மாணவிகளின் விடுதி சுவற்றில் ஒரு சிறுத்தை படுத்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக கல்லூரியின் அருகிலேயே ஒரு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கல்லூரிகள் மூடப்பட்ட காரணத்தினால் விடுதி வளாகத்தில் ஏராளமான புதர் மண்டி காணப்படுகின்றது. […]
Tag: நடமாட்டம்
திருப்பதியில் பக்த கோடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் வனவிலங்குகள் நடமாடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக திருப்பதியின் தரிசனத்திற்கு வரும் பக்த கோடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்த கோடிகள் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அதனால் ஏழுமலையான் கோவில் சார்ந்துள்ள பகுதிகளில் மட்டும் குறைந்த அளவில் பக்தர்கள் நடமாடி வருகின்றன. திருப்பதியின் முக்கிய பகுதிகளான பாபவிநாசம், ஆகாசகங்கை, ஜாபாலிதீர்த்தம், […]
இந்த உலகில் பல மர்மங்கள் உள்ளது. அத்தகைய ஒரு மர்மம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருக்கும் வரோஷா நகரம். ஒரு காலத்தில் கணிசமான மக்கள் வசித்து வந்த இந்த நகரத்தில், தற்போது யாரும் இல்லை. இதனால் இது பேய் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உயரமான கட்டிடங்கள் இருந்தாலும், யாரும் வசிக்கவில்லை. ஹோட்டல், குடியிருப்பு கட்டிடங்கள் முதல் நகரத்தில் உள்ள பார்கள் மற்றும் உணவுகள் வரை அனைத்தும் இடிபாடுகள் ஆக உள்ள நிலையில் […]