தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மலையடிவாரத்தில் 3 வயது மதிக்கத்தக்க மான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தது. அப்போது தெருநாய்கள் ஒன்றுசேர்ந்து அந்த மானை கடித்து குதறியது. இதனால் அந்த ஆண் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து காட்டுப்பகுதியில் புதைத்தனர்.
Tag: நாய் கடித்து புள்ளிமான் பலி
நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள காரையூர் பகுதியில் அதிகமான மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சுந்தம்பட்டி வனப்பகுதியில் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியது. இதனால் அந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் இறந்து கிடந்த மானை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி வனத்துறையினர் செல்வேந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர் […]
தண்ணீர் குடிக்க சென்ற புள்ளி மானை நாய்கள் கடித்து குதறி விட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி பகுதியில் அதிக அளவிலான காட்டுப்பன்றிகள், மயில்கள், மான்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு அருகே காட்டுப் பகுதியில் வாழும் மான்கள் தண்ணீர் தேடி வரும் போது அவைகளை நாய்கள் கடித்து வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஒட்டங்குளம் கிராம பகுதிக்கு புள்ளிமான் தண்ணீர் குடிப்பதற்காக வந்தது. அந்த சமயத்தில் அந்த புள்ளி மானை நாய்கள் வெறித்தனமாக கடித்ததால் […]