கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் ஊராட்சி உதவி இயக்குனர் கமலக்கண்ணன், கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, மண்டல துணை தாசில்தார் முத்து, ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாட்சா, கிராம நிர்வாக அலுவலர் மது கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொள்ளாச்சி சபையின் இன்ஸ்பெக்டர் பிரியங்கா முன்னிலை வகித்துள்ளார். மேலும் முகாமிற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி […]
Tag: நலத்திட்ட உதவி
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ 6,23,230 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயச்சந்திரபானுரெட்டி வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகில் புனுகன் தொட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இந்த முகாமில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக 84 பயனாளிகளுக்கு ரூ 6,23,330 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கியுள்ளார். மேலும் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தனித்துணை கலெக்டர் […]
விழுப்புரம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு உதவி திட்டங்களை வழங்கியதோடு, ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1992-93 வருடங்களில் படித்த மாணவர்கள் தற்போது துபாய் மற்றும் இலங்கை என்று பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு […]
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தனியார் பவுண்டேஷன் சார்பில் மாற்றுத் திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மின்சாரத்துறை அமைச்சர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில் ரூ.1,13,00,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று ரூ.1,13,00,000 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த […]
தமிழக சட்டமன்ற கூட்ட பேரவையின் போது தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன் முதற்கட்டமாக சென்னை புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு நல திட்டப் உதவிகளை அமைச்சர் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் […]
முதல்வர் ஸ்டாலின் இன்று 2 வது நாள் பயணமாக கோவை சென்றுள்ளார். அங்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.1324.25 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு பேசிய முதல்வர், கோவை விமான நிலைய திட்டத்திற்காக அரசு ரூ.1132 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தி […]
தமிழகம் முழுவதும் இன்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வந்தனர். மீனவர்களின் உழைப்பை போற்ற கூடிய வகையில் உலக மீனவர்க்ள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மீன்வளத்தை பாதுகாத்தல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக மீனவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராமன்துறை கடற்கரை கிராமத்தில் உலக மீனவர் தின விழாவை மீனவர்கள் சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். […]
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பாக பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை யில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பாக சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் […]