இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யாவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.. சிறுமி டான்யாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்டலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில், நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து இருந்த நிலையில், தற்போது அவர் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார்.
Tag: நலம் விசாரிப்பு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அண்மையில் வெளிப்படையாக அறிவித்து இருந்தார். இதனால் அவர் விரைவில் நலமடைய வேண்டும் என்று பல்வேறு சினிமா பிரபலங்கள் எண்ணி வருகின்றனர். இதற்கிடையில் தன் சக நடிகர் நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. இதையடுத்து பிரிவுக்குப் பிறகு அந்த ஜோடி தங்கள் திருமண வாழ்க்கைப் பிரிவைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டதில்லை. இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் சமந்தா […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 81 வயது ஆகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக பாரதிராஜா தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டையில் 6 வயது சிறுமி இசக்கியம்மாள் வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த வருடம் தெரியாமல் பிளீச்சிங் பவுடரை உட்கொண்டதால் உடல் மெலிந்து மிகவும் பாதிப்படைந்து காணப்பட்டார். இச்சிறுமியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னைக்கு அழைத்து சிறப்பு சிகிச்சையளிக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்கு பின் சிறுமி இசக்கியம்மாள் குணமடைந்து சென்ற சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் மா. […]