தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம், அந்த வகையில் பரந்தூரில் 2வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. […]
Tag: தொழில் வளர்ச்சி
தமிழக சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்னென்ன’ என்பது பற்றி கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல் அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீடுகள் பற்றியும் விளக்கி பேசினார். அவர் பேசி முடித்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தொழில் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. […]
இந்திய உற்பத்தி துறை வளர்ச்சியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 22.4% வளர்ச்சி அடைந்துள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று இருந்த நிலையில் நாட்டின் தொழில் உற்பத்தியில் சுமார் 18.7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது தொழில் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த ஆண்டு மார்ச் இறுதியில் தேசிய புள்ளியியல் அலுவலகம் தொழில் உற்பத்தி குறியீடு புள்ளிவிவரத்தில் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி துறை, […]