குடியிருப்பு பகுதியில் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் நகராட்சியின் 30 -வது வார்டுக்கு உட்பட்ட பகுதி அனிச்சம்பாளையம்.இந்தப் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் கல்யாணமண்டபம், மின்வாரிய அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அந்த பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கவுன்சிலர் […]
Tag: நகராட்சி அலுவலகம்
அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு அதிகாரி கருப்பையா தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் காவல்துறையினர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அலுவலகத்திற்கு சென்ற அதிகாரிகள் அலுவலகத்தின் நுழைவு வாயிலை இழுத்துப்பூட்டி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சுப்பையா, சுகாதார […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நகராட்சியில் ஆள்குறைப்பு என கூறி வேலையை விட்டு நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அறிவித்தபடி ஒரு நாள் ஊதியம் 424 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்தந்த பகுதிகளில் […]
மயிலாடுதுறையில் கழிவுநீர் தெருவில் விடப்படுவதை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இரட்டை காளியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவானது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது. இங்கு கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகராட்சி கழிப்பிட கட்டிட கழிவுநீர் மற்றும் வணிக நிறுவனங்கள் கழிவு நீர் ஆகியவை வந்து சேர்வதால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக […]