Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயலின் தாக்கம்… உறைநிலைக்கு சென்ற நயகரா நீர்வீழ்ச்சி…!!!!

அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக வீசி வரும் பனிப்புயல் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடுமையான பனிப்பொழிவினால் வீடுகள், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் பணியில் உறைந்து காணப்படுகிறது. இதனால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 தாண்டியுள்ளது. இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா போர்…. ஒற்றுமையை காட்ட…. ஒளிர விடப்பட்டுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி….!!!

அமெரிக்கா-கனடா எல்லை பகுதியில் அமைந்துள்ள நயாகரா நீர் வீழ்ச்சியில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு கொடி நிறத்தில் ஒளிர விடப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்றும் 6-வது நாளாக இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த கடுமையான தாக்குதலுக்கு, உலகிலுள்ள பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர்… காரில் கண்டெடுக்கப்பட்ட உடமைகள்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்திய இளைஞர் ஒருவர் நயாகரா நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் எனும் பகுதியில் வசித்து வந்த 26 வயது இளைஞரான Tathikonda Avinash தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு Avinash எதிர்பாராதவிதமாக நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளார். ஆனால் அவருடைய உடல் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்ததையடுத்து மாயமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே Avinash-ன் அடையாள அட்டை, மொபைல் போன் மற்றும் உடைகள் உள்ளிட்டவை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய சுதந்திர தினம்… நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒளிர்ந்த மூவர்ண கொடி…!!!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நயாகரா நீர்வீழ்ச்சியில் மூவர்ணக் கொடி ஒளி காட்சிப்படுத்தப்பட்டது. இயற்கை அதிசயங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் இரவு நேரங்களில் ஒளிக்காட்சி உண்டு. அருவியின் மீது வண்ண விளக்குகளால் ஒளி பாய்ச்சப்பட்டு, வண்ண வண்ண அருவி போன்று காட்சியளிக்கும். அதற்கு ஏற்றது போன்று இசையும் இசைக்கப்படும். குளிர்காலம், கோடைகாலம் மற்றும் இலையுதிர் காலம் என ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு இந்த ஒளிக் காட்சியை நேரம் மாறுபடும். சிறப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட வண்ணங்களில் […]

Categories

Tech |