குன்னூர் அருகே பழங்குடியின மக்கள் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வருகின்ற நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட உலிக்கல் பேரூராட்சியில் குரங்குமேடு கிராமம் உள்ள நிலையில் சென்ற 25 வருடங்களாக வசித்து வரும் பழங்குடியின மக்கள் தேயிலை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், சாலை, குடிநீர் எந்த அடிப்படை வசதியும் இல்லை. […]
Tag: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் அன்று தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வருகின்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் குறைகளை மனுக்களில் எழுதி தந்துவிட்டு செல்வர். இதில் வாரத்திற்கு இரண்டு பேராவது மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் எடுத்து வந்து தீக்குளிக்க முயற்சி செய்கின்றார்கள். தீக்குளிக்க […]
திருமூர்த்தி அணை மற்றும் அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் எல்லைமீறி செல்வதால் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் உடுமலையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை இருக்கின்றது. இந்த அணை பகுதியில் சிறுவர் பூங்கா, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் ஆகியவை இருக்கின்றது. இங்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்நிலையில் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளி மாவட்டத்தில் உள்ளோரும் […]
நாகையில் பழுதான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாகை மாவட்டம் சேஷமூலை ஊராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி 30,000 கொள்ளளவு கொண்டது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியானது சில வருடங்களுக்கு முன்பு சேதமடைந்ததால் ரூ.30,800 செலவில் சீரமைக்கப்பட்டது. […]
சாலையோரம் கழிவுகள் கொட்டப்படுவதால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் நொய்யல் அருகே நடையனூரில் டீக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் இருக்கின்றன. மேலும் இந்த பகுதியில் திருமண மண்டபமும் இருக்கிறது. இந்நிலையில் வீடுகளில் சேரும் குப்பைகள், கடைகளில் சேரும் கழிவு பொருட்கள், திருமண மண்டபத்தில் மீதமாகும் உணவுகள் மற்றும் எச்சில் இலைகள் ஆகியவை இச்சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் சாலையோரம் கொட்டப்படும் உணவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக வருகின்றன. அப்போது […]