அமெரிக்காவின் யார்க் நகரில் ஜனநாயக கட்சி நன்கொடையாளர்கள் மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றியுள்ளார். அதில் தற்போதைய சூழ்நிலையை ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனும் உலகம் அணு ஆயுத விளிம்பிலிருந்த காலகட்டதுடனும் அமெரிக்க ஜனாதிபதி ஒப்பிட்டு பேசியுள்ளார். தனது தோல்விக்கு பதில் அளிக்கும் விதமாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக புடின் வழங்கி வரும் அச்சுறுத்தல் 1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடியைப் போன்றது என அவர் கூறியுள்ளார். […]
Tag: நகைச்சுவை
நடிகை ராஷ்மிகா மந்தானா 2016 ஆம் வருடம் கிரிக் பார்ட்டி என்னும் படத்தின் மூலமாக கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர். தெலுங்கில் சலோ என்னும் படத்தின் மூலமாக 2018 ஆம் வருடம் அடியெடுத்து வைத்துள்ளார். அதன் பின் அதே வருடம் வெளியான கீதா கோவிந்தம் எனும் திரைப்படத்தின் மூலமாக அவர் இந்திய அளவில் புகழ்பெற்றுள்ளார். இதனை அடுத்து தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார். கடந்த வருடம் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா திரைப்படத்தில் […]
கணவர்களுக்கும் எனக்கும் ராசி இல்லை என்று நடிகை காயத்ரி நகைச்சுவையாக ட்விட் செய்துள்ளார். அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் அவரது கணவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டு விடும். சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அவரது கணவர் பாலினத்தை மாற்றிக் கொள்வார். தற்போது விக்ரம் படத்தில் அவரது கணவர் என்ன வேலை செய்வார் என்று அவருக்கே தெரியாது இந்த படங்களை சுட்டிக்காட்டிய அவர், கணவர்களுக்கும் எனக்கும் ராசியில்லை என்று ட்வீட் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள்பலரும் தங்களுடைய […]
தமிழ் சினிமாவில் பொய்யை அடிப்படையாக கொண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட 5 திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம். காதலா காதலா :- பிரபுதேவா, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “காதலா காதலா” திரைப்படத்தில் இருவரும் மாறி மாறி பொய் சொல்லி இருப்பார்கள். இந்த படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. மைக்கேல் மதன காமராஜன் :- இந்த படத்தில் கமல்ஹாசன் தீயணைப்பு வீரர் ராஜு, சமையல்காரன் காமேஸ்வரன், தொழிலதிபர் மதனகோபால், திருடன் மைக்கேல் […]
பீஸ்ட் படத்தில் நகைச்சுவை நிச்சயமாக இருக்கிறது என ஷைன் டாம் சாக்கோ கூறியிருக்கிறார். தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில், இந்த […]
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பேசியது வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இன்று விவாதத்தில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை பேசப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்தடை தான் ஏற்பட்டது என்று கூறினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் […]
பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று வெற்றி பெற்றதை அடுத்து வர்ணனையாளர் கேள்விக்கு எம்எஸ் தோனி நகைச்சுவையாக பதிலளித்தார். நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை அணி மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. . டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 106 ரன்கள் மட்டுமே அடித்தனர். பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 15.4 ஓவரில் 4 விக்கெட் […]
இனிமேல் நகைச்சுவைக்காக கூட லம்பாடி, சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். தமிழ் சினிமாவின் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்படும் லம்பாடி, சண்டாளன் உள்ளிட்ட வார்த்தைகள் ஜாதியை இழிவுபடுத்துவது ஆகும். தெரிந்து அந்த வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டாலும் அது சரியான செயல் அல்ல. தமிழகத்தில் தற்போது மருத்துவ படிப்பில் 7.5 உள் ஒதுக்கீட்டில் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பலர் மருத்துவ கலந்தாய்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதன்முறையாக ஒடுக்குமுறையை சந்தித்து வரும் லம்பாடி சமூகத்திலிருந்து ஒரு பெண் மருத்துவர் ஆகியுள்ளார். […]
வடிவேலுக்கு இம்சை அரசன் தெனாலிராமன் படம் போல் சந்தானத்திற்கு பிஸ்கோத் படம் அமையும் என்று இயக்குனர் கண்ணன் குறிப்பிட்டுள்ளார். நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் அடுத்த திரைப்படம் பிஸ்கோத். இத்திரைப்படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார். மேலும் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்குக்கு முன்னரே முடித்துவிட்டனர். இத்திரைப்படம் நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு 400 – வது படம். இப்படத்தின் திரைக்கதை 18ஆம் நூற்றாண்டு உட்பட மூன்று காலகட்டங்களில் நடப்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது. இக்கதையில் சந்தானம் ராஜசிம்மன் என்ற சரித்திர நாயகனாக நடித்துள்ளார். […]