திருச்சி மாவட்டத்தில் 18 வயது இளைஞர் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள தாதகவுண்டம்பட்டியில் பாலசுப்பிரமணியன்(18) என்பவர் வசித்து வந்தார். இவர் இருசக்கர பழுதுபார்க்கும் தொழிலை செய்து வருகிறார். இவரின் தந்தை அழகர். இந்நிலையில் பாலசுப்பிரமணியனுக்கும் தந்தை அழகருக்கு நேற்று இரவு மது போதையில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இரவு 9 மணிக்கு வீட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை பாலசுப்ரமணி எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தாடைப் பகுதியில் சுடப்பட்ட […]
Tag: நாட்டு துப்பாக்கி
சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்குட்டை பகுதியில் சிலர் நாட்டுத் துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் சென்று வேட்டையாடுவதாக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகள் முருகன், தேவராஜ் சென்னிமலை ஆகியோர் அந்த பகுதிக்கு சென்று பெருமாள் என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெருமாள் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருந்ததை போலீஸ் ஏட்டுகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த மாதன் என்பவருடைய வீட்டிலும் போலீஸ் […]
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் உரம்பு வண்ணான்கடு பகுதியில் விவசாயி ஒருவர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உரம்பு வண்ணான்காட்டை சேர்ந்த கருப்பண்ணன்(42) என்பவரது வீட்டை அதிரடி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து […]
நாமக்கல் மாவட்டத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூரை அடுத்துள்ள வாழவந்தி நாடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஓட காட்டுப்பட்டி பகுதியில் ஒருவர் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் விஜயகுமார்(35) என்பவர் அவரது வீட்டிற்கு பின்புறத்தில் நாட்டு துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் அவரை […]