Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

4ஜி, 5ஜி யை நடைமுறை படுத்த வேண்டும்…. ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை…. பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்….!!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் 4ஜி, 5ஜி இணைய சேவையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள தேவன்குடியில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முறையாக பராமரிக்க வேண்டும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பாக 4ஜி மற்றும் 5ஜி இணைய சேவையை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 9 பேரை சுற்றி வளைத்த போலீசார்…. 170 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 170 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் கீழையூரை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி ஜவகரின் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேட்டைக்காரனிருப்பு புதுப்பாலம் அருகே காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனாவிற்கான சிறப்பு முகாம்… முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி… கண்காணிப்பு அலுவலர் ஆய்வு..!!

நாகையில் நடைபெறுகின்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அந்த முகாமை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டார். தனியார் பேருந்து கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் முன்னுரிமையின் அடிப்படையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவில்… வாழைப்பழம் வீசும் திருவிழா கொண்டாட்டம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டத்தில் உள்ள தகட்டூரில் சிறப்பு வாய்ந்த மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருடம் தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக ராதாகிருஷ்ண சாமியார் தகட்டூர் பைரவர் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் ஊர்வலமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்… முதியவருக்கு நடந்த விபரீதம்… நாகையில் சோக சம்பவம்..!!

நாகப்பட்டினத்தில் அரசு பேருந்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பறவை அந்தோனியார் கோவில் தெருவில் 62 வயதான அமிர்தலிங்கம் எனும் முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு காய்கறிகள் வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ளார். அதன் பின் சந்தையிலிருந்து காய்கறி மூட்டையை வாங்கி விட்டு அரசு பேருந்தில் ஏறி நாகப்பட்டினத்திற்கு வந்துள்ளார். நாகை புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தவுடன் காய்கறி மூட்டைகளை எடுத்துக்கொண்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்ளோ மூட்டையா… எங்க எடுத்துட்டு போறீங்க..? தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்..!!

நாகையில் வாகன சோதனையின் போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 7 சேலை முட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… கையும் களவுமாக பிடித்த காவல்துறை… 2 பேர் கைது..!!

நாகையில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குற்றம்பொருந்தானிருப்பு மதகடி பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள்

மீன் பிடிக்கு சென்ற மீனவர்கள்… வலையில் சிக்கிய பாட்டில்… பின் நேர்ந்த சோகம்..!!

நாகையில் மீனவர்கள் 3 பேர் மீன் வலையில் பிடிபட்ட பாட்டிலினுள் இருந்த திரவத்தை குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக படகு ஒன்று உள்ளது. அந்த படகில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த அந்தோணி, செல்வேந்திரன், வினோத், தோமஸ், போஸ் ஆகிய ஆறு பேரும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரைக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். சென்ற 1-ம் தேதி மீன் பிடிப்பதற்காக கோடியக்கரைக்கு பெரிய படகில் […]

Categories

Tech |