தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tag: நாகை மாவட்டம்
மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோகூர் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி, உறவினர்கள் ஜெயா, அய்யப்பன் உட்பட 6 பேருடன் சென்றார். இந்நிலையில் அவர்கள் ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்றுகொண்டு திடீரென மண்ணெண்ணையை உடலில் தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார் உடனடியாக 6 பேரையும் மீட்டு அவர்களிடமிருந்த மண்எண்ணெய் […]
பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலில் தண்ணீர் நிரப்பி குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் அருகே இருக்கும் ஒன்றியம் கிடாமங்கலம் மேலத் தெருவில் மகேந்திரன் சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மகேந்திரன் தனது தாத்தாவான பக்கிரிசாமி என்பவருடன் சேர்ந்து பருத்தி வயலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து தண்ணீர் தாகம் ஏற்பட்டதால் சிறுவன் […]
வீட்டில் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வாய்மேடு அடுத்த தாணிக்கோட்டகம் ஜீவா நகர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கரின் தாய்- தந்தை இருவரும் இறந்துவிட்டனர். இதனால் சித்தி வீட்டிற்கு அருகில் இருக்கும் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சங்கர் வீட்டின் […]
தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் வெளிப்பாளையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் . இந்த விசாரணையில் அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரீகன் என்பதும் அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து […]
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கஞ்சா ,குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலை தடுக்க நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஜவகர் தீவிர வாகன சோதனை உத்தரவிட்டார். இந்நிலையில் நாகை அடுத்துள்ள பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நகர காவல் ஆய்வாளரான பெரியசாமி தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 3 பேர் இரு சக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் […]
சாராயம் கடத்திய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூரை அடுத்துள்ள மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள சுங்க சாவடியில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர் .இந்த விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தனர் . […]
கடன் பிரச்சனையால் பஸ் கண்டக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் அருகே அம்பல் ஊராட்சி பகுதியை சேர்ந்த எழிலன் என்பவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சினையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எழிலன் வயலுக்கு […]
டீக்கடையில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ஆகியோர் அவரிக்காடு மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை நடந்தது தெரியவந்தது .இதையடுத்து டீக்கடை நடத்தி வந்த ராஜா என்பவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் […]
டிரைவரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மஞ்சவாடி காலனி தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஓர்குடி வெட்டாற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்ல ஆற்றுப் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மஞ்சவாடி காலனியை சேர்ந்த இங்கர்சால் என்பவர் ஸ்டாலினை வழிமறித்தார் . அப்போது கையில் இருந்த அரிவாளை அவரது கழுத்து […]
நாகை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் வடகாடு பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்(வயது 27). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் .இதனால் மனமுடைந்த அவர் சம்பவ தினத்தன்று வீட்டில் பயிர்களுக்கு பயன்படுத்தபடும் விஷ மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .இதன் […]
நாகை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள இருக்கை ஊராட்சியில் தெற்கு தெருவை சேர்ந்த செய்யது முபாரக் என்பவர் ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார் இவருக்கு ஹாஜிராம்மா என்ற மனைவியும் ஒரு மகனும் ,ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகனான சதாம் உசேன் கத்தார் நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு […]
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 17 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பிராத்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது .இந்தப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை திருவிழா நடைபெற்றது . ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது .அத்துடன் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி […]
நாகையில் மீன் வியாபாரியிடமிருந்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்துள்ள சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையை பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார் இவர் மீன்பிடி படகு வாங்குவதற்காக இவரிடம் வேலைப்பார்க்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன், தமிழ் மற்றும் சிவக்குமார் ஆகியோருடன் கடந்த 5-ஆம் தேதியன்று நாகை அடுத்துள்ள நாகூருக்கு சென்றுள்ளார் .அப்போது காரை நாகை பட்டினச்சேரி பகுதியில் நிறுத்திவிட்டு படகு வாங்குவதற்காக தினேஷ் […]
பணி நீக்கம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட ஒப்பந்த பெண் பணியாளரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில்நடைபெற்றது . நாகப்பட்டினம் மாவட்டம் அவுரி திடலில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி தூய்மைப்பணி பரப்புரையாளர் எழிலரசி தலைமை தாங்கியுள்ளார் .மேலும் சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி முன்னிலை வகித்துள்ளார். இதில் மயிலாடுதுறை அருகே குற்றாலம் பேரூராட்சி பகுதியில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஒப்பந்தம் தூய்மைப் பணி பரப்புரையாளர் நதியா […]
இந்திய கடலோர காவல் படை கப்பலானது ,மீனவரின் படகு மீது மோதியதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்த தவமணி என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடன் சந்திரகுமார் ,மகாலிங்கம் மற்றும் செல்வமணி அகிய 4 மீனவர்களும் புஷ்பவனம் கடற்கரையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இதில் சம்பவ தினத்தன்று புஷ்பவனம் கடற்கரை கிழக்கே 7 நாட்டிகல் மைல் […]
நாகையில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவரின் மகன் வீர செல்வம்(வயது 19). இவர் இதே ஊரில் ஒளி – ஒலி அமைப்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் இந்நிலையில் கருப்பம்புலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விழாவில் மின்விளக்குகள் பொருத்தும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தபோது பலத்த மழை பெய்துள்ளது . இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். […]
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு கிராமம் ராஜபுரம் பகுதியை சேர்ந்த மூவேந்தன் என்பவர் (48) நெய்விளக்கு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவர் இரவு பணி முடிந்தவுடன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குரவப்புலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இருசக்கர வாகனத்தில் இருந்து […]
கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள புதுப்பள்ளி பகுதியில் வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுப்பள்ளி சக்கிலியன் ஆற்று இரண்டாவது பாலத்தின் அடியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர்கள் புதுப்பள்ளி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (23), சிவசந்தன் (25) என்பதும், இருவரும் சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை […]
நாகையில் அணில், புறாக்களை வேட்டையாடிய 2 பேருக்கு வனத்துறையினர் தலா 4,000 ரூபாய் அபராதம் விதித்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தம்பிதுரை பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அங்கிருந்த புறாக்களை வேட்டையாடி உள்ளனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் புறாவை வேட்டையாடிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் காரைக்கால் அருகே கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவா(20) மற்றும் […]
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பெயரில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பரவுவதை தடுப்பதற்காக, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை காரணமாக கொண்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆகஸ்டு 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ள திருவிழாவின்போது அனைத்து நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் […]
நாகையில் திருக்குவளையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரடி பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது . நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தப் பொறியியல் கல்லூரியில் உள்ளூர் ,வெளியூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவ ,மாணவிகள் படித்து வருகின்றனர் .மேலும் வெளியூரை சேர்ந்த ஆசிரியர்களும் இந்த கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பொறியியல் கல்லூரி திருக்குவளை பேருந்து நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கிருந்து கல்லூரி வளாகத்திற்கு மாணவர்கள் […]
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த போலகம் குருவாடி வடக்குத் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமி பரிசோதனை செய்தபோது அவர் கர்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகை அனைத்து மகளிர் காவல் […]
நாகை மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த வாரத்தின் கடைசி மூன்று நாட்களான வெள்ளி ,சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட தமிழக அரசு தடை விதித்தது .இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயம் ,வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் நாகூர் தர்கா உட்பட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி மூன்று […]
நாகையில் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 315 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவரான தியாகராஜன் தலைமை தாங்கியுள்ளார். இந்த தடுப்பூசி முகாமை வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி லியாகத்அலி நேரில் பார்வையிட்டார். இந்த முகாமில் 315 […]
நாகை மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் . நாகப்பட்டினம் மாவட்த்தில் வேதாரண்யம் ,கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதியில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்த முதியோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி பிறகு வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமியை வழிபடுவார்கள். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடி அமாவாசை நாளில் கடலில் பொதுமக்கள் நீராட மாவட்ட […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி ,சனி , […]
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது ,அதி வேகமாக சென்று விபத்துக்கள் ஏற்படுவது போன்ற புகார்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. இந்தப புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து துணை ஆணையர் அழகரசு உத்தரவின்படி ,நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தலின்படி வட்டார போக்குவரத்து அலுவலரான வெங்கட கிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள் நாகை மற்றும் சுற்றுவட்டார […]
கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 95 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் . நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த உமா(20) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரிந்து சென்ற தன் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவரின் புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு என்பவர் கணவரிடம் சேர்த்து […]
நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறைபோலீசார் திடீர் சோதனை நடத்திய போது கணக்கில் வராத ரூபாய் 21 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். நாகையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் நாகை தாலுகாவிற்கு உட்பட்ட 139 ரேஷன் கடைகளில் பணியாற்றிவரும் பணியாளர்களிடம் இருந்து வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் லஞ்ச ஒழிப்பு […]
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் தாலி செயினை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பன்னாள்கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன்(70) என்பவரின் மனைவி நாகலட்சுமி (68).இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதே மருத்துவமனையில் பண்ணிநேர் மொழியால்புறம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (32) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் . […]
குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள மருதூர் தெற்கு ஆண்டியப்பன் காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர் லாரி டிரைவராகவேலை பார்த்து வந்துள்ளார் . இவருக்கு ரம்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி ரம்யா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பள்ளி கிராமம் நடுபாலத்தில் அருகில் சந்தேகப்படும் படியாக 2 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர் . இதனால் அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேனாதிபதி(27), சங்கர் (23) என்பதும், இருவரும் […]
கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் . நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் தாலுகா வேட்டைகாரனிருப்பு பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (27)என்பதும் ,அவர் பையில் சிறுசிறு கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகை மாவட்டம் பொரவச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் நேற்று அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் […]
குற்ற வழக்குகளில் கைதான 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் வாய்மேடு அருகே தகட்டூர் நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவருடைய மகன் வைத்தியநாதன் மணல் கடத்தலில் ஈடுபட்டதால் வாய்மேடு காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கைது செய்யப்பட்ட வைத்தியநாதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் […]
காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் படி […]
இடப்பிரச்சினையில் அண்ணனை பீர்பாட்டிலால் குத்திய தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பெருங்கடம்பனூர் மேலவெளி பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார் .இவருக்கு தம்பி சித்ரவேல் என்ற தம்பி உள்ளார் . இதில் அண்ணன்- தம்பி இருவருக்கும் தங்களுடைய சொந்த இடத்தில் செங்கல் காளவாய் போடுவதில் ஏற்பட்ட இடப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவ தினத்தன்று தேவநதி ஆற்றங்கரை வழியில் சென்று கொண்டிருந்த அண்ணன் ரகுபதியை தம்பி சித்ரவேல் […]
நாகை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மக்களை வெறிநாய் கடித்ததில் 18 பேர் காயம் அடைந்தனர், இதனையடுத்து பொதுமக்களை கடித்த வெறி நாயை அங்கிருந்தவர்கள் அடித்துக் கொன்றனர். நாகை புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த வெறிநாய் பேருந்திற்காக காத்திருந்த பொதுமக்களை திடீரென கடிக்க தொடங்கியது. பேருந்து நிலையத்தில் 10க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய் அங்கிருந்து ஓடியது. செல்லும் வழியெல்லாம் மக்களை கடித்தவாறு சென்ற வெறிநாய் மீண்டும் பேருந்து நிலையத்திலிருந்து கடைக்குள் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த […]
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் தொடர்ந்து தமிழகத்தில் உயிரிழந்து வருகின்றனர். நாகை மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளியான எஸ்தர் மேரி என்பவர் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போன்ற சில நாட்களுக்கு முன்பு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. […]
ஆயுத பூஜையை தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி தொடங்கும் நிகழ்வுகள் பூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள சரஸ்வதி ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றனர். வீடுகளிலும் பொது மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவில்களில் குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் சிக்கல் என்ற இடத்தில் […]
நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் குயில் வேட்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குயில்கள் வேட்டையாடப்படுவது கிடைத்த தகவலை அடுத்து வனச்சரக அதிகாரிகள் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்களாச்சேரியில் அதிரடி சோதனை நடத்தினர். வனச்சரக அதிகாரி திரு. குமரேசன் தலைமையிலான குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் பகுதியைச் சேர்ந்த ராகு காரைக்காலைச் சேர்ந்த தங்கையின் மற்றும் அன்பரசன் ஆகியோரை விசாரித்தபோது அவர்கள் குயில் வேட்டையில் ஈடுபட்டது தெரிய […]
சீர்காழி அருகே குடிபோதையில் தாயை கொலை செய்த மகன் 10 மாதங்களுக்குப் பிறகு பிடிபட்டுள்ளார். காவல்துறையிடம் எப்படி சிக்கினார் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருகாவூர் பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி இவர் வீட்டிற்கு அருகே சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாக்கடை அமைப்பதற்காக குடியிருப்பு பகுதியில் குழி தோண்டப்பட்டு அந்த மணல் அருகே உள்ள இடத்தில் கொட்டப்படுகிறது. இந்த நிலையில் மணல் குவியலில் நாய் ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த சீற்றம் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. வேதாரண்யம் கடல் பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 500 பைபர் படகுகள் கடற்கரை […]
மின்சாரம் தாக்கியதால் இரண்டு மாடுகள் உயிரிழந்தது அவற்றை காப்பாற்ற சென்ற பெண்ணும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகள் சீதாராமன். இவர் நேற்று காலை வீட்டில் வளர்ந்து வரும் இரண்டு பசுக்களை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள வயலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இது தெரியாமல் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் மின் கம்பிகளை மிதித்து விட்டது. இதனால் […]
நாகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் சொந்த செலவில் கிடங்கு அமைத்துக் கொடுத்த விவசாயிகள் அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் வீதிகளில் நெல்லைக் கொட்டி காத்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் குறுவை அறுவடை நடைபெற்று வருவதை தொடர்ந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கு 80 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதி […]
நாகை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இளக்கை தாண்டி முழுமையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு, அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில தினங்களாக நாகை மாவட்டத்தில் […]