தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விருதை கடந்த ஆண்டு மூத்த தலைவர் எண் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருதுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் . இது […]
Tag: நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் வாழ்த்து கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தன்னுடைய 97வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவரின் பிறந்தநாளையொட்டி சென்னை தி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவருக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுல் ஒருவருமான நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பாதித்த நல்லகண்ணுவுக்கு நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சென்னை நந்தனம் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அரசியலில் அனைத்துக்கட்டத் தரப்பு மக்களாலும் விரும்பப்படுபவர். இவர் கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சென்னை தியாகராயா நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய கட்டுமானத்திட்டம் வர இருந்ததால் […]