வாரசந்தையில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் முககவசம் அணியாமல் இருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் ஒவ்வொரு வாரமும் வாரச்சந்தை செயல்படுவது வழக்கம். இந்நிலையில் சந்தையில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் கம்பம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து […]
Tag: நகராட்சி அதிகாரிகள்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 7 தெருக்களை தகரத்தை கொண்டு அடைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி சார்பில் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் 2ஆம் அலையை தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கிருமிநாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்லில் ஒரே தெருவில் 10 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அதை சுற்றியுள்ள துறையூர் […]
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்ப்பதற்காக கொரோனா விதிமுறையை மீறி ஏராளமான மக்கள் குவிந்ததால் படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்பவர்களிடமும், முககவசம் அணியாமல் செல்பவர்களிடமும் அதிகாரிகள் அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வாளர்கள், திண்டுக்கல் […]