யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும் , நடப்பு சாம்பியனுமான ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா, கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டசை எதிர்கொண்டார் . இதில் முதல் […]
Tag: நவோமி ஒசாகா
உலகின் 2 ம் நிலை டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். உலகின் 2 ம் நிலை வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த நவமி ஒசாகா 4 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அப்போது செய்தியாளர் சந்திப்பை மறுத்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கும், பதற்றத்திற்கும் உள்ளாகி இருப்பதாகவும் இதில் இருந்து மீள்வதற்கு […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா விலகினார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா ,ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை தோற்கடித்து, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 2 வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்தப் போட்டி முடிந்த பின் செய்தியாளர்கள் […]
தற்போதுள்ள சூழலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது , திட்டமிட்டபடி நடைபெறுவது சந்தேகம்தான் , என்று டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா கூறியுள்ளார். உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது, கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்டது.இதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. […]
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியானது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் களிமண் தரை போட்டியில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகா, தரவரிசை பட்டியலில் 20 வது இடத்திலிருக்கும் , கரோலினா முச்சோவாவுடன் போட்டியிட்டார். பரபரப்பான போட்டியில் 6-4, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் முச்சோவா வெற்றி பெற்றார். இதனால் முச்சோவாவின் வெற்றி பெற்று , சாம்பியனான ஒசாகாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இந்த […]