தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்களில் நம்பர் பிளேட்டின்றி ஓட்டும் நபர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதாவது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யயும் வாகனங்களில் நம்பர் பிளேட்டின்றி ஓட்டுகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு, பைக் சாகசங்களை மேற்கொள்கின்றனர். அத்துடன் போலி நம்பர் பிளேட்களையும் சிலர் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தவறு செய்த நபர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவதில்லை. மேலும், இது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களிடையே புகார்கள் பெறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் […]
Tag: நம்பர் பிளேட்
துபாயின் அரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் சமயத்தில் உலகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதன்படி இந்த வருடமும் உலகம் முழுவதும் உள்ள 100 கோடி மக்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை செயல்படுத்த நிதி திரட்டும் நோக்கில் வாகன உரிமைகளுக்கான பிரத்தியேக ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்திற்காக வரவழைக்கப்பட்ட பல நம்பர் பிளேட்டுகள் கோடிக்கணக்கில் ஏலம் […]
பழைய வாகனங்களுக்கு நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வாகனங்களை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் திட்டம் 2001ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்கு முன்பாக தயாரித்த வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் பணியை அமல்படுத்த தமிழக அரசு 2021ஆம் ஆண்டு […]
சென்னை காவல் துறையின் சார்பாக வாகனங்களை நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதோடு மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது சென்னையில் வாகனங்களில் பொருத்தப்படும் நம்பர் பிளேட்டுகளில் சரியான விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை என பல புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு கண்டறிய சென்னை காவல் துறை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் எழுத்தின் வடிவங்கள் எந்தெந்த வாகனங்களில் எப்படி இருக்க வேண்டும் என […]
நம்பர் பிளேட்டில் எவையெல்லாம் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வாகனங்களில் ஒட்டப்படும் நம்பர் பிளேட் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், வாகன நம்பர் பிளேட்டில் தற்காலிக பதிவு என்னை ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டினால், அது செல்லாது என அறிவித்துள்ளது. அதேபோல் நம்பர் பிளேட்டில் ஆங்கில கேப்பிட்டல் எழுத்துக்கள் மற்றும் அரபி எழுத்துக்களை தவிர வேறு எந்தவிதமான எழுத்துக்களும் இருக்கக்கூடாது என்ற விதி முறையையும் அமல்படுத்தியுள்ளது. மேற்கண்ட […]