தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் யானை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அருண் விஜய் தற்போது சினம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை நினைத்தாலே இனிக்கும், வாகா, ஹரிதாஸ், யுவன் யுவதி திரைப்படங்களை இயக்கிய ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக […]
Tag: நடிகர் அருண்விஜய்
அருண் விஜய் நடிக்கும் ”யானை” படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர். தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் உருவாக்கிய ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி நேரடியாக OTT யில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இவர் நடிப்பில் அடுத்தடுத்து அக்னிச்சிறகுகள், சீனம், பாக்ஸர் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”யானை”. இந்த […]
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துடன் இயக்குனர் ஹரியின் யானை படம் மோதுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக யானை படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இதனால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சூரியாவின் எதற்கும் துணிந்தவன் வரும் பிப்ரவரி 4ஆம் நாள் வெளியாகிறது. அதே நாளில்தான் யானை படத்தையும் வெளியிட ஹரி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்டர் திரைப்படம் எனது மிகச் சிறந்த படங்களில் ஒன்று என நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. […]
தமிழில் வெளியான தடம் திரைப்படம், நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியாகப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் தடம். இத்திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. மேலும் விமர்சகர்களிடமும் பாராட்டை பெற்றது. இத்திரைப்படம் “ரெட்” என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. எனவே தடம் திரைப்படத்தை இந்தியிலும் வெளியிடவுள்ளார்கள். […]