உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்க்கு நாகை மாவட்டத்தில் மட்டுமல்லாது, அனைத்து மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களும் திரளாக பங்கேற்பார்கள். இன்று மதியம் கொடி ஊர்வலம் நாகையிலிருந்து தொடங்கி நாகூரில் முடிவடைந்து, இரவு 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு தொடங்கப்படும். இதனை தொடர்ந்து 14 நாட்கள் கந்தூரி விழாவானது நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வந்து இரண்டாம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பெரியாண்டவருக்கு […]
Tag: நாகை
நாகையில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது விடப்பட்டிருக்கிறது. நாகூர் பெரிய கந்தூர் விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்னிருத்தம் செய்யப்படுகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகின்றது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் வேதாரண்யம், புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, தோப்புதுறை, கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம் துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று […]
வேதாரண்யத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த உப்பை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கின்றது. வடகிழக்கு பருவ மழையால் வேதாரண்யத்தில் தொடர்ந்து மழை பெய்கின்றது. சென்ற ஒரு மாதத்திற்கு முன்பாக உப்பளங்களில் இருக்கும் பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இதனால் […]
வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பகுதியில் இருக்கும் ஜீவா நகரை சேர்ந்த நரேந்திரன் என்பவர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி அகிலாண்டேஸ்வரியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காலை தனது தம்பி மற்றும் சித்தப்பா உள்ளிட்டோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து மூவரும் தூக்கி வீசப்பட்டார்கள். […]
இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் இருக்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உலக மீனவர் தினத்தையொட்டி நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதன்பின் நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் காப்பீட்டின் நிறுவனம் மற்றும் மீன்வள […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் இன்று (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 15 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் தொடர்ந்து மழை பொழிவானது கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட 14 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் […]
நவம்பர் 1 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி கனமழை எதிரொலியால் புதிதாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்ட […]
நாகை மாவட்டம் வேதாரணியம் தாலுகாவிற்கு உட்பட்ட நெய் விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்த வீரசாமி ராணி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்களுடைய மகன் ஸ்ரீபரன்(21), மகள் சுபஸ்ரீ (18) கூலி வேலை பார்த்து வந்த வீராசாமி சுமை தூக்கும் போது முதுகு தண்டுவடம் பாதித்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த 2016 ஆம் வருடம் முதல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன்பின் ராணி தையல் வேலை செய்தும் ஆடுகள் வளர்த்தும் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். எவ்வளவு துன்பங்களை […]
தோட்டக்கலை திட்டங்களில் பயன் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை திட்டங்களில் பயன் பெற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட தோட்டக்கலை துறை இயக்குனர் கண்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 2022 – 2023 ஆம் நிதி ஆண்டு முதல் தோட்டக்கலை துறை மூலமாக செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும் இணையதள பதிவு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் […]
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நாகை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட குருவை நெட்பயர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி மடியேந்தி விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்க மாவட்ட செயலாளர், தலைவர் உள்ளிட்டோர் முன்னிலை […]
ராட்சத அலையில் சிக்கி எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவில் நடுத்தரவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கௌசிகன். இவர் அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் கல்லார் பகுதியில் கடலில் இறங்கி விளையாடி கொண்டிருந்தான். அப்பொழுது ராட்சத அலை வந்து மூன்று பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை […]
வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் அரசு பேருந்தை தினமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை, திருச்சி, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றது. வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பல வருடங்களாக தினமும் அதிகாலையில் ஒரு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு […]
வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் இரண்டு லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரில் வசித்து வரும் கண்ணன் என்பவர் அதிமுக மீனவர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகின்றார். இவர் முன்னதாக அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு மீன்வள நல வாரிய தலைவராகவும் இருந்தார். நாகப்பட்டினத்தில் உள்ள விழிப்பாளையம் தர்மகோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்ற 2016 ஆம் வருடம் நாகப்பட்டினம் மாவட்ட […]
நாகை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சென்ற 25 ஆம் தேதி முதல் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பாக மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்றார்கள். சென்ற 26 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் மாணவர்கள் பிரிவில் தூத்துக்குடி அணி முதல் இடத்தையும், இரண்டாம் […]
18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் கத்திரிப்புலம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அசோகன்(38) என்பவர் பணியாற்றி வந்ததோடு பள்ளி அருகிலேயே டியூஷன் சென்டரும் நடத்தி வந்திருக்கின்றார். இவர் அப்பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றார். மேலும் டியூஷன் […]
புரட்டாசி மாதத்தால் மீன்கள் விலை வீழ்ச்சி அடையும் என்பதால் வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்து இருக்கும் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம், கோடிய கரை உள்ளிட்ட மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் புரட்டாசி மாத விரதம் மேற்கொள்ளுவதால் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். இதனால் மீன் விலை […]
சிகிச்சைக்காக மூதாட்டியை கட்டிலில் தூக்கிக்கொண்டு குறுகிய பாலம் வழியாக செல்லும் அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை அருகே இருக்கும் எட்டுக்குடி ஊராட்சியில் உள்ள நாகமரத்தடி தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இங்கு போதிய சாலை வசதி இல்லாததால் அங்கிருக்கும் குறுகிய பாலத்தை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் இந்த பாலத்தில் தடுப்பு சுவர்களின்றி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருக்கின்றது. இந்த பாலத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட […]
முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் மூதாட்டிகள் கதறி அழுதார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள பகுதியை சேர்ந்த சில மூதாட்டிகள் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மீண்டும் தொகை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதிகாரிகள் விதிமுறைகள் மீறி வழங்கப்பட்டதால் உதவி தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். இது குறித்து நாகை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் நான்கு தாலுகா மூலமாக பயணிகளுக்கு அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் […]
நாகை ஆரிய நாட்டு தெரு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மணிமாறனின் மகன் ஹரிஹர மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கடந்த மாதம் 18ம் தேதி நாகையிலிருந்து விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ளார். ராமேஸ்வரம் தூத்துக்குடி கன்னியாகுமரி ஊட்டி கோவை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என 2200 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்ட ஹரிஹர மாதவன் இன்று 27 நாட்களுக்குப் பின் நாகை […]
மொபட் மற்றும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் அருகே இருக்கும் மேலப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரும் அவரின் நண்பர் ராமகிருஷ்ணன் என்பவரும் நேற்று காலை டீ குடிப்பதற்காக புத்தகரத்தை நோக்கி மொபட்டில் சென்றுள்ளார்கள். அப்பொழுது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும் மொபட்டும் நேருக்கு நேர் மோதியதில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். இதுயடுத்து அங்கிருந்தவர்கள் ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
நாகூர் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தினம் தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் நாகூர் வழியாக திருவாரூருக்கு அரசு பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தானது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகின்றது. இதில் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இதில்தான் பயணம் மேற்கொள்கின்றார்கள். இதனால் கூட்டம் […]
வங்கியில் இருந்து பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து, அவர்களிடம் இருந்து 4 1/2 லட்சத்தை மர்ம நபர்கள் சென்ற 5 மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். […]
கீழையூரில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் ஒன்றிய பகுதியில் குறுவை சாகுபடி நிறைவு பெற்று அறுவடைக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றது. மேலும் அதற்காக கீழையூரில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் சம்பா சாகுபடிக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பால்ராஜ் தலைமை […]
பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமல்லாமல் கால்நடைகளையும் உயிருடன் மீட்க ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் துறை அதிகாரிகள் பேரிடர் ஏற்படும் பொழுது மக்களை எவ்வாறு உயிருடன் மீட்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முகாமில் தங்க வைத்து […]
வேதாரண்யம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கூறியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், ஆயக்காரன்புலம், வாய்மேடு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதனால் அதன் துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறுகின்ற வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புத்துறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், […]
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன் பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் கூறியுள்ளார். பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் மூலமாக செயல்படுத்தப்படும் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம் ,கண் கண்ணாடியகம், மருந்தகம், […]
வேளாங்கண்ணிக்கு வருகின்ற ரயில்கள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. நாகை- வேளாங்கண்ணி இடையேயான ரயில்பாதை சுமார் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனால் 12 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. இந்த நிலையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதையில் இருபுறங்களிலும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணியும் அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் சென்ற இரண்டு வருடங்களாக […]
நாகை மாவட்டத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கும் விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் தாக்கியுள்ளனர். இந்நிலையில் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மாணவிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு […]
போலீஸ் பாதுகாப்புடன் அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் உள்ள செம்பகராயநல்லூர், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது நடந்து வருகின்றது. தெற்கு பூசாரி தோட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்க முடியாது என ரயில்வே நிர்வாகம் கூறியது. இதனால் அப்பகுதி மக்கள் முன்பு இருந்த ரயில்வே கேட்-டை பயன்படுத்தி வந்த நிலையில் சுரங்கப்பாதை அமைக்காமல் ரயில் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் மண்ணிறப்பும் பணிகள் நடந்து வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் தடுத்து […]
ஆன்லைன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி வாலிபரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த பணத்தை போலீசார் மீட்டனர். நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் அகஸ்தியன்பள்ளி பகுதியைச் சேர்ந்த கவிதரன் என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நபர் ஆன்லைன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி உள்ளார். இதை கவிதரனும் நம்பி ஒரு லட்சத்து இருபது ஆயிரத்தை அந்த […]
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் அரசு செயலாளர், ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது பெருநட்டாந்தோப்பு மேல தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி தேவேந்திரன் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த அமைச்சர், […]
கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாயும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபாயும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
நாகை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் திருமேனிசெட்டித்தெரு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதில் மதுபானம் வாங்குபவர்கள் சாலையில் நின்று மது அருந்துகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களிடம் தகராறு செய்து அவர்களுக்கு இடையூறாக இருக்கின்றனர். அதனால் பொதுமக்கள் […]
வாய்மேடு அருகே சரக்கு ஆட்டோ ஆற்றில் பாய்ந்ததில் டிரைவர் உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு அடுத்த மருதூர் ஆண்டியப்பன் காட்டுப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ ஒட்டி வந்த நிலையில் நேற்று காலை தனது சரக்கு ஆட்டோவில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக் கொண்டு தகட்டூர் கடை தெருவில் இருந்து தென்னடாறுக்கு சென்று கொண்டிருந்த பொழுது பஞ்ச நதிக்குளம் மேற்கில் சென்ற போது ஆட்டோ அவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று முள்ளியாற்றில் பாய்ந்ததில் […]
பேரூராட்சி செயல் அலுவலர் காலரா நோய் தொற்றின் பரவல் காரணமாக ஹோட்டல்களில் திடீர் ஆய்வு செய்தார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் தற்பொழுது காலா நோய் தொற்று பரவி வருவதன் எதிரொலியாக மாவட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சியில் இருக்கும் ஹோட்டல்களில் செயல் அலுவலர் குகன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் உணவுகளை சூடாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை செய்தார். மேலும் ஹோட்டல்களை தூய்மையாக […]
காரில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர். தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்திச் செல்வதை தடுப்பதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் திட்டச்சேரி அருகே பனங்காட்டூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த பொழுது 50 மூட்டைகளில் ஒரு லட்சம் மதிப்பிலான சாராயம் இருந்ததையடுத்து […]
நாகையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா இன்றுடன் நிறைவடைகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் புத்தகத் திருவிழாவானது சென்ற 24ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகின்றது. இது இன்றுடன் நிறைவடைகிறது. இந்த புத்தக விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 110 பதிவாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த திருவிழாவில் 114 புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டு கவிதை, கவிதை, நாவல், நாடகம், அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, உளவியல், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம் ஆகிய […]
நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி மன்றத் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்கள். நாகையில் நடந்துவரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஏடிஎம் மகளிர் கல்லூரி சாலையில் சிறிய பாலத்துடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார்கள். இதையடுத்து […]
வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை மற்றும் 1 லட்சம் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்செங்காட்டங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் சென்ற 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரைக்கால் சென்று விட்டு மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் […]
அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள இரும்பு கம்பிகிடையே பெண்ணின் கால் சிக்கியதை அடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டார்கள். காரைக்காலைச் சேர்ந்த உஷாராணி என்பவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக வந்தபொழுது மருத்துவமனையின் நுழைவாயிலில் இருக்கும் இரும்பு கம்பிகளுக்கு இடையே அவரின் கால் மாட்டிக்கொண்டது. அவர் எடுக்க முயற்சித்தும் அவரின் காலை எடுக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விரைந்து […]
தமிழகத்தில் முதன்முறையாக குழாய் மூலமாக வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை நாகை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள சீயாத்தமங்கை என்ற கிராமத்தில் 14 வீடுகளில் குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை அம்மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனத்தின் சார்பாக இந்த விநியோகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பது போன்று எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு சமையலறைக்கு நேரடியாக எரிவாயு குழாய்கள் கொண்டு செல்லப்படுகிறது. […]
நாகப்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் எப்போது பேரை போலீஸார் கைது செய்தார்கள். நாகப்பட்டினத்தில் உள்ள புதிய பஸ் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபா தேவி தலைமை தாங்க செயலாளர் லலிதா முன்னிலை வகிக்க ஒன்றிய செயலாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்களுக்கு […]
பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகள் ஊராட்சி கரையிருப்பு இல் திருமருகல்- மருங்கூர் இடையேயான வடக்குபுத்தாற்றில் நெடுஞ்சாலை துறை மூலமாக பாலம் கட்டும் பணியானது சென்ற மாதம் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. சென்ற மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாலம் கட்டும் பணி காரணமாக கரையிலிருந்து வடக்குபுத்தாற்றுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. இதனால் சீயாத்தமங்கை, வாளாமங்கலம், புறாக்கிராமம், […]
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த படகுகளை மீட்டு தரக்கோரி கர்ப்பிணிப் பெண்ணொருவர் முதல்வரிடம் மனு அளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று நாகை மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி அருகே இருக்கும் கருவேலங்கடை பகுதியில் கல்லாறு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரை சந்தித்து மனுக்களை அளித்தனர். இதையடுத்து முதல்வர் காரில் புறப்பட்டு சென்ற போது கர்ப்பிணி ஒருவர் முதலமைச்சரை சந்திக்க முயன்றார். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் கர்ப்பிணியை சந்திக்க விடவில்லை. இதையடுத்து […]
தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்த ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வடக்கு வீதியில் வசித்து வருபவர் வேல்ராஜ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி நாகலட்சுமி. கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று வேல்ராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 39 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நாகப்பட்டினம் செக்கடி தெருவில் வசித்த சேகர் […]
வங்கக்கடலில் புயல் எதிரொலியால் கடல் நீர் 100 முதல் 200 மீட்டர் வரை வெளியேறியுள்ளது. நாகை மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், அக்கரைப்பேட்ட, செருதூர், வாணவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், விழுந்தமாவடி, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை உட்பட பல மீனவக் கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள மணியன் தீவு, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை ஆகிய மீனவ கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை வங்ககடலில் புயலின் எதிரொலியால் கடல் நீர் 100 மீட்டரிலிருந்து 200 மீட்டர் வரை […]
தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வில் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். நாகை மாவட்டம், திட்டச்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2021-22ஆம் கல்வி வருடத்திற்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழு அரசு உயர்நிலைப் பள்ளிகள், ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றார்கள். அதில் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்ற சுபிக் ஷா, நிவேதா […]