டிராக்டர் கட்டுபாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில் டிரைவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவர் மரவள்ளி கிழங்குகளை ஏற்று கொண்டு கலங்கானியில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டரின் டிரெயிலர் கழன்றுள்ளது. இதனால் டிராக்டர் கட்டுபாட்டை இழந்து சாலை தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது. இந்த […]
Tag: நாமக்கல் மாவட்டம்
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையம் அடுத்துள்ள பெருச்சாக்கவுண்டன்பாளையம் பகுதியில் முத்தான்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பல்வேறு சிகிச்சை பெற்றும் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றம் இல்லாததால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைபார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக முத்தனை மீட்டு பரமத்திவேலூர் […]
மகளின் வாழ்க்கையை எண்ணி மனமுடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ராசிபாளையத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பாயி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மகளுக்கு கடந்த சில ஆண்டுக்கு திருமணம் முடிந்து மருமகன் இறந்து விட்டதால் மகள் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். இதனையடுத்து மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என பாப்பாயி […]
நன்றாக படிக்கும் படி பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் மேற்கு கொடிகம்பம் பகுதியில் செந்திளுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி சரியாக படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருந்ததால் பெற்றோர் நந்தினியை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
சைக்கிள் மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள குப்பிச்சி பாளையம் பகுதியில் மாரியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு சைக்கிளில் பொய்யேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் திடீரென சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த கோரவிபத்தில் பலத்தகாயமடைந்த மாரியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் […]
கேபிள் ஆபரேட்டரை வழிமறித்து கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் தா.பேட்டை மாகதேவி கிழக்கு தெருவை சேர்ந்த ராஜா நாமக்கல் மாவட்டத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜா கேபிள் பணம் வசூல் செய்வதற்காக பவித்திரம் புதூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பவித்திரம் புதூர் தெற்கு வீதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற வாலிபர் திடீரென ராஜாவை வழிமறித்துள்ளார். இதனையடுத்து ராஜாவை ஆபாச வார்த்தைகளில் திட்டியதோடு […]
மாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நகரின் மையத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சிநேயர் கோவில் உள்ளது. இந்நிலையில் மாசி மாத 2-வது சனிக்கிழமையான நேற்று ஆஞ்சினேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது. அதன்படி கோவில் அதிகாலை முதலே திறக்கப்பட்டு பட்டாச்சாரியார்கள் தலைமையில் சாமிக்கு எண்ணெய், மஞ்சள், சீயக்காய், சந்தானம்,பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து […]
பயிற்சி நர்சை கடத்தி திருமணம் செய்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஏஜெண்டை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒருவர் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பயிற்சி நர்சை தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நர்சை கடத்தியது நாமக்கல் […]
திட்டம்போட்டு விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 32 லட்சம் மற்றும் 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஆர்.கே.எம் காம்ப்ளக்ஸில் தரைத்தளம் மேல்தளம் என மொத்தம் 6 வீடுகள் உள்ளது. இந்நிலையில் தரைதளத்தில் விசைத்தறி உரிமையாளரான விமல் என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று விமல் தனது உறவினர் ஒருவரின் இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக குடும்பத்தினரோடு துக்கம் விசாரிக்க […]
வயிற்று வலி தாங்க முடியாமல் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள காவேரி வசந்தநகரில் சின்னராசு என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணிமேகலை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சின்னராசு கடும் வயிற்றுவலி அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில் வயிற்றுவலி தாங்க முடியாமல் தவித்த சின்னராசு […]
குடும்பத்தகராறில் மனமுடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள கொத்தமங்கலத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்(25) மற்றும் அவரது மனைவி ராஜகுமாரி(22) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மோகன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு […]
வேகத்தடையினர் தவறி விழுந்து ஜோதிடர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஒருவந்தூர் பாவடித்தெருவில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஜோதிடரான இவர் சம்பவத்தன்று மொபட்டில் காட்டுப்புத்தூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவந்தூர் அருகே இருந்த வேகத்தடையில் ஏறியபோது திடீரென மொபட் கட்டுபாட்டை இழந்துள்ளது. அப்போது நடராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக நடராஜை மீட்டு […]
ஏரிக்கரை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைக்க முயன்ற நபரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள வீ.மேட்டூர் அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபு, போலீஸ் ஏட்டு கூத்தகவுண்டன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே ஒரு வேனில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்கி வைத்து கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் […]
ஆஞ்சிநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில் 48 லட்சத்து 40 ஆயிரத்து 249 ரூபாய் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இந்தக் கோவிலில் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு […]
ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்ற அண்ணன் தம்பி 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள தொட்டிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அக்கரைப்பட்டியை சேர்ந்த நந்தகுமார்(24) மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையறிந்த மாணவியின் தந்தை உடனடியாக வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவியை […]
மதுபழக்கத்தை கைவிட முடியாமல் தவித்த விவசாயி பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள திடுதல் கவுண்டம்பாளையம் பகுதியில் பழனிசாமி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும், பிரவீன் என்ற மகனும் பிரனிசா மகளும் உள்ளனர். இந்நிலையில் பழனிசாமிக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மதுபழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். மேலும் மது பழக்கத்தை […]
வழக்கம்போல நடைபெற்ற பருத்தி மற்றும் எள் ஏலத்தில் மொத்தம் 9 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் பிடி ரகம் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 7,500 ரூபாயில் இருந்து 10,689 ரூபாய் வரை விற்பனை செய்யபட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2,50,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனையடுத்து நடைபெற்ற எள் ஏலத்தில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு 101.10 முதல் 128.70 வரையிலும், […]
திமுக வேட்பாளர் அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்திருந்த மொபட் மற்றும் பேனர்களை தீ வைத்து எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் 15-வது வார்டில் தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சந்திரசேகர் தேர்தலுக்காக மேட்டுத்தெருவில் தேர்தல் அலுவலகம் ஒன்றை அமைத்து அங்கு விளம்பர பிளக்ஸ், பேனர்கள் கட்டியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் அங்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் சென்றுள்ளனர். இதனையடுத்து அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் மற்றும் அருகே நின்று கொண்டிருந்த […]
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நாகரட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வெற்றிபெற்ற வேட்பாளார்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன்படி 1-வது வார்டில் த மகாலட்சுமி(அ.தி.மு.க.), 2-வது வார்டில் ந.சாரதி(தி.மு.க.), 3-வது வார்டில் அ.சர்மிளா(தி.மு.க.), 4-வது வார்டில் ந பழனிசாமி(வி.சி.க.), 5-வது வார்டில் ஸ்ரீ வித்யா பாஸ்கரன்(தி.மு.க.), 6-வடு வார்டில் சு.க.சரவணன்(தி.மு.க.), 7-வது […]
திமுக சார்பில் போட்டியிட்ட அக்கா-தங்கை மற்றும் அதிமுக சார்பில் தாய்-மகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி குமாரபாளையம் 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் புஷ்பா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து 2-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணவேணி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் வெற்றிபெற்ற 2 பேரும் அக்கா-தங்கை ஆவார்கள். இதபோல் அதிமுக சார்பில் 29-வது வார்டில் போட்டியிட்ட தனலட்சுமியும், 30-வது […]
கார் கட்டுபாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள எல்லிபாளையம் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகின்றனர். லாரி அதிபரான இவரது மகன் மெய்யப்பன்(20) கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மெய்யப்பன் தனது நண்பர்களான கவுதம் (19), நரேந்திரன் (20), சுனில்நாத் (20), கோபி (20) ஆகியோருடன் காரில் புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணியில் வசிக்கும் […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விரக்தியடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள பொம்மம்பட்டி வடக்கு தெருவில் ரங்கசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்கள் முன்பு காலில் அடிபட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக பல சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த முதியவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு […]
சாலையை கடக்க முயன்ற கணவன்-மனைவி மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அருகே உள்ள தண்ணீர் பந்தல் காடு பகுதியில் முத்துசாமி (80) என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துசாமி மற்றும் அவரது மனைவி தங்கம்மாள் (75) ஆகிய இருவரும் வீட்டிற்கு அருகே நெடுஞ்சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையை கடக்க முயன்றபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனம் கட்டுபாட்டை […]
லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பாவனை பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். இவரும், இவரது மனைவி சிவகாமி சுந்தரியுடன் சேர்ந்து அப்பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகாமி சுந்தரி கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சரக்கு வாகனத்தில் டிரைவர் துரைக்கண்ணன் மற்றும் பணியாளர் பிரகாஷ் ஆகியோர் சேலத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கடைக்கு […]
விறுவிறுப்பாக நடந்த உழவர் சந்தையில் 24½ டன் காய்கறிகள் சுமார் 8½ லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 24½ டன் காய்கறிகளும், 3¾ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். இந்நிலையில் […]
ஆம்புலன்ஸ் மூலம் வாக்களிக்க சென்ற மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை அருகே உள்ள கொளந்தான் தெருவில் லட்சுமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலக்குறைவால் லட்சுமி வீட்டிலேயே படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூதாட்டி வாக்களிப்பதற்காக சில அரசியல் கட்சியினர் லட்சுமியை ஆம்புலன்ஸ் மூலம் ஏ.எஸ்.பேட்டைக்கு அழைத்து சென்றனர். […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடக்கிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் திருச்செங்கோடு நகராட்சியில் 88 வாக்குசாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அதிகாரிகள் பத்திரமாக பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைத்துள்ளனர். இதேபோல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் முன்னிலையில் […]
இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள உழவர்பட்டியில் முருகேசன் (50) என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழில் செய்து வரும் இவர் தனது மகன் ஜீவா (24) மற்றும் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு நன்செய் இடையாற்றில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பொய்யேரி […]
தந்தை அதிக கடன் வாங்கியதால் மனமுடைந்த மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வடுகப்பட்டியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சக்திவேல் (வயது 20). இவர் டிப்ளமோ முடித்து விட்டு விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்திவேல் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்த அவரது தந்தை சுப்பிரமணி இது குறித்து கேட்டுள்ளார். அப்போது சக்திவேல் தந்தையிடம் அதிக கடன் […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி அருகே உள்ள வள்ளுவர் காலனியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவியும் அக்ஷயா(7) பிரகதி(3) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டம் களங்காணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நாமக்கல் பாச்சல் மேம்பாலத்தில் இருந்து […]
சாலையை கடக்க முயன்ற பொது இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள வடகரை ஆத்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சண்முகம் என்பவருடன் மொபட்டில் கரூருக்கு புறப்பட்டார். இதனையடுத்து பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள நாமக்கல்-கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கரூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து 2,600 டன் தீவனங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,600 டன் தவிடு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் […]
துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஊழியர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கணேசபுரத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியசீலன் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியின் பங்கேற்றுவிட்டு கந்தம்பாளையத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெருமாபட்டி அருகே சென்று கொண்டிருந்த […]
சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வெண் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகின்றனர். சரக்கு வேன் டிரைவரான இவர் சம்பவத்தன்று அட்டைகளை சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு வெப்படைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அழகாபளையம் பெருமாள் கோவில் காடு அருகே சென்று கொண்டிருந்த பொது சரக்கு வேனில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சண்முகவேல் உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். இதனையடுத்து […]
கண்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லியாம்பாளையம் புதூர் பகுதியில் வசித்து வரும் குமாரசாமியின் மனைவி குழந்தாய்(80) கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென மாயமாகியுள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தினர் மூதாட்டியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது கிழவிக்காடு பகுதியில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே குழந்தாயியின் காலணி மற்றும் ஊன்று கோல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியில் சதீஷ்குமார் (வயது 35) என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருந்த மற்றொரு இருசக்கர வாகனம் சதீஷ்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷ்குமாரை அப்பகுதியில் இருந்தவர்கள் […]
6ஆம் வகுப்பு படித்து விட்டு 13 ஆண்டுகளாக வக்கீல் என கூறி ஏமாற்றிய மாற்றுதிறனாளியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கூட்டபள்ளி பகுதியில் மோகன கண்ணன் (40) என்பவர் வசித்து வருகின்றார். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 13 ஆண்டுகளாக தான் ஒரு வக்கீல் என கூறி நடித்து குமாரபாளையம் நீதிமன்றத்திற்கு அடிக்கடி சென்று வருவதோடு மட்டுமல்லாமல், பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகன கண்ணனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த […]
17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காலனியில் சதீஷ்குமார் (20) என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளதால் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது சிறுமியின் வயதை […]
மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள வீரணம்பாளையத்தில் சுகுமார் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு அவரது வீட்டிற்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் மின்கம்பியில் இருந்து நெருப்பு பொறி வருவதை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெகுநேரமாகியும் சுகுமார் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி தென்னந்தோப்பிற்கு சென்றனர். அப்போது மின்கம்பியில் தென்னை மட்டை ஒன்று […]
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி அடுத்துள்ள வெய்யக்காஞ்சாம் புதூர் பகுதியில் பழனியப்பன் (75) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனியப்பன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக […]
மரக்கட்டைகளை துளையிடும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள முத்தானூரில் கஜேந்திரன் (வயது 29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஷோபா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிறுவனத்தை அதே பகுதியை சேர்ந்த குமார் (37) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கஜேந்திரன் டிரில்லர் இயந்திரத்தின் உதவியுடன் மரக்கட்டைகளை துளையிட்டு கொண்டிருந்துள்ளார். […]
விசைத்தறி தொழிலாளி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதர்க்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தேவனாங்குறிச்சி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி சென்ற பிரகாஷ் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. இதனையடுத்து கருவேப்பன்பட்டி அருகே உள்ள கடப்பான்காடு பகுதியில் பிரகாஷ் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு […]
டிராக்டரில் இருந்து கீழே விழுந்த வடமாநில இளம்பெண் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள பரளி பகுதியில் தனியார் கோழிப்பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் பணிபுரியும் வடமாநில பெண்களை டிராக்டருடன் இணைக்கப்பட்ட டிப்பரில் ஏற்றிக்கொண்டு மற்றொரு பண்ணைக்கு சென்றுள்ளனர். அப்போது டிராக்டரின் பின்புறம் நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹிராமணி லஹாரா […]
வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 10 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, ஓடுவன்குறிச்சி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, அரியாக்கவுண்டம்பட்டி, ஊனத்தூர், பேளுக்குறிச்சி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டுவந்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று போட்டிபோட்டு […]
கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கொளக்காட்டுப்புதூர் பகுதியில் பாலசுப்பிரமணி (வயது 63) என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கரும்பு தோட்டம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சித்தும் பலன் அளிக்காததால் உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு […]
பேருந்து நிறுத்தத்தில் நிற்க மறுத்த தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெண்ணந்தூர் அருகே வெள்ளை பிள்ளையார் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய பயணி மடம் பேருந்து நிறுத்தம் வரை டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் நடத்துனர் மடம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து நிற்காது என கூறி அந்த பயணியை நடுவழியிலேயே இறக்கி […]
பயிர் கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன், நகை கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கந்தசாமி, […]
வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் 50 லட்சத்திற்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 1,500 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]
நண்பரின் முகநூல் காதலியுடன் பேசியதால் வாலிபரை தாக்கிய 3 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நபரை வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியில் மணிகண்டன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் தொழிலாளியான பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான சுபாஷ் என்பவர் முகநூல் மூலம் சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த வந்த நிலையில் அதே பெண்ணுடன் சுபாஷுக்கு […]
ஆர்.சி.எம்.எஸ். சங்க வளாகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் 18 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 533 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல […]