சர்வதேச புகழ் பெற்ற புகைப்பட கலைஞரான எஸ். ராமச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கடந்த 2 வருடங்களாக காலண்டர் வெளியிட்டு வருகிறார். இந்த காலண்டர் ஹியூமன் மற்றும் கலைஞர் என்ற தலைப்பில் 2 வருடங்களாக வெளியிடப்படும் நிலையில், தற்போது தி ஆர்டிஸ்ட் என்ற பெயரில் 2023-ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளனர். அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஓவியர், சிற்பி, கிராஃப்டி ஆர்டிஸ்ட் என்ற பரிணாமங்களில் புகைப்படம் எடுத்து அதை காலண்டராக எஸ். ராமச்சந்திரன் வடிவமைத்துள்ளார். […]
Tag: நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவருக்கு சென்னையில் நடைபெற்ற 20-வது சர்வதேச திரைப்பட விழாவின் போது மாமனிதன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு தனக்கு கிடைத்த பரிசு தொகை முழுவதையும் நடிகர் விஜய் சேதுபதி அப்படியே விழா கமிட்டிக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, திரைப்படங்களை பார்த்துவிட்டு செல்லாமல் திரைப்படங்களின் மூலம் இயக்குனர்கள் சொல்ல வரும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இதற்காக கொடுக்கப்பட்ட பரிசுத்தொகையை சர்வதேச […]
பிரபல தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேவ் மற்றும் கீர்த்தி செட்டி நடிப்பில் உருவான உப்பெனா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து தமிழில் உப்பெனா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உதவி […]
தெலுங்கு படமான ‘உப்பெனா’ என்ற படத்தை தமிழில் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது. தனது கதையை திருடி உப்பெனா படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டதாக தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் எஸ் யூ டல்ஹவுசி பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் “உப்பெனா” என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என விஜய் சேதுபதி தரப்பு சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதி விளக்கத்தை ஏற்று […]
தமிழ் திரைப்பட நடிகர் ஆன விஜய் சேதுபதி தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களிடையே கவரப்பட்டார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், விஜய் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் தன்னுடைய நடிப்பை எதார்த்தமாக ரசிகர்களுக்கு கொடுப்பதால் வெகுவாக ரசிகர்களால் ஈர்க்கப்படுகிறார். இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. அந்த வகையில் நடிகர் சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற திரைப்படங்களான கர்ணன் மற்றும் திருவிளையாடல் போன்ற திரைப்படங்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் திரையிடப்படுகிறது. இதேபோன்று சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படமும் திரையிடப்படுகிறது. மேலும் டிசம்பர் 13-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் திரைப்படத்தை 100 முறை பார்த்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு நானும் ரவுடிதான் படத்தை 100-வது முறை பார்த்தபோது விஜய் சேதுபதிக்கு போன் செய்து நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை என்று கூறினாராம். அதோடு உங்களின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அண்மையில் டிஎஸ்பி திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் ஜவான் மற்றும் விடுதலை போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் நான் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க இருந்தேன். அந்தப் படத்தில் கதை எல்லாம் கூறிய பிறகு […]
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே டிஃபரண்டான விமர்சனங்களை பெற்றுள்ளது. இயக்குனர் பொன்ராமன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” என்ற திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் முதல் பாடலான “நல்லா இரும்மா” என்ற பாடலை உதித் நாராயணன் பாடியுள்ளார். இந்தப் பாடல் யூடியூபில் வைரலாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது. நேற்று வெளியான இந்தப் படத்திற்கு […]
நடிகர் விஜய் சேதுபதி நடித்த “டிஎஸ்பி” திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என பழமொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். தற்போது வெளியான “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து […]
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் பகத் பாஸில் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு தன்னுடைய 234-வது திரைப்படத்தில் மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்துள்ளார் கமல். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ, வில்லன், குணச்சத்திர கதாபாத்திரம் என எந்த வேடம் ஏற்றாலும் அதற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொண்டு கச்சிதமாக நடிப்பார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் மாமனிதன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது காந்தி டாக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை அதிதி மற்றும் நடிகர் அரவிந்த்சாமி போன்றோர் […]
பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமையுள்ளவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், அறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது கேட்பது. பிறர் பேசுவதை முதலில் நன்றாக கவனித்துக் கேளுங்கள். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவர் ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எந்த வேடத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப் படுத்துவார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். எந்த […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், இந்த உலகில் யாரும் யாரிடமும் தோற்றுப் போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதுமில்லை. அது அந்த சமயத்தில் நடக்கும் ஒரு சிறிய நாடகம் மட்டும்தான். நான் 12 ஆம் வகுப்பில் அதிகமாக மார்க் வாங்கவில்லை. கல்லூரியில் சேர்வதற்காக லயோலா கல்லூரி உட்பட மூன்று கல்லூரிகளில் அப்ளிகேஷன் வாங்கினேன். அன்று இரவு […]
பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமையுள்ளவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், இந்த உலகில் யாரும் யாரிடமும் தோற்றுப் போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதுமில்லை. அது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதற்கு முன்னதாக விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக இவர் மிரட்டி இருப்பார். இதனைத் தொடர்ந்து இவருக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் இவர் தனது சம்பளத்தையும் பல கோடி ரூபாய் உயர்த்தியுள்ளார். இந்நிலையில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் நடிகர் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களாக வலம் வரும் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாதவன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமைக்கை புஷ்கர்-காயத்ரி இயக்கியுள்ளனர். இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைப்காலிகான் ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். இப்படத்தின் […]
பிரபல நடிகர் புஷ்பா பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி குணசத்திர கராபாத்திரம், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதால், விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இவர் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இவர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிகராக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து வருகிறார். கடந்த ஜூன் 3 ஆம் தேதி கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வெளியான மாமனிதன் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் […]
பிரபல பாலிவுட் நடிகர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தை கௌரி கான் தயாரிக்கிறார். இந்நிலையில் வருகிற 2023-ம் ஆண்டு ஜவான் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜவான் படத்தில் புதிதாக இணையவுள்ள நடிகர் குறித்து ஒரு தகவல் […]
என் படத்தை விஜய் சேதுபதி பார்க்கவில்லை என பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார். பிரபல நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், அறிமுக இயக்குனர் சந்தீப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேழம். இந்த படத்தில் ஹீரோயினாக ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் வேழம் படத்தின் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி […]
பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் லலிதானந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் பிரபல பாடலாசிரியர் லலிதானந்த். இவர் தமிழில் பல்வேறு படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். ஜெய் நடிப்பில் வெளியான ‘அதே நேரம் அதே இடம்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். மேலும் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, மாநகரம், திருமணம், ஜூங்கா, அன்பிற்கினியாள் போன்ற பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த […]
தமிழ் சினிமாவுலகில் ஹீரோவாக நடித்த நடிகர்கள் தற்பொழுது வில்லனாக நடிக்கின்றார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகின்றார். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார். இதனால் இவரின் கைவசம் படங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த வரிசையில் இவரைப் போல் சில ஹீரோக்களும் வில்லனாக நடித்து வருகின்றனர். அவர்களைப் பற்றி ஒரு சிறிய பார்வை. விக்ராந்த்: இவர் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக பிரபலமாகவில்லை. இதனால் […]
நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திக் உடன் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் திரை உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, சூதுகவ்வும், நானும் ரவுடிதான், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை பதித்தவர். மேலும் ரஜினி, விஜய் என பல நடிகர்களின் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல 2 காதல் படத்தின் டீசர் ஒரே நாளில் யூட்யூபில் 1 கோடி வியூஸ்ஸை கடந்து ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் திரையுலகின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாராவுடன் நடித்த காத்துவாக்குல 2 காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரவுடி பிக்சர் தயாரித்துள்ளது. இந்த சூழலில் விஜய் சேதுபதி பெட்டில் படுத்திருக்க ஒரு பக்கம் நயன்தாராவும், மற்றொரு […]
நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த செம ஹிட் கொடுத்த திரைப்படம் மாஸ்டர் தென்னிந்தியாவில் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்றது. தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன் , ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன் மற்றும் அப்படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி பவானி கதாபாத்திரத்தில் நடித்தது அப்படத்தை மாபெரும் வெற்றி அடையச் செய்தது. மேலும் […]
நடிகை விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2015-ஆம் வருடத்தில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தை இயக்கிய, மணிகண்டன், கடைசி விவசாயி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் […]
திண்டிவனத்தில் நடந்த ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பு இல்லாமல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பங்கேற்றது புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் இளைஞரணி தலைவராக இருக்கும் புகழேந்தி என்பவருக்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திண்டிவனத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, முன்னறிவிப்பின்றி திடீரென்று வாகனத்தில் வந்து […]
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதில் தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படுவதாக இரண்டு வருடங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்திற்கு, ‘800’ என்று பெயரிடப்பட்டு அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது […]
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் பிழை’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘நானும் ரவுடிதான்’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது . இதில் நயன்தாரா இப்படத்தில் தனது சொந்தக்குரலில் டப்பிங் கொடுத்துள்ளார். இந்த நிலையில் […]
‘ஜெய்பீம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனிடையே சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான ”ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் வக்கீலாக நடித்த அசத்தலான நடிப்பை சூர்யா கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது […]
பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த போது பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன் ஜாதியை பற்றி தவறாக பேசியதாக கூறி மகா காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஜனவரி 4ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகா காந்தி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ் திரையில் நடிகராக இருந்து வரும் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2-ஆம் தேதி இரவு, விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையம் சென்றதாகவும், அங்கு நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக […]
விஜய் சேதுபதி நடிக்கும் மைக்கேல் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். Take pleasure in welcoming […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே இந்த படத்தின் […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். The offical trailer of #KadaisiVivasayi will be released from tomorrow […]
மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி விசிட் அடித்துள்ள வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், விடுதலை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி விசிட் அடித்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது. பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் […]
இயக்குனர் ஹெச். வினோத் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சதுரங்கவேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு […]
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, சமந்தா இருவரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . Presenting #Khatija […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் . செவன் ஸ்கிரீன் நிறுவனம் மற்றும் […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். @sreekar_prasad @srkathiir @KVijayKartik @Rowdy_Pictures @7screenstudio @SonyMusicSouth […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் […]
நானும் ரவுடிதான் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நானும் […]
பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் உதவியாளரை பயணி ஒருவர் பாய்ந்து வந்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இரு தரப்பும் சமாதானம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் விஜய்சேதுபதியின் உதவியாளரை உதைத்தது சொல்லப்படும் நபர், விஜய் சேதுபதி இந்தியாவை விமர்சித்தார். முத்துராமலிங்க தேவரை விமர்சித்தார்.அதனால்தான் நான் உதைத்தேன் என்றே யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகின்றார்.இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், தேவர் […]
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. அமிதாப் பச்சன், சிவாஜிகணேசன், கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்றது. […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள முகிழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான அனபெல் சேதுபதி, லாபம், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், VJS 46, மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி தனது மகள் ஸ்ரீஜாவுடன் இணைந்து முகிழ் […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள முகிழ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான அனபெல் சேதுபதி, லாபம், துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் விடுதலை, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், VJS 46, மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி தனது மகள் ஸ்ரீஜாவுடன் இணைந்து […]
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் உருவான துக்ளக் தர்பார், லாபம், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது விஜய் சேதுபதி விக்ரம், விடுதலை, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்பட […]