இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் 15000 முதல் 17,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையா என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் தான் நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறையின் வரவு செலவு குறித்த மொத்த விவரம் தெரியவரும். ஆனால் கடந்த 3 வருடங்களாகவே விமான போக்குவரத்து துறை பெரும் நஷ்டத்தை தான் சந்தித்து […]
Tag: நஷ்டம்
சூரி தான் நடத்தும் அம்மன் ஹோட்டல் குறித்து பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் சூரி. இவர் தற்பொழுது வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூரி மதுரையில் நடத்தி வரும் அம்மன் உணவகங்களில் ரைடு நடைபெற்றது. இதன் பின்னர் மூன்று நாட்களில் அம்மன் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் விளக்கம் அளிப்பதோடு விடுபட்ட ஆவணங்களை காட்ட வேண்டும் என […]
இந்தியாவில் விமான சேவை நிறுவனங்களில் நடைமுறை செயலில் 45% ஆக இருக்கும் விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை அதிகரித்ததே விமான சேவை நிறுவனங்களின் நஷ்டம் அதிகரிக்க காரணம் என்று புகார் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விமான சேவை நிறுவனங்கள் நடைமுறை செலவினத்தில் 35% லிருந்து 50% அளவிற்கு டாலரில் செலுத்த வேண்டியுள்ளது. ரூபாய் கணக்கில் டாலரின் மாற்று மதிப்பு உயர்வதாலும் விமான சேவை நிறுவனம் நஷ்டம் அதிகரிக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் […]
அமேசான் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது அமேசான் நிறுவன ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது. தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்த அமேசான் நிறுவனம் தற்போது எதிர்பாராத வகையில் திடீரென்று இழப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து அமேசான் பங்கு விலை சரிந்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் அமேசான் நிறுவனம் தொடர்ந்து […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 38 நாட்கள் கடந்துள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறி வருவதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்ய படைகள் மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் என உக்ரைன் அரசுக்கு பெரிய அளவில் பொருட் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய வீரர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஷ்யப் படைகளால் கொள்ளையடிக்கப்பட்ட உக்ரைன் […]
கேரள மாநிலத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சுற்றுலா துறை. இங்கு சுற்றுலாவையே பிரதான தொழிலாக கொண்ட பலருக்கு கொரோனா முடக்கம் பேரிடியாக அமைந்தது. அந்த வகையில் சுற்றுலா பேருந்தை இயக்குபவர்களுக்கு கொரோனா காரணமாக வேலை இல்லாததால் பேருந்துகளை பழைய விலைக்கு கிலோ 45 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ரோய் டூரிஸம் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரோய்சன் ஜோசப் கூறியதாவது, “கொரோனா ஊரடங்கு […]
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என மக்களால் அழைக்கப்படும் சிறந்த நடிகர் ரஜினி. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து கொண்டிருக்கும். இவரை பற்றி சுவாரஸ்யமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இவர் தன்னால் எப்போதும் மற்றவர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அந்தவகையில் 2002ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சில அரசியல் சர்ச்சைகளும் இப்படத்தை சுற்றி இருந்து வந்த நிலையில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை […]
டெஸ்லா நிறுவனத்தில் ஒரே நாளில் சுமார் 100 பில்லியன் டாலர் சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்க் டெஸ்லா என்ற எலக்ட்ரிக் கார்களை உருவாக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இது உலக அளவில் புகழ் பெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த இவர் டெஸ்லா என்ற கார் நிறுவனம் மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் ஆகிய இரண்டையும் நடத்தி வருகிறார். இவர் தலைமை தாங்கும் அனைத்து நிறுவனமும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் தற்போது […]
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டதால் படக்குழுவினருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் மற்றும் அலியாபட் ஆகியோர் நடிப்பில் உருவான ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த பிறகு ஏப்ரல் மே மாதங்களில் […]
புஷ்பா படத்தால் கஷ்டமான விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். சமந்தா ஆடிய பாடல் உலகம் முழுக்கெங்கும் பரவியது. புஷ்பா சமீபத்தில் 300 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டாலும் சில இடங்களில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஆந்திர மாநிலத்தில் தான் சில […]
தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை 48,154 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்று கூறி இருக்கிறார். தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன், பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கிறது. எனினும், அதன் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் முதலமைச்சர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். எனவே, கொரோனா குறித்து கவலைப்படத் தேவையில்லை. பேருந்தில், பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். அதனை கடைபிடிக்க […]
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் காசிமாயன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் விற்பனை மற்றும் லாபம் குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், கடந்த 2004ஆம் ஆண்டு அதிகபட்சம் 232.73 கோடி லாபம் கிடைத்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு […]
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் காணாமல் போன பங்குச்சந்தை அதிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் சாலை பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர் கடந்த ஒன்றரை வருடமாக பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் எதிர்பாராமல் விதமாக நஷ்டம் வந்ததால் ரவிக்குமார் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவரது மனைவி புவனேஸ்வரி, ரவிக்குமாருக்கு ஆறுதல் சொல்லி வந்தார். இதனையடுத்து எப்போதும்போல் ரவிக்குமார் […]
சட்டப்பேரவையில் இன்று பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ .வ வேலு திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னையை ஒட்டியுள்ள கூடுவாஞ்சேரி-மீஞ்சூர் முதல்கட்ட வெளிவட்ட சாலை தொடங்கப்பட்டது. அது ஜிஎம்ஆர் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்தது. அப்போது திமுக ஆட்சி காலத்தில்அந்த நிறுவனத்துடன் ஆறு மாதத்திற்கு 63.13 கோடி செலவிடப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலை பணிகள் நடைபெற்றது. அதில் ஒப்பந்ததாரருக்கு 119.7 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]
கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அரசுப் […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பூக்கள் விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள திம்பம்பட்டி, கம்மாளப்பட்டி குரால்நத்தம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அரளிப்பூ சாகுபடி செய்துள்ளனர். அந்த கிராமங்களில் அறுவடை செய்யப்படும் அரளிப்பூக்கள் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கினால் வெள்ளரிக்காய் விற்பனை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நரிக்கொல்லைப்பட்டி, அரவம்பட்டி, உரியம்பட்டி மற்றும் நரங்கியன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 50 ஏக்கரில் நாட்டு வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அந்த வெள்ளரிக்காய் சாகுபடி செய்வதற்கு விதை நடவு, உழவு, தொழு உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், களையெடுத்தல் என ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு […]
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி வருவதால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பல விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க தொடங்கின. இதிலிருந்து மீண்டு வர செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளையும் விமான நிறுவனங்கள் எடுத்தன. ஆனால் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீண்டு வந்ததால் பல நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் மொத்தமாக திவாலானது. சில […]
தென்கொரிய நாட்டில் வாசிங்மிஷின் மூலமாக 50 ஆயிரம் தென்கொரிய ரூபாய் நோட்டுகள் சலவை செய்ய முயற்சி செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தில் ரூபாய் நோட்டுகளை வாஷிங் மெஷினில் போட்டு துவைக்கப்போக அந்த முயற்சியானது மிகப் பெரிய நஷ்டத்தில் முடிந்துள்ளது. குடும்பத்தில் நடக்க இருந்த இறுதி சடங்கு ஒன்றிற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரிடமிருந்தும் பெற்ற 50 ஆயிரம் தென் கொரிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வீணாகி உள்ளன. கொரோனா […]
சீன செயலிகளின் தடைக்கு பின் டிக்டாக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் எல்லையில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இந்தியர்கள் இனி சீனப் பொருட்களை வாங்க மாட்டோம் பயன்படுத்த மாட்டோம் என்று கூறி சீன பொருட்களுக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசிடம் […]
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் ரூபாய் 175 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஆனது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்கள், வணிக வளாகங்கள், மால்கள் என பொதுமக்கள் கூடும் பல இடங்கள் மூடப்பட்டிருந்தன. அதேபோல் பலருக்கு தொழில்கள் ஓடாமலும், வேலைக்குச் செல்ல முடியாமலும், பலருக்கும், பல துறைகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோவில்கள் அனைத்தும் […]