தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]
Tag: நகர்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நெருங்கி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பறக்கும் படை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இடுக்கியில் இருந்து அகமது சாலி என்பவர் ஓட்டி வந்த காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது […]
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே முதல் இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 3-வது வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம், வேலூர், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் […]
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் உத்தரவின் பேரில், விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் எங்கள் இயக்கத்தினர் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என வீண் வதந்தி பரப்பாதீர்கள் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கண்டிப்பாக போட்டியிடுகிறார்கள். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு;- 1. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தலாம். 2. குடியரசு தின அலங்கார ஊர்தி பேரணி முன்னரே […]
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டியிடும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அந்தந்த, மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை […]