சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சுவாமிநாதன், சேகர் பாபு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பிரபாகர் ராஜா ஆகியோர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு செய்தியாளர் இடம் பேசிய சுவாமிநாதன், சுதந்திர போராட்ட தியாகி, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி இரட்டைமலை சீனிவாச சிலைக்கு முதல்வர் ஆணைகினங்க […]
Tag: நடராஜர் கோவில்
கடலூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் உள்ள நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் டிசம்பர் 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் கொடியேற்றம், 19ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்திற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் காரணமாக கனமழை பெய்து வருவதால் சிதம்பரம் நடராஜர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. வங்கக் கடலில் உருவாக்கிய புரெவி புயல், மன்னார் வளைகுடா பகுதியில் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 5.30 மணி அளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதுமே பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 […]
நடராஜர் கோவிலில் அதிசய நிகழ்வாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கோவிலில் அதிசயக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடந்தது. என்னவென்றால் இந்த கோவிலில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் மழை பெய்துள்ளது. அதுவும் குறிப்பாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளதால் பக்தர்கள் அதை பார்த்து வியப்படைந்துள்ளனர். இதையடுத்து […]