Categories
உலக செய்திகள்

இனி 2 டோஸ் போட்டிருந்தால் மட்டுமே அனுமதி..! எம்.பி.க்களுக்கு தடுப்பூசி கட்டாயம்… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு..!!

கனடாவில் கொரோனா தடுப்பூசி நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கனடாவில் கொரோனா தடுப்பூசியை நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்கள் கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |