தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முதலில் நாகை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் தொடர் கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
Tag: நான்கு மாவட்டங்கள்
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில், அதாவது கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கன மழை பெய்யலாம் என்றும் , நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை மறுநாள் அதிக கன மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இந்த நான்கு […]
வீட்டுவசதி துறையில் மதுரை, கோவை, ஓசூர் ,திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குழுமங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதி செய்யும் வகையில் நகர வளர்ச்சி, குழுமங்களை அரசு அமைத்து வருகின்றது. அந்த வகையில் 10 லட்சம் பேர் வசிக்கும் மதுரை கோவை, ஓசூர், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நகர வளர்ச்சி குடும்பங்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மேலும் அங்கு தேவையான பணியிடங்களை நிரப்புவதற்கு சிறப்பு […]
தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது. இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வகையான வைரஸை மூன்று மணிநேரத்தில் கண்டறியும் வசதிகளைக் கொண்ட 12 […]
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, பின்னர் தொற்று குறைந்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் திங்கட்கிழமை, அதாவது ஜூன் 28 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் உடன் ஜூலை 5ஆம் […]