முந்தைய பிரத்தானிய உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்துவது என்னும் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு உருவான நிலையில் இந்த விஷயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பிரத்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் தொடர்பான வழக்கில் நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் இந்த திட்டம் ஐ.நாவின் அகதிகள் ஒப்பந்தத்தையோ அல்லது […]
Tag: நாடுகடத்தல்
சுவிட்சர்லாந்தில் காவலில் இருந்த இலங்கை தமிழ் புகழிட கோரிக்கையாளர்கள் மூவர் பலியானதை தொடர்ந்து கட்டாயமாக தமிழர்களை நாடு கடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று மக்கள் பேரணி நடத்திவருகிறார்கள். பேசல் நகரிலிருக்கும் நாடு கடத்தும் சிறையான Bässlergut-க்கு முன்பாக மக்கள் பதாகைகளோடு நின்று தமிழ் மக்களை சுவிசர்லாந்து அரசு நாடு கடத்துவதை எதிர்த்து முழக்கமிட்டனர். இலங்கையுடன் சுவிட்சர்லாந்து அரசும் சேர்ந்து அநியாயமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். சிறை காவலிலிருந்து மூன்று தமிழ் புகழிட […]
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை விசாரணைக்காக அமெரிக்காவிற்கு நாடுகடத்தபிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலமாக 2010-ஆம் ஆண்டு ஈராக், அமெரிக்க போர்கள் பற்றி அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் 2012 ஆம் ஆண்டு ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். அதன்பின் தொடர்ந்து ரகசியங்களை வெளியிட்டு இருப்பதால் அடைக்கலம் தர ஈக்வடார் தூதரகம் மறுத்துள்ளது. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் […]
லண்டனில் இருந்து நாடுகடத்தப்படும் நிரவ் மோடியை இந்தியாவில் உள்ள சிறையில் அடைப்பதற்கு சிறப்பு அறை தயாராக உள்ளது. குஜராத்தில் மிகப்பெரிய பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ் மோடி. இவர் முறைகேடாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடிதத்தைப் பெற்று பல்வேறு வங்கிகளில் அதனை காட்டி 14 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளார். மேலும் எந்த வங்கியிலும் வாங்கிய கடனை சரியாக திருப்பித் தரவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட வங்கி நிர்வாகிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில் […]
ஊரடங்கு மீறிய குற்றத்திற்காக 10 இந்தியர்கள் சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்டு மீண்டும் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப்பூர் அரசு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பித்தது. சிங்கப்பூரில் இதுவரை 45,961 மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்த நிலையில் 26 நபர்கள் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு ,மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் பலவிதமான […]