தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜா தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்துவரும் நிலையில், தற்போது சல்மான்கான் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தில் சல்மான் கானுடன் இணைந்து பூஜா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை […]
Tag: நடிகர் சல்மான்கான்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் பகுதியில் சல்மான்கானுக்கு சொந்தமாக ஒரு பண்ணை வீடு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் சல்மான்கானின் பிறந்த நாளுக்கு அவரது குடும்பத்தினர் அந்த பண்ணை வீட்டில் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று அந்த பண்ணை வீட்டில் வைத்து சல்மான்கானை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக கமோதேவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உரிய […]
மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இருந்து சல்மான்கான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க சம்மதம் […]
லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன்ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நடிகை நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு […]
மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை […]
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுஷாந்த் ராஜ்புத்தின் வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா, பீகாரின் முஸாபார்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, கரண் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி, மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய […]