பிரபல பாலிவுட் நடிகரை சுங்கவரி துறை அதிகாரிகள் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் நேற்று துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு தனி விமானத்தில் மும்பை திரும்பினார். இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்த ஷாருக்கான் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் உள்ளிட்ட சில பொருட்களை வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விசாரணை செய்துள்ளனர். […]
Tag: நடிகர்
குலசை தசரா விழா நிகழ்ச்சிகளில் திரைப்பட டிவி மற்றும் நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி கோரி கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குலசை தசரா நிகழ்ச்சிகளில் திரைப்பட டிவி மற்றும் நாடக நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கலாம். ஆனால் குலசை தசரா விழாவில் ஆபாச […]
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வேல்துருத்தியைச் சேர்ந்த தெலுங்கு பட நடிகர் குருசாமி, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று குருசாமி காலமானார். ஒன்றிய அரசுப்பணியை விட்டுவிட்டு நாடகத் துறையில் நுழைந்த குருசாமி, ‘ஆயுஷ்மான் பவா’ என்ற குறும்படத்தில் நடித்து பிரபலமானார். ெதாடர்ந்து மகரிஷி, மகேஷ் பாபு போன்ற படங்களில் நடித்தார். குருசாமியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கார்த்திக் நடித்த சுல்தான் திரைப்படத்தில் வரும் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் பிரபு. இவர்தான் வறுமையில் இருப்பதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது சுல்தான் படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. வேலை தேடி சென்றாலும் உருவத்தை காரணம் காட்டி வேலை கொடுக்க மறுக்கிறார்கள். வாடகைக்கு வீடு கூட கிடைக்கவில்லை. யாராவது எனக்கு வாய்ப்பு அளித்த உதவுங்கள் என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி […]
ஆன்லைன் ரம்மி விளம்பர விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நடிகர்களாகவேப் பார்த்து திருந்த வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ‘தமிழகத்தில் போதைப் பொருட்களை விற்பவர்கள் மீதும் […]
திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் உறுப்பினரான நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த தருணம் வரை, திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் நல்ல தொடர்பில் உள்ளனர். அவர்களில் 21 பேர் நேரடியாகவே எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என கூறியுள்ளார். இதனால் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மராட்டியத்தில் ஷிண்டே அணி சிவசேனாவில் இருந்து தனியாக பிரிந்து, தற்போது பா.ஜ.க. […]
தமிழில் யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நீது சந்திரா. விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை ,ஜெயம் ரவியின் ஆதி பகவான் உள்ளிட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் ஒரு முன்னணி தொழில்அதிபர் தனக்கு மனைவியானால் 25 லட்சம் தருவதாக கூறியதாக தெரிவித்தார். தேசிய விருது பெற்ற 11 படங்களில் பணியாற்றியுள்ளேன் .ஆனால் தன்னை இப்படி அழைக்கின்றனர். எனக்கு இப்போது வேலை இல்லை, […]
நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார். இந்திய திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70. சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 1952ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை பெற்றவராக விளங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல்வேறு […]
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணை நடிகர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு சிறுமியை மிரட்டி துணை நடிகர் நாச்சியப்பன் மற்றும் ஓட்டுநர் மணிகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி […]
பான்மசாலா விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக முன்னணி இந்தி நடிகர்கள் மீது சமீப காலங்களாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் தான் பான்மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் அக்ஷய் குமார் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார். இருந்தபோதிலும் நடிகர்கள் அக்ஷய் தேவ்கன், ஷாருக்கான் மீது தொடர்ந்து இந்த மாதியான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் கர்காவ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது தட்கன் என்னும் மாணவி இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அஜய்தேவ்கான் ஆகிய இருவருக்கும் […]
பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பாலிவுட் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விட்டதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முடிந்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
விஜய் சேதுபதியின் சீதக்காதி, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையைமுன்னிட்டு 2018ம் ஆண்டு வெளியானது. இப்படங்களுடன் கன்னட படமான KGF படமும் வெளியானது.முதலில் இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாத நிலையில் இந்த படத்தின் விமர்சனங்களினால் ரசிகர்கள் மெல்ல மெல்ல ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். படம் பார்த்த அனைவருக்கும் இந்த படம் பிடித்துப்போக நடிகர் யாஷை தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். ஒரு தமிழ் நடிகருக்கு எந்த […]
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொடுங்கலூர் அம்மன் கோவிலுக்கு நடிகர் சுரேஷ் கோபி வாள் மற்றும் சிலம்பு காணிக்கையாக வழங்கி உள்ளார். கேரளாவில் உள்ள கொடுங்கலூரில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகரும், பாரதிய ஜனதா மேல் சபை எம்.பி.யுமான சுரேஷ் கோபி அடிக்கடி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது இக்கோவிலுக்கு சென்ற நடிகர் சுரேஷ் கோபி அம்மனுக்கு வாளும், சிலம்பும் காணிக்கையாக வழங்கியுள்ளார். கொடுங்கலூர் கோவிலில் தரிசனம் […]
நடிகர் திலீப்பிடமிருந்து 11,000 வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடித்து வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த பிரபல நடிகை மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட நடிகையை அந்த கும்பல் காருக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இது தொடர்பாக வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் திலீப் மற்றும் நடிகையை கடத்தலுக்கு தலைவனாக செயல்பட்ட பல்சர் சோனி போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். […]
பிரபல மலையாள நடிகரான கைனகரி தங்கராஜ் காலமானார். கேரள மாநிலம், கொல்லம் அருகே கேரளத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகர். இவர் நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பிரேம்நசீர் நடித்த அனாப்பச்சன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் 35 படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலின் லூசிபர் மற்றும் இஷ்க், ஹோம் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்தார். இதுவே இவர் தமிழில் […]
நடிகர் வினய் பிரபல நடிகையை காதலித்து வருவதாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் வினய். இதனையடுத்து வினை மோதிவிளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் துப்பரிவாளன் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். அவரது உயரத்திற்கும், தோற்றத்திற்கும் வில்லன் வேடம் செய்த காரணத்தினால் தொடர்ந்து வில்லன் வேடத்தில் […]
நடிகர் தனுஷ் ரஜினிகாந்த் குடும்பத்தினரை மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்திருந்தனர். இருவரும் பிரிவை அறிவித்த நாளில் இருந்தே அவர்கள் பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தனுஸை இனி எழ விடாமல் செய்ய […]
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரிலுள்ள ஜீவா தெரு பகுதியில் ஜெயக்குமார்(40) என்பவர் வசித்து வந்தார். இவர் புதிதாக எடுக்கப்பட்டு வரும் “செங்குன்றம்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வந்தார். இந்நிலையில் தனது முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஜெயக்குமார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “செங்குன்றம்” படத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஜெயக்குமார், இரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனையில் […]
பயில்வான் ரங்கநாதன் மீது பெண்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதி விடுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் சினிமா பிரபலங்கள் போன்ற பெண்கள் பலர் குறித்து அவதூறான கருத்துக்களை இணையத்தில் பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது. எனவே இதுபோல் பேசும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
பெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறாகவும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் நடிகரும், இயக்குனருமான எஸ் வி சேகர் பதிவிட்டது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நடிகர் எஸ்வி சேகர் காவல்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளத் திரை உலகில் பிரபலமான நடிகர் சுரேஷ் கோபி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு மொத்தம் மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நிலம் வாங்கி தருவதாக சொல்லி, தொழிலதிபரிடம் ரூபாய் 97 லட்சம் மோசடி செய்ததாக சுரேஷ் கோபியின் இரண்டாவது சகோதரர் சுனில்கோபியை கோவை போலீசார் தூக்கி சிறையில் அடைத்துள்ளனர். அதாவது, சுனில் கோபி கோவை நவக்கரை பகுதியில் மயில்சாமி என்பவரது 4.52 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கியிருக்கிறார். அதற்கான […]
அஜித் தனது குடும்பத்தினருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது எடுத்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. சுட்டிக் குழந்தையாக பல படங்களில் நடிக்கத் தொடங்கிய ஷாலினி ஆனபின் ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் அஜீத், விஜய், பிரசாத் ஆகியோருடன் நடித்துள்ளார். ஷாலினி,அஜித்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது […]
ஆக்சன் கிங் அர்ஜூன் தனது மாமனாரான நடிகர் ராஜேஷை மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அர்ஜுன். தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து படங்களை இயக்குவதில் பிசியாக உள்ளார். இந்நிலையில் நடிகர் ராஜேஷ் என்பவர் கன்னட சினிமாவில் சுமார் 100 படங்களில் நடித்தவர். இவர்தான் நடிகர் அர்ஜூனின் மாமனார். அவர் உடல்நலக் […]
நடிகர் அஜித் நடித்த வலிமை படம் ஒரே நாளில் சென்னையில் மட்டும் வசூல் வேட்டையில் குவித்துள்ளது. அஜித் நடித்த படம் கடந்த 24-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். மேலும் முதல் காட்சியை பார்க்க அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்களும் கூட்டமாக தியேட்டர்களில் குவிந்தனர். மேலும் இப்படத்தில் வந்த ஸ்டண்ட் காட்சிகளை பார்த்து அனைவரும் பிரமித்துப் போய் விட்டனர். இந்நிலையில் முதல் நாள் வசூலில் சென்னையில் மட்டும் 1.82 கோடி வசூல் […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற நிறைய மொழி படங்களில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். இவர் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீபகாலமாக பிரகாஷ்ராஜ் அரசியல் மாற்றங்களை பற்றித் தீவிரமாக பேசி வருகிறார். அவ்வபோது பாஜக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திடீரென தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்-ஐ பிரகாஷ்ராஜ் சந்தித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க சந்திரசேகர் ராவ் அளிப்பதாகவும் இதற்காகவே […]
நடிகர் அஜித் ஆரம்ப காலத்தில் அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளகள் வறுமையில் இருக்கும் போது பாலிவுட் தயாரிப்பாளருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து வருவது அதிருப்தியை எற்படுத்தயுள்ளது. நடிகர் அஜித் என் வீடு என் கணவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதற்குப் பின்னர் 1993-ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகர் அஜித் இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். […]
சினிமா துறையில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள்அந்த மொழிகளில் சார்ந்தவர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து நடிப்பவர்களும் உள்ளார்கள். அந்தவகையில் தமிழ் திரைப் படங்களில் வில்லனாக, ஹீரோவாக மற்றும் குணசித்திர நடிகர்களாக பல நடிகர் நடிகைகள் வெளிநாடுகளிலிருந்து வந்து நடித்து வருகிறார்கள். 2001ஆம் ஆண்டு வெளிநாட்டு ஹீரோவாக நடிக்க வைத்து வெளிவந்த லிட்டில் ஜான் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார் பென்ட்லி மிச்சம். மேலும் இந்த படத்தில் ஜோதிகா, அனுபம், கேர் நாசர் ,பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் […]
கவுண்டமணி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் எனும் சிற்றூரில் பிறந்தார். 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக சுமார் 450 தமிழ் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவருடன் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது கவுண்டமணி தன்னுடன் படங்களில் ஜோடியாக நடித்த கிளாமர் நடிகைகள் நான்கு பேருடன் நெருக்கமாக தொடர்பு இருப்பதாக யூடியூப் விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். காமெடி […]
தமிழ் சினிமா உலகில் பல பிரபலங்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது படங்கள் மூலம் இன்னும் அவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பல படங்களில் நடித்த, நமக்கு மிகவும் பிடித்த நடிகர், நடிகைகள் இழப்புகள் நம்மை துயரில் ஆழ்த்தி இருக்கும். அப்படி இறப்புக்கு முன் அந்த பிரபலங்கள் நடித்தபடங்கள் எது என்பதைப் பற்றிக் காண்போம். ஸ்ரீவித்யா இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் […]
நடிகர் தீப் சித்து விபத்தில் சிக்கி மரணம் அடைந்தது பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தீப் சித்து பிரபல ஹிந்தி நடிகர் ஆவார். இவர் நேற்று நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவர் தனது காதலி ரீனா ராய் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் இடது பகுதியில் இருந்த ரீனா ராய் ஏர்பேக் அணிந்திருந்தார் அது அவரது உயிரை காப்பாற்றியது மற்றும் அவர் சீட் பெல்ட் […]
திருமணம் செய்வது கொள்வது பற்றி எந்த எண்ணமும் இல்லை என நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் கங்கை அமரன் இளைய மகன் பிரேம்ஜி. இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களைக் கொண்டவர். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்பட்டது. பின்னர் குடும்பத்தினர் வற்புறுத்தலால் பிரேம்ஜி ஓகே சொன்னதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அவரது தந்தை கங்கை அமரன் அறிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் […]
தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என நடிகர் பிரேம்ஜி கூறியுள்ளார். பிரேம்ஜி பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரனும் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை, கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவருக்கும் ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி போன்ற பல படங்களுக்கு பின்னணி பாடல் பாடியுள்ள வினைய்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது. இதைப் பற்றி நடிகர் பிரேம்ஜி […]
நடிகர் மகேஷ் பாபு விளம்பர படத்தில் நடிப்பதற்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் நடிகர் மகேஷ் பாபு மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். மேலும் இவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வெற்றி பெறுகிறது. தற்போது பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் […]
நடிகர் அருண் விஜயகுமார் திருவண்ணாமலை கோவிலில் ரசிகர்களுடன் கிரிவலம் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் விஜயகுமார் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் தனது நடிப்பாலும் திறமையாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இவர் நடித்த படங்களான சினம், அக்னி சிறகுகள், பார்டர், யானை, ஓ மை டாக் போன்ற திரைப்படங்கள் திரைக்கு வர […]
சென்னை தியாகராயநகர் பாண்டிபஜார் சாலையில் தனியார் வளாகம் ஒன்று இருக்கிறது. இதில் பிரபல ஜவுளிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. மூன்று தளங்களைக் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஜவுளி மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் திடீரென்று தீ பற்றியதால் அங்குள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கட்டிடத்தின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இதன் மூலமாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு […]
நேபாளத்தில் பிப்ரவரி 2 ஆவது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் என்னும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்க தேவையான செலவுகளை மெட்ரோ படத்தின் புகழ் நடிகரான ஷிரிஷ் ஏற்றுள்ளார். மெட்ரோ படத்தில் நடித்த புகழ் நடிகரான ஷிரிஷின் திறமையை அனைவரும் பாராட்டியுள்ளார்கள். இந்நிலையில் இவர் நேபாளத்தில் பிப்ரவரி 2வது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் சர்வதேச சாம்பியன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து […]
நடிகை கனிகா, பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி ஆபாசமாக பேசியது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் காட்டமாக பதிவிட்டுள்ளார். நடிகை கனிகா கடந்த 2002ஆம் வருடம் வெளியான 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து இவர் வரலாறு, ஆட்டோகிராஃப், எதிரி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரைப் பற்றி அவதூறாக பேசிய பயில்வான் ரங்கநாதன் பற்றி இவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது. சினிமாவில் வில்லனாக நடித்து வந்த […]
இசையமைப்பாளர் சித் ஶ்ரீராம் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் சித் ஸ்ரீராம். இவர் கடல் படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். இதனையடுத்து இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இவர் லீடிங் ரோலில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு ஜெயமோகன் […]
பிரபல சின்னத்திரை நடிகர் தீர்த்தநாத் ராவ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி கபில் சர்மா என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் காமெடி செய்து பிரபலமானவர் தீர்தானந்த் ராவ். இவர் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி தன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்கொலை முயற்சி பற்றி தீர்தானந்த் ராவ் கூறியதாவது,”ஆமாம், விஷம் குடித்தேன். எனக்கு பண பிரச்சனையாக இருக்கிறது. என் குடும்பத்தாரின் ஆதரவும் இல்லை. […]
நடிகர் மகேஷ்பாபு தனக்கு கொரோனா இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பயப்படும் அளவிற்கு கொரோனா பாதிப்பு தனக்கு ஏற்படவில்லை என்றும் லேசான அறிகுறியுடன் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு முழு பாதுகாப்புடன் இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக […]
சமுத்திரகனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன் தற்போது நடிகராக களமிறங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் சமுத்திரகனியின் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் அவருடைய நடிப்பில் வெளியான ‘ரைட்டர்’ படம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவரைப் போலவே அவருடைய மகன் ஹரி விக்னேஷ்வரனும் 40 நிமிடம் ஓடக்கூடிய “அறியா திசைகள்” என்ற குறும்படத்தை எழுதி இயக்கி அதில் நடித்துள்ளார். அதாவது அந்த குறும்படம் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிகவும் பிரபலமான வராகவும், வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 4-காம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூர்யா தன்னுடைய […]
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய நடிகருக்கு மூன்று வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மியான்மர் நாட்டின், பிரபல நடிகரான பெயிங் தகோன் என்பவர் மாடல் மற்றும் பாடகர் என்று பல திறமைகள் கொண்டவர். இவருக்கு அங்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டில், ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சியை கைப்பற்றியது. அதனை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பல மக்கள் உயிரிழந்தனர். […]
ஹோட்டலை குடியிருப்பாக மாற்ற கோரி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நடிகர் சோனு சூட்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சோனு சூட் மும்பையில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனவும் 6 மாடி கொண்ட குடியிருப்பை ஹோட்டலாக மாற்றி விட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கட்டடத்தை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற சோனு சூட் ஒப்புக்கொண்டார். இந்த […]
நடிகர் விஜய் நோ சொன்ன கதையை நம்ம சீயான் விக்ரம் எஸ் சொல்லியிருக்கிற நியூஸ் தான் இப்போ வைரல் ஆகி வருகிறது. பா. ரஞ்சித் டைரக்ட் பண்ற அடுத்த படத்தில் நடிக்கிறது நம்ம சீயான் விக்ரம். இது இவரோட 61-ஆவது படம். சூட்டிங் சீக்கிரத்திலேயே தொடங்க போது. இதுல என்ன புதுசுனு செல்கிறீர்களா? இந்த கதையை முதலில் ரஞ்சித் சொன்னது தளபதி விஜயிடம். சூப்பர் ஹீரோ கதை என்று சொல்லி இருக்கிறார். ஆனா நம்ம மாஸ்டர் ஏற்கனவே […]
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்திருந்தார். அவர் எப்போது அரசியலுக்கு வருவார். கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே நாள் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய […]
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் கார்த்திகேயா. இவர் ஒரு தெலுங்கு நடிகர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து லோஹிதா ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து ஹைதராபாத்தில் கார்த்திகேயா லோஹிதா ரெட்டியின் திருமணம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நேரில் வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார். தெலுங்கு பிரபலங்கள் பலரும் இந்த திருமண […]
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் 2-வது நாளாக அஞ்சலி செலுத்தினர். இன்று காலை முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இதனையடுத்து புனித் ராஜ்குமார் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டனர். பின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அரசுக்கு சொந்தமான கண்டியூர்வா மைதானத்துக்கு […]
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு திமுக எம்பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் புனித் ராஜ்குமார் இன்று காலை பெங்களூரில் அவருடைய இல்லத்தில் எப்போதும் போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இவருடைய மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் […]
நடிகர் ரஜினி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டது என்றும், மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின்பு உடல் நலம் தேறி வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவர் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.