மூன்று பின்புற படக்கருவிகள் உடன் தனது புதிய மோடோ ஜி8 பவர் லைட் எனும் திறன்பேசியை ரூ.8,999 விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ராயல் நீலம், ஆர்க்டிக் நீலம் […]
எக்ஸ்போஷர் நோட்டிஃபிகேஷன் சிஸ்டம் அல்லது நோய்த் தொற்று உள்ளவர்களிடத்தில் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை கூகுள், ஆப்பிள் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்து வெளியிட்டுள்ளன. இது செயலியாக செயல்படாமல், இயங்குதளத்தில் ஒன்றி, சுகாதார அமைப்புகளின் தரவுகளுக்கு ஏற்றவாறு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் இன்க் மற்றும் ஆல்பாபெட் இன்க் கூகுள் இணைந்து உருவாக்கும் புதிய தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பத்தை கரோனா தொற்று பரவலை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை 22 நாடுகளில் செயல்படுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இது […]
வாட்ஸ்ஆப் அட்மின் களே ஜாக்கிரதை நீங்கள் கைதாகலாம் என்று தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீங்கள் வாட்ஸ் ஆப் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பெண்கள் குறித்த ஆபாச தகவல் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம். முதல்ல வாட்ஸ்ஆப் அட்மினை தான் போலீஸ் கைது செய்யும். நான் வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர் தான், எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வாட்ஸ்ஆப் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள். உறுப்பினர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்படும் என்று […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்ஸ்டாகிராம் மூலம் பயனர்களுக்கு உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது ஒன்றே தீர்வாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். பொதுமக்களில் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் கூட சிக்கல் எழுந்துள்ளதால், இன்ஸ்டாகிராம் தங்களின் பயனாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் பிரத்தியேக வசதியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த […]
தொலைக்காட்சி அட்டைப்பெட்டியை மதிப்புமிக்க பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் சாம்சங் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது சாம்சங் நிறுவனத்தின் புதிய முயற்சியாக தொலைக்காட்சியை வைத்து அனுப்பும் அட்டைப் பெட்டிகளை மதிப்புமிக்க பொருளாக மாற்றிக் கொள்ளும்படி புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி வைத்திருக்கும் பெட்டியை கொண்டு புத்தக அறைகள் பூனை கூடுகள், நாளிதழ் அடுக்குகள் போன்றவற்றை உருவாக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி பெட்டியில் இருக்கும் க்யூ ஆர் குறியீட்டை உபயோகித்து அட்டைப்பெட்டியில் எந்தமாதிரியான அமைப்பை உருவாக்க முடியும் என்பதை அறிந்து […]
கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. கொரோனா வைரஸை சமாளிப்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அதுதொடர்பான வதந்திகளை சமாளிப்பது என மத்திய மாநில அரசு பேரும் போராட்டங்களை நடத்தி வருகின்றது. பொதுமக்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு எத்தனையோ நடவடிக்கை எடுத்தாலும், அதையும் மீறி தொடர்ச்சியாக தேவையில்லாத வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் தான் இந்த மாதிரியான […]
கொரோனா குறித்து வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் ட்வீட்டர் நிறுவனம் அதிரடி முடியை எடுத்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கபடாத நிலையில் ஒவ்வொரு நாட்டின் ஆய்வாளர்களும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிற்கு இது தான் மருந்து. இதை நாம் […]