பிரிட்டனில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நடந்த உரையில் அவையில் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்த பிரதமரை அவைத்தலைவர் சத்தமிட்டு உட்கார வைத்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பிற பணிகளை செய்வது தொடர்பில் விவாதம் நடந்துள்ளது. அப்போது எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தொடர்ந்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் பிரதமர் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அவர்களை எதிர்த்து மீண்டும் கேள்விகளை கேட்டார். எனவே, அவைத் தலைவரான லிண்ட்சே, பிரதமரிடம் எதிர்க்கட்சியினர் எழுப்பிய […]
Tag: நாடாளுமன்றம்
ஜப்பான் நாடாளுமன்ற கீழவையானது கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையை கலைத்துள்ளார். குறிப்பாக 11 நாட்களுக்கு முன்பு முன்னாள் பிரதமரான யோஷீஹிடே சுகாவிடம் இருந்து பதவியை பெற்றுள்ளார். தற்பொழுது புமியோவின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் பெரும்பான்மையை உறுதி செய்யும் வகையில் நடாளுமன்றத்தின் கீழவையை கலைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் கீழவைக்கு வரும் 31 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இதனை […]
அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவப் படைகளை திரும்பப்பெற்றதை அடுத்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபன்கள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தான் அரசு, தாலிபன்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாலிபன்கள் இடைக்கால அரசை அமைத்தனர். இதைத்தொடர்ந்து அந்நாட்டு அதிபராக இருந்த கானி வெளியேறினார்.அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றியது தாலிபன் அமைப்பு கைப்பற்றியாது. சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய அரசால் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக […]
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பெகாசஸ் வேளாண் திட்டங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதை மக்களுக்கு தெரிவிக்கவே இந்த பேரணியை தொடங்கி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகின்றது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்கட்சிகள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு என பல்வேறு காரணங்களை காட்டி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தொடரில் நாடு முழுவதும் 2019 இல் மட்டும் 1775 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் 2019 மனவளர்ச்சி […]
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ரகளையால் 133 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19ம் தேதி முதல் வரும் 13ம் தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் மற்றும் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் திட்டமிடப்பட்ட 107 மணி நேரத்தில் 18 மணி நேரம் மட்டுமே நாடாளுமன்றம் நடந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும் என பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் கடந்த ஆறு வருடங்களில் மட்டும் 22 ஆயிரம் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெண் உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 77 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டதாகவும் கடுமையான தண்டனைகள் இல்லாததால் குற்றங்களும் அதிகரித்து வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான […]
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளின் காரணமாக பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தற்போது பெகாஸஸ் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த எட்டு நாட்களாக இந்த விவகாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடிய உடன், நேற்று மாலை எதிர்க்கட்சிகள் காகிதத்தை கிழித்து எரிந்ததற்காக ஆளும் கட்சிகள் […]
பெகாசஸ் வேவு பார்க்கும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று, அனைத்து எதிர்க்கட்சிகளும் வேண்டுகோள் வைத்த நிலையில், ஒன்றிய அரசு விவாதிக்க தயாராக இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான சட்டங்களை இயற்றுவதற்கு மட்டுமே நாடாளுமன்றத்தை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில் 14 எதிர்க்கட்சி எம்எல்ஏ மற்றும் எம்பி களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில் 14 எதிர்க்கட்சி எம்எல்ஏ மற்றும் எம்பி களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்திய பிறகு கொட்டும் மழையில் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க […]
செல்போன் ஒட்டுக்கேட்பு சர்ச்சையால் இன்றும் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த பிரச்சினை நீடிப்பதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக முடங்கியுள்ளன. ராகுல்காந்தி உள்ளிட்டோரின் போன் ஒட்டு கேட்பது தொடர்பாக விளக்கம் கேட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி […]
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனையடுத்து இடைத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களைப் பிரதமர் மோடி மக்களவையில் அறிமுகம் செய்து வைக்க முயன்றபோது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்பட்டது. இதன்பிறகு மாநிலங்களவையில் பிரதமர் மோடி புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்க முயன்றார். அப்போதும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். […]
இலங்கை எம்.பி. சிறீதரன் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் கேட்டு கொண்டுள்ளார். பாகிஸ்தான், சீனா நிறுவனங்கள் யாழ்ப்பாணம் தீவுப்பகுதிகளை நோக்கி அடியெடுத்து வைப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. சிறீதரன் உரையாடலின் போது குற்றம் சாட்டியுள்ளார். சீனாவுக்கு நெடுந்தீவில் 80 ஏக்கர், சீனாவின் புதிய நட்சத்திர விடுதியினை யாழ் பழைய கச்சேரியில் அமைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் எம்.பி. சிறீதரன் பாகிஸ்தான் தூதுவர் அண்மையில் யாழ்ப்பாணம் […]
கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட்டின் விலை வெகுவாக உயர்ந்ததால், ஸ்வீடன் நாட்டினுடைய பிரதமரின் ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஸ்வீடன் நாட்டிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீட்டுவசதித் துறையில் மிகவும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட்டின் விலைகள் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே ஸ்வீடனின் பிரதமராக இருந்து வரும் ஸ்டீபன் தலைமையிலான அரசாங்கம் வீட்டு வசதி துறையை ஒழுங்குபடுத்துவதற்கு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் […]
3 மாதங்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஜப்பான் நாட்டில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையில் அமைந்த தாராளவாத ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஜப்பானின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. மேலும் இந்த கூட்டத்தொடரை 3 மாதங்களுக்கு நீட்டிக்க எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . இந்த கூட்டத்தொடரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கும் நடைபெற உள்ள […]
டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது உள்ள நாடாளுமன்றம் 94 ஆண்டுகள் பழமையானது. இது கட்டும்போது 83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முக்கோண வடிவ நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்காகச் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதி நவீன வசதிகளுடன் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம் […]
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கேபிடால் கட்டிடத்தின் முன்பு மர்மநபர் தாக்கியதில் அதிகாரி உட்பட சக ஊழியர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். அமெரிக்கா அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன்பு மர்ம நபர் ஒருவர் செரான் என்ற நீல நிற காரில் வேகமாக வந்து பாதுகாப்பு பணியில் இருந்த 2 அதிகாரிகளின் மீது மோதியதால் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் காரிலிருந்து ஓட்டுநர் கீழே குதித்து அதிகாரியை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உயிரிழந்தவர் 18 […]
தமிழக மாநில அவை கூட்டத்தில் எம்பி நரேந்திர ஜாதவ் நாடாளுமன்றத்திற்கு ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து வந்துள்ளார். தமிழக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவெடுத்தனர்.முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ஆம் தேதி குடியரசுத் தலைவர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்த முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும் என்றனர் . மேலும் இரண்டாவது கூட்டத் தொடர் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று […]
சிரியாவில் வான் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாரான நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன் திடீரென தாக்குதலை ரத்து செய்தார். சிரியாவில் பிப்ரவரி 26-ஆம் தேதி அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடைபெற்றது .அதில் முதல் தாக்குதல் முடிந்த 30 நிமிடத்தில் இரண்டாவது தாக்குதலை நிகழ்த்தும் நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன்தீடிரென அந்த தாக்குதலை நிறுத்துமாறு அறிவித்தார். ஏனெனில் இரண்டாவது தாக்குதல் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் ஒரு பெண்மணியும் சில குழந்தைகளும் உள்ளதாக அதிகாரிகளின் தரப்பிலிருந்து ஜனாதிபதிக்கு தெரியபடுத்தினார். […]
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி செய்ததாக தகவல் வெளியானதால் தீவிரமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி பெற்றதால் கடந்த ஜனவரி 6 ந் தேதி சான்றளிப்பதற்காக நாடாளுமன்றம் ஒன்றுகூடியது .அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அந்த வன்முறையில் ஒரு போலீஸ் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மார்ச் 4 ஆம் […]
நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்புவது உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசுக்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவி சேனல்கள் உள்ளது. இந்நிலையில் ராஜ் டிவி லோக்சபா டிவி ஒன்றாக இணைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் பொருத்தப்படும் என்றும், சன்சத் டிவி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டிவிக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓராண்டு அந்த பணியை […]
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி மீண்டும் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியல், ரயில் மறியல் போன்றவற்றில் ஈடுபட்டனர். டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை ஊருக்கு செல்வதில்லை என்று உறுதியாக உள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் மத்திய அரசு வேளாண் சட்டங்களை […]
சம்மதமின்றி ஆறு நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்த வாலிபருக்கு கனடா அரசாங்கம் நிரந்தர குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. கனடாவிற்கு முனைவர் பட்டம் பெறுவதற்காக மமாடி ஃபாரா கமாரா என்ற நபர் மாணவர் விசாவில் வந்துள்ளார். ஒருநாள் போலீசாரின் துப்பாக்கியை ஒரு கருப்பின இளைஞர் பறித்துச் சென்றார். இதனைப் பார்த்த மமாடி ஃபாரா கமாரா உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு அடைத்துள்ளார். அதன் பிறகு அவர் தன் வீட்டிற்குச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பின் அவரது வீட்டிற்கு […]
நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பேசிய வார்த்தைகள் நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று நடந்தது. அதில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தனது ஆவேசமான உரையாடல் அவையும், ஆளும் கட்சியையும் அதிர வைத்தார். குடியரசு என்றால் என்ன என்று தொடங்கி ஒடுக்குமுறை என்பது கோழைத்தனம். அரசு எப்படி கோழைத்தனமாக செயல்படுகிறது. சிஏஏ போராட்டம், விவசாயிகள் போராட்டம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி, நீதித் துறையின் வீழ்ச்சி என பல விஷயங்களைப் பற்றி மிக ஆவேசமாக […]
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 29-ஆம் தேதி தொடங்கும் என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை தெரிவித்துள்ளது. வருகின்ற 29 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 17-ஆம் […]
அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘Ractopamine’ வீட்டு மருத்துவம் என்ற சேர்மானம் பொருள் கலந்த பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பன்றி இறைச்சியை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலும் சீனாவிலும் தடை செய்யப்பட்டுள்ள இந்த இறைச்சிக்கடையில் அரசு […]
காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு சத்யபிரதா சாகு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரசைை சேர்ந்த திரு வசந்த் குமார் காலமானதை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட […]
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அதிக அளவு அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுப் பணியில் இருப்பவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் வெளியான […]
நாடாளுமன்ற மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே இன்றுடன் நிறைவுபெற்று அவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி அன்று தொடங்குகிறது. 10 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ள கூட்டத்தொடரில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும். 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாநிலங்களவை தலைவர் திரு. வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே புதிய வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் […]
நீட் தேர்வை எதிர்த்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு காரணமாக பல்வேறு தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் நீட் தேர்வு தொடர்பாக போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக, மக்களவையில் திமுக குற்றம்சாட்டிவிட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “நீட் தேர்வை தடை […]
நாட்டையே அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இடையே இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் கூட இருக்கின்றது. இந்த முறை நான்கு மணி நேரம் தான் ஒரு அவை கூட இருக்கிறது. நாற்பது மசோதாக்கள் வரை எடுத்துக் கொள்வது சாத்தியமா ? என்ற கேள்வியும் எழுந்து இருக்கின்றது. பொதுவாக மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர் என 3 வகையான கூட்டத்தொடர்கள் இருக்கிறது. இதில் பெரிய கூட்டத்தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர். மழை மற்றும் குளிர் […]
மழைக்கால கூட்டத்தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு தண்டனை விதிக்கும் மசோதா, எம்பிக்களின் ஊதியத்தை ஒரு வருடத்திற்கு 30% குறைப்பதற்கான மசோதா, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விரும்பிய இடத்தில் விருப்பமான விலைக்கு விற்பதற்கு வகை செய்யும் மசோதா போன்ற திட்டங்கள் குறித்து, நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெற உள்ளது. […]
பனி பாறைகளில் மோதி கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை போல நாட்டிலுள்ள வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதார சரிவு, சீன ஊடுருவல் அனைத்து பிரச்சினைகளும் மக்களின் கவனத்திற்கு வரும் என்றும் பிரதமர் மோடி அவர் கேட்க விரும்பியதை மட்டும் இனிமேலும் தொடர்ந்து கேட்க முடியாது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி வார விடுமுறை இன்றி வரும் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ள […]
நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பதவி விலக கோரி பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற பேரணியில் பல்லாயிரக்கணக்கான மகளிர் அமைப்பினர் பங்கேற்றனர். பெலாரஸ் நாட்டின் அதிபராக கடந்த 26 ஆண்டுகளாக அலெக்சாண்டர் லூகாஸ்ஸன்கோ பதவி வகித்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் தில்லுமுல்லு அரங்கேற்றி அவர் வெற்றி பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ஆசிரியை சிகார் […]
டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தின் ஆறாவது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது பற்றி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் முதல்கட்ட விசாரணையில் கூறுகையில், “காலை 7.30 மணியளவில் நடந்த இந்த தீ விபத்து, மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம். உடனே தகவல் […]
நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கின்ற இணைப்பு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர், ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்றத்திற்கு சில உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்த நிலையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உரை நிகழ்த்தினார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் (Madrid) உள்ள நாடாளுமன்றத்தில் 350 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதன் காரணமாக பெரும்பாலான உறுப்பினர்கள் அவைக்கு வரவே இல்லை. அமைச்சர்கள் 5 பேர் மற்றும் உறுப்பினர்கள் 28 பேர் மட்டுமே வந்திருந்தனர். இருப்பினும் உறுப்பினர் இல்லாத வெறும் அவையில் பேசிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், அச்சுறுத்து […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். டெல்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 300 பேருக்கு டெல்லி வன்முறையில் தொடர்பு உடையது தெரியவந்துள்ளது.வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவது இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டனர். வன்முறையில் மசூதிகள் , கோவில்கள் என பாகுபாடுயின்றி அனைத்தும் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து வருகிறார். வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவதாக கூறுவது தவறு இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது. வட கிழக்கு டெல்லியில் 25ஆம் தேதிக்கு பின் எந்தவிதமான வன்முறையும் நடைபெறவில்லை. டெல்லி வன்முறை வைத்து அரசியல் செய்வது மட்டும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. டெல்லி வன்முறையில் […]
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து வருகின்றார். நாடாளுமன்றதில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இந்த வன்முறை […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா இன்று பதிலளிக்க இருக்கின்றார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் […]
டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மார்ச் 11ம் தேதி நடைபெறும் விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பதிலளிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க […]
டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும், மக்களவை மதியம் வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் நேற்று அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது.இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் , கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று […]
இலங்கை நாடாளுமன்றத்தை திடிரென்று கலைத்தார், அந்நாட்டின் அதிபரான கோத்தபய ராஜபக்சே, அப்பொழுது அவர் தேர்தல் நடைபெறும் தேதியையும் தெரிவித்தார். இலங்கைக்கு 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து அத்தேர்தல் முடிவில் செப்டம்பர் மாதம் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக நேற்றிரவு திடீரென அறிவிப்பு விடுத்தார். இந்நிலையில் அரசாணையும் உடனடியாக வெளியானது. ஏப்ரல் 25ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், […]
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. […]
டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் […]