பெங்களுருவில் நேற்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சுமார் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். நேற்று பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளை ஹாட் […]
Tag: நடவடிக்கை
கொரோனா வைரஸிற்கு வல்லரசு நாடுகளே மிரண்டு போய் இருக்கும் நிலையில் அதிரடி நடவடிக்கைகளை பெண் தலைவர்கள் எடுத்துள்ளனர். ஆனால் பெண்களை பிரதமராக கொண்ட நாடுகள் துணிச்சலான முடிவுகளால் கட்டுக்குள் வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரசை ஆரம்பத்தில் புரளி என்றார். ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கைகளையும் அலட்சியப் படுத்தினார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனோவை அலட்சியமாகவே கருதினார். அவர் கொரோனோவால் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை நோயாளிகளுக்கு கை கொடுப்பதை நிறுத்த முடியாது என்று கூறினார். இப்படி அறிவியலை அலட்சியப்படுத்திய […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ” தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இனியும் காலதாமதம் செய்யமால் விரைவில் முடிவு செய்ய வேண்டும் முதலமைச்சர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதேபோல, கொரோனா நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு திமுக ஒத்துழைப்பு அளிக்கும். தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா […]
ஏப்ரல் 15ம் தேதி முதல் ரெயில்கள் இயக்கம் திட்டமில்லை என்று இந்திய ரெயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் அடிப்படையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 14ம் தேதி ஊரடங்கு முடிவுறும் என அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது. இதற்கிடையே வரக்கூடிய 15ம் தேதி முதல் இரயில்வே போக்குவரத்து இயக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகின. இதுமட்டுமின்றி “நான்கு மணி நேரத்திற்கு முன்னரே பயணிகள் அனைவரும் ரெயில் நிலையம் வந்துவிட வேண்டும் என்றும், […]
கொரோனா வைரஸ் லாக் டவுனின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறையினரைத் தாக்கும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மக்களை கண்காணிக்க ரோந்து பணிக்கு சென்ற காவலர்கள் […]
கொரோனா பரவும் அபாய பகுதியாக தமிழ்நாடு முழுவதும் அறிவிப்பு, நடவடிக்கை எடுக்க வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..!! நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரத் சட்டத்தில் 62 ஆவது பிரிவின் கீழ் பொது சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக கொரோனா அறிவிக்கப்பட்டதாகவும். 76 ஆவது பிரிவின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் எனவும் கூறப்பட்டுள்ளது. 1897ஆம் ஆண்டு கொள்ளை […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலுள்ள பிற வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற, மற்றும் சரக்கு ஏற்றி சென்ற […]
ஊரெல்லாம் வாசம் வீசும் மல்லிகை மலர் பெரும்பாலும் அவை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டும் மணக்க வைக்கவே இல்லை. இந்த நிலையில் கொரோனாவால் மலர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மல்லிகை விவசாயிகள் பெருத்த வேதனையில் முடங்கிப் போயுள்ளனர். செடியில் வாடி வதங்கி கிடக்கும் இந்த மலர்களை போலவே மதுரை மல்லிகை விவசாயிகள் வேதனையில் வாடி உள்ளனர். மல்லிகைக்கு பெயர்போன மதுரையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே மல்லிகைக்கு சீசன். இந்த […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலவர் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு என்பது அமலில் இருக்கிறது. இந்த நிலையில் ஏழை எளிய மக்களை கொரோனா தொற்றில் இருந்து விடுவிக்கவும், தமிழகத்தில் தீவிரமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதி மனமுவந்து தங்கள் பங்களிப்பினை பொதுமக்கள் அளிக்கலாம் […]
தமிழகத்தில் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி சுய ஊரடங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இன்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுய ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்தி குறிப்பாக வெளியிட்டுள்ளது. […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 தொட்டுள்ளது. இதுவரை 113 இந்தியர்களும், 24 வெளிநாட்டினரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 14 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 26 பேரும், கர்நாடகாவில் 11 பேரும் தெலுங்கானாவில் 5 பேரும் டெல்லியில் 8 பேரும் உத்தரபிரதேசத்தில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் கர்நாடகாவில் […]
அதிகவிலைக்கு முகக் கவசம் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க […]
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மெருக்கொண்டு வருகிறது. அதை கண்டு நடிகர் சித்தார்த் பாராட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் , செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர், அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறினார். இந்த வைரஸைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது […]
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் சொர்ணா சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். இந்த உத்தரவில் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இனி பணிநேரத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான அரசு […]
குஜராத்தில் பெண்களை நிர்வாணமாக்கி பரிசோதனை, தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி பணிகளுக்காக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் பட்ட பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து உடல் பரிசோதனை செய்தது பெரும் சர்ச்சையாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அழைக்கப்பட்ட 100 பெண்களை உடல் பரிசோதனைக்காக நிற்க வைத்து இருந்தனர். அப்போது அவர்களின் உடைகளை களைந்து நிர்வாணமாக பல மணி நேரம் நிற்க வைத்தது சர்ச்சையாகி உள்ளது. […]