சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் விநியோகம் செய்ததில் ரூ.26 3/4 லட்சம் மோசடி செய்தது குறித்து விநியோகஸ்தர்கள் புகார் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷிடம் வினியோகஸ்தர்கள் நலச்சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், நாமக்கல் மேட்டுத்தெருவில் இயங்கி வரும் எங்களது சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பொருட்களை வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் நாமக்கல் – […]
Tag: நாமக்கல்
பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 12,969 இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் வடமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சைக்கிள்களுக்கான உதிரி பாகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் சைக்கிள் […]
இல்லம் தேடி கல்வி மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2 வருடங்களாக கொரோனா தோற்று காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் தமிழக முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை மேம்பதுத்தவும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள […]
மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பாலப்பட்டி வரை சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகம் வரை மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். […]
மதுபான கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தல் வருகிற 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தேர்தல் நடைபெறும் இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதுபான கடைகளை திறக்கக்கூடாது என அறிவித்துள்ளார். இந்த கடைகளை ஜூலை 7-ம் தேதி முதல் 9-ம் தேதி […]
தொழுநோய் விழிப்புணர்வு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசினர் ஆண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாம் உடற்கல்வி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்டது. இதற்கு தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் ஜெய நந்தினி தலைமை தாங்கினார். இவர் தொழுநோயை சிறுவயதிலேயே கண்டுபிடிக்காவிட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார். அதன்பிறகு தொழுநோய் அறிகுறிகள் இருந்தால் அதை உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் […]
ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது . இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ரயில் நிலையத்தில் அமைந்துள்ள தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த அந்த மூதாட்டியின் சடலத்தை […]
நேற்று நடைபெற்ற ஏலத்தில் 4300 பருத்தி மூட்டைகள் 1 கோடியே 40 லட்சத்துக்கு ஏலம் போனது. செவ்வாய்க்கிழமை தோறும் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுகின்ற நிலையில் நேற்று நடந்தது. இதற்காக நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், வேளாண்கவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்ரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் 4300 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தார்கள். இந்த பருத்தி மூட்டைகளை ஏலம் எடுக்க திருப்பூர், திண்டுக்கல், தேனி, […]
பள்ளிபாளையம் அருகே நூற்பாலை கழிவுநீர் சாக்கடையில் கலப்பதால் இதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே இருக்கும் வெப்படை அடுத்துள்ள பாதரைப் பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் உள்ள நிலையில் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது சாக்கடையில் கலப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் நூற்பாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடையில் கலப்பதை கண்டிக்கும் விதமாக பொதுமக்கள் பாதரை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து போலீசார், தாசில்தார் […]
சாலையில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்து வாலிபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம்-சங்ககிரி சாலையில் அரசு வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கிக்கு அருகே சாலையில் மணிபர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த பாலாஜி, லோகேஸ்வரன், மணி என்ற 3 பேர் அந்த மணிபர்சை எடுத்து திறந்து பார்த்துள்ளனர். அதில் 8 பவுன் தங்க நகை இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் […]
காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துறையூர் செல்லும் சாலையில் கொசவம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை நடத்திய வருகின்ற நிலையில் பழைய சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் இரவு வழக்கம் போல் பணி முடித்துவிட்டு பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு […]
தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான வாங்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 2022-23 கல்வியாண்டில் 01.6.2022 நிலவரப்படி பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாடின் கீழ் இயங்கும் ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப இடைநிலை பட்டதா,ரி முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய […]
தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டார்கள். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேலகவுண்டம்பட்டி அருகே இருக்கும் நறுவலூரை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்த நிலையில் அந்த பசு மாடு நேற்று வீட்டின் அருகே உள்ள எட்டு அடி ஆழம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு பழனிச்சாமி தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்கலைன் இயந்திரத்தின் உதவியோடு தொட்டியின் அருகிலேயே குழி […]
விபச்சாரத்தில் ஈடுபட்ட சேலம் பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் வாலரை கேட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் மாறுவேடத்தில் சென்று பார்த்த பொழுது அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கும் அறைக்குள் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த 40 வயது உடைய பெண் உட்பட மூன்று பெண்களை போலீசார் விசாரணை நடத்தியதில், சேலத்தைச் சேர்ந்த பெண் […]
இளம்பெண்ணிடம் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தர்ஷினி(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து தர்ஷினி குமாரபாளையம் செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் பேருந்தில் அமர்ந்து இருந்த தர்ஷினி தனது கைப்பையில் வைத்திருந்த செல்போன், மற்றும் 8000 ரூபாய் பணம் காணாமல் போனதை கண்ட அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தர்ஷினி […]
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் கலந்து கொள்கிறார். நாமக்கல் மாவட்டத்தில் நாளை விழா ஒன்று நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிகிறார். இந்நிலையில் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் மாநில சம்மைளன செயலாளர் வாங்கிலி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் முதல்வரின் வருகையை முன்னிட்டு நகர எல்லைக்குள் லாரிகள், கண்டெய்னர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க வேண்டாம் […]
நாமக்கலை சேர்ந்த காந்தியவாதி ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் நிற்க போவதாகவும், அதற்கு செலவுக்கு 4809 கோடி கடன் வேண்டும் என்று சென்னை ரிசர்வ் வங்கியில் மனு கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த காந்தியவாதி ஜனாதிபதி தேர்தல் செலவுக்கு 4,809 கோடி கடன் கேட்டு சென்னை ரிசர்வ் வங்கியில் மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் காந்தியவாதி ரமேஷ் என்னும் இந்திய குடிமகனான நான் கடந்த 15.06.2022 அன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் […]
ராசிபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரத்தில் உள்ள ஞானமணி கல்வி நிறுவனங்கள் மற்றும் புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் சார்பாக உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. இந்த மாரத்தானை ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் அரங்கண்ணல் கொடியசைத்து தொடங்கி வைத்ததை அடுத்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தில் ஆரம்பித்த மினி மாரத்தானானது புதுச்சத்திரம் வரை […]
நாமக்கலில் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டமானது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்க மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசியபின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு சார்பில் கொடுக்கப்பட்ட செல்போன்களை வரும் 9-ஆம் தேதி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் […]
வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்குள் நேற்று நல்ல பாம்பு ஒன்று புகுந்து அலமாரியில் பதுங்கி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் […]
சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர். புதுப்பாளையம் கிராமத்தில் அஜித்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]
பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கண்டிபுதூர் பகுதியில் வினோத்(21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்(19) என்ற நண்பர் உள்ளார். இருவரும் ஈரோட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வினோத்தும் சந்தோஷம் இணைந்து கண்டிபுதூர் பகுதியை சேர்ந்த அக்காள் -தங்கையான 17 மற்றும் 15 வயது சிறுமிகளை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளனர். மேலும் இரண்டு பேரும் […]
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பிளக்ஸ் பேனரில் கோரிக்கை எழுதி வந்ததால் பரபரப்பு நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டி அருகே இருக்கும் மேற்கு பகுதியை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் என்பவர் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவராக பணியாற்றி வருகின்றார். இவர் செல்லம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஏற்கனவே மனு கொடுத்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அதிகாரிகளின் […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் கட்டிட மேஸ்திரியான கார்த்திக் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கார்த்திக் அந்த சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் […]
புதுமண தம்பதியினர் மாட்டு வண்டியில் சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பட்டி பகுதியில் ராசா முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனாம்பாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இவர் லண்டனில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அஜித்குமாருக்கும் கௌதமி என்ற பெண்ணுக்கும் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து கோவிலில் இருந்து மணமக்கள் மாட்டு வண்டியில் […]
குழந்தை மீது கார் மோதியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டணம் நடுத்தெருவில் கூலி தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய தருண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தருண் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த காரை நோக்கி தருண் ஓடி உள்ளான். அதனை கவனிக்காத ஓட்டுனர் காரை திருப்புவதற்காக பின்னோக்கி இயக்கியபோது தருண் மீது காரின் சக்கரங்கள் […]
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த யுகேஜி படிக்கும் சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சரவணன்- மனோன்மணி என்பவரின் மகன் கே எம் தக்ஷன். வாலரை கேட் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். தற்போது ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களிலும் தலா 10 க்கும் மேற்பட்ட வார்த்தைகளையும், தமிழ் உயிர் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் அடங்கிய 173 சொற்கள், 100 […]
புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 13 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட இருக்கிறது. இதற்காக ரூபாய் 37 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அமைச்சர் கே.என் நேரு ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது பேருந்து நிலையத்தில் அமைக்கப்படும் கடைகள், பேருந்துகள் நிறுத்தும் இடம் மற்றும் […]
பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதி மீறல் என குற்றம் சாட்டப்பட்டு தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஓய்வுபெறும் நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். இப்போராட்டத்தில் 900 பணியாளர்கள் […]
மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சேதம் அடைந்ததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. பரமத்தி சாலையில் இருக்கும் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் இருக்கும் மரத்தின்கிளை முறிந்து மின்கம்பத்தில் மீது விழுந்ததால் அது முழுமையாக சேதமடைந்தது 22 ஆயிரம் வோல்டேஜ் செல்லும் பாதையில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து. அங்குள்ள ட்ரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் மின் துண்டிக்கப்பட்டது. இதனால் நகராட்சி வளாகத்தில் […]
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், வருகின்ற 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்லும் வாகனங்கள்,சரியான முறையில் பராமரிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்த ஆய்வு நாமக்கல்லில் உள்ள காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் அப்போது ஒவ்வொரு வாகனங்களிலும் முதலுதவி மருத்துவ பெட்டி உள்ளதா? மற்றும் ஓட்டுநர் தகுதிக்கான உரிமை பெற்றுள்ளாரா? […]
மேம்பாலம் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், பள்ளம் தோண்டும் போது எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்திலிருந்து ஆலம்பாளையம் ஆசிரியர் காலனி சாலை வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் டி.வி.எஸ் மேடு தனியார் ஆஸ்பத்திரி அருகே பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென்று பள்ளிபாளையம் நகராட்சிக்கு […]
தனியார் பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திலிருந்து கார் ஒன்று ஆத்தூர் நோக்கி சென்றது. அதேபோன்று ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தபோது ஆயில்பட்டியில் இருக்கின்ற தனியார் கல்லூரி அருகில் வரும்போது திடீரென்று எதிர்பாராத விதமாக காரும், பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பேருந்து, கார் இரண்டும் ரோட்டின் ஓரத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து […]
சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் […]
லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற சமையல்காரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் கரட்டாங்காடு பகுதியில் சமையல்காரரா ன செல்வம்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் ஆயாகாட்டூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி செல்வத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள மணியங்காளிப்பட்டி புது காலனியில் கூலித் தொழிலாளியான முருகேசன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது விஜயலட்சுமி பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகேசன் மதுவில் விஷம் கலந்து குடித்து அப்பகுதியில் இருக்கும் […]
மதுரை சந்திப்பு-தேனி மாவட்டம் போடி ரயில் நிலையம் இடையான 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி பல போராட்டங்களுக்கு பின்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி காணொலி மூலம் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் சென்னையிலிருந்து கனடா, மதுரையிலிருந்து மலேசியா, நாமக்கலிருந்து […]
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்தெடுப்பது என்பது குற்றமாகும். ஆனாலும் பலர் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கின்றனர். இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை வாங்குவதும், விற்பதும் தெரிந்தால் அவர்கள் மீது இளைஞர் நீதி சட்டத்தின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் குழந்தைகளை தத்தெடுக்க […]
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச்சுவர் மீது மோதிய விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சாமிநாதன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 23 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் சங்ககிரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கைலாசம்பாளையம் காவடிகாரன்காடு பகுதியில் அத்தியப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் இன்று இயற்கை மரணம் அடைந்தார். இதனால் அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். அப்போது அவரது பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஒரு கடிதம் இருந்தது. அதில், “கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் எனது முழு விருப்பத்தின் பேரில் எவருடைய தூண்டுதலுக்கும், கட்டாயப்படுத்திற்கும் உட்படாமல் […]
ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டியில் மினி லாரி ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணனை அருள்மொழி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் தம்பதியினருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் […]
விதவை பெண்ணை 4 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 36 வயதுடைய விதவை பெண் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இவர் திருச்செங்கோட்டை சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது இருவரும் வெளியே சென்று வருவது. வழக்கம் கடந்த 19-ஆம் தேதி வீராணம் ஏரி பகுதிக்கு சென்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற […]
கிணற்றில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த மாணவன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பரிதாபமாக இறந்து விட்டான். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் அருகே இருக்கும் பெரியார் நகரைச் சேர்ந்த ஜெகதீசன், கல்யாணி தம்பதியின் மகன் 15 வயதுடைய பூவரசன். இவரின் தந்தை இறந்துவிட்டார். பூவரசன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். கிணற்றில் இறங்கி படியில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]
2 பேருந்துகள் மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று சங்கிரி கோழிப்பண்ணை சாலை பகுதியில் மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது மழை பெய்ததால் அவ்வழியாக வந்த தனியார் பயணிகள் பேருந்து நிலைதடுமாறி கல்லூரி பேருந்தின் மீது மோதி 2 பேருந்தும் அருகில் மரத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் […]
காதலியை கழுத்தை இறுக்கி சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் நொச்சிபட்டியில் தனியார் கோழிப் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் நிறைய பேர் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். அதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அவருடைய நண்பர் 17 வயது சிறுவன் தனக்கும் கோழிப்பண்ணையில் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு […]
வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மருமகன் சரியாக படிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இதனை பார்த்த சுரேந்தர் என்பவர் பிரபாகரனை தட்டி கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லப்பா காலனி பகுதியில் நின்று கொண்டிருந்த பிரபாகரனிடம் சுரேந்திரன் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த விக்னேஷ் என்பவர் சுரேந்தருக்கு ஆதரவாக பேசியுள்ளார். […]
லாரி மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள நல்லெண்ணபட்டியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் போடிநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டார். நேற்று முன்தினம் திருச்சி செல்வதற்காக லதா அலங்காநத்தம் பிரிவிற்கு நடந்து சென்றுள்ளார். இவர் தனியார் மண்டபம் அருகே நடந்து சென்றபோது பின்னால் வேகமாக வந்த லாரி லதா மீது மோதி விட்டு […]
உரிய ஆவணம் இன்றி இயங்கிய 110 வாகனங்களை வட்டார போக்குவரத்து துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து இடங்களிலும் வட்டார போக்குவரத்துதுறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் வடக்கு, தெற்கு மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் ஆகியோர் தலைமையில் வாகன ஆய்வாளர்கள் 3,811 வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் 891 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை […]
திருச்செங்கோட்டில் நடைபெற்ற மகளிர் கைபந்து போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் சேலம் சாலையில் உள்ள திடலில் சென்ற 3 நாட்களாக லீக் முறையில் திருச்செங்கோடு கைப்பந்து கழகம் சார்பாக கைபந்து போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணியும் கோபி பிகேஆர் அணியும் மோதியதில் 2 க்கு 1 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணி […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பெரியபட்டி பழனியப்பா காலனியில் செல்வராஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி(27) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கு ஜெகநாதன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியதர்ஷினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]