குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கட்டிமேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கியுள்ளனர். இதனையடுத்து பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு ஏற்படும் மாணவர்கள் இந்த […]
Tag: நிகழ்ச்சி
பள்ளி, கல்லுரி முடித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொரோன தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த பெண்களுக்கும், இரண்டு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்த பெண்களுக்கும் சேர்த்து தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு உள்ளிட்ட […]
நான் எனது படத்தின் முதல் நாள் படப்பிடிபை கட் அடித்துவிட்டு ராதே ஷ்யாம் படத்தின் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்துள்ளார். ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. இப்படமானது வரும் மார்ச் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி […]
தேசிய பாதுகாப்பு தின விழாவில் கலந்து கொண்ட தொழிலார்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள டி.சி.பி. லிமிடெட் தொழிற்சாலையில் 51-வது தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாளர் கணேஷ், உதவி பொது மேலாளர் பாலசுந்தரம், தொழிற்சாலை மருத்துவர் தயாளன், துணை மேலாளர் மதியழகன், கார்த்திக், சந்திரசேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் துணை மேலாளர் சிவகுமார் உறுதிமொழியை வாசித்து விழாவில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு […]
அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி விழாவை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் கிராமத்தில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி விழாவை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. பிரமுகர் வாலை முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ப.பா.போஸ், செல்வம், கண்ணன், முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பால செல்லப்பா, ஆனந்த அருள்மொழிவர்மன், முன்னாள் ஊராட்சி மன்ற […]
மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் தனித்தனி திறன் வாய்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று வெம்பக்கோட்டை யூனியனை சேர்ந்த 20 அரசு பள்ளி மாணவ- மாணவிகளைத் தேர்ந்தெடுத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ் குமார், விஜயா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் […]
செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நோபல் சாதனை பதிவுக்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நோபல் சாதனை பதிவுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நோபல் சாதனை பதிவு நிறுவனம் நிர்வாகிகள், ஆட்சியாளர் மாலினி, கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரபாண்டியன், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தணியஸ்ரீ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2 மணி […]
கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நகையை அமைச்சர்கள் வழங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் நகை கடன் தள்ளுபடி ஆன பயனாளர்களுக்கு நகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, யூனியன் தலைவர் பொண்ணு தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தான பாண்டியன், யூனியன் துணைத்தலைவர் முக்கையன் மற்றும் பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின் அமைச்சர்கள் […]
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை வழங்கி வந்துள்ளார். தற்போது வழக்கம் போல் இல்லாமல் முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஸ்வா, இமைபோல் காக்க போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடல் உடையிலிருந்து இருந்து புடவைக்கு மாறும் வீடியோ […]
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் “மாணவர் மனசு” பெட்டி திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர் “மனசு பெட்டி” சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மேலாண்மைக் குழு தலைவி ஆனந்தஜோதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஞானராஜ், ஆசிரியர் ரோஸ்லினாராஜ்,, வசந்தி, காயத்ரி மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் தொல்லைகள் குறித்தும் மாணவர்கள் […]
இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கு சமயத்தில் தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தியதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். போரிஸ் ஜான்சன் பிரித்தானிய அரசியல்வாதியும் வரலாற்றாளரும் முன்னாள் இதழாளரும் ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமராகவும், பழமைவாதக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். மேலும் இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு […]
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பரிசுகளை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், அரும்பு கோட்டை ஆர்.டி.ஓ .கல்யாணகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் மாரிச்செல்வி, மற்றும் பள்ளி கல்லூரிகள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி 20 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் […]
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா, ஜூலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வனிதா, பரணி, யாஷிகா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பட்டியல் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் குறித்து பிரேமம் திரைப்பட இயக்குனர் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மாநாடு படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். […]
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருண் சிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் […]
லாஸ்லியாவை பார்க்க குவிந்த ரசிகர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்” இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, தற்போது இவர் ‘கூகுள் குட் டப்பா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், லாஸ்லியா நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். […]
சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சித்தவர்களை சீமான் தனது காலணியை உயர்த்திக்காட்டி பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்துல் ரவுப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 26-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, மாரிதாஸ் கைது செய்யப்பட்டது குறித்து நான் கூறிய கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருவதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் மேடையிலேயே […]
கனடாவில் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி 100 வருடங்கள் ஆன நிலையில் அது ஒரு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. கனடாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக Agnes Macphail என்பவர் கடந்த 1921 ஆம் வருடம் தேர்வு செய்யப்பட்டார். இது நடந்து 100 வருடங்கள் ஆன நிலையில் இதை Equal Voice என்ற அமைப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியாக ஒட்டாவாவில் நடத்தியது. இதில் Equal Voice என்பது கனடாவில் ஆண்களுக்கு சரி சமமாக பெண்களும் அரசியல் மற்றும் பதவிகளில் பிரதிபலிக்க வேண்டும் […]
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தனியார் பவுண்டேஷன் சார்பில் மாற்றுத் திறனாளிகளின் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மின்சாரத்துறை அமைச்சர் பாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில் ரூ.1,13,00,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று ரூ.1,13,00,000 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த […]
சென்னை அடையாற்றில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் இந்திய அரசிலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன் மற்றும் கரூர் தியாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு கராத்தே தியாகராஜனின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர் முதலில் அதிமுகவிலும், அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இவர் தற்போது பாஜகவில் இருப்பதால் திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, திமுகவில் உதயநிதி […]
கமல் அமெரிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், மக்கள் நீதி மைய கட்சித் தலைவராகவும் வலம் வருபவர். இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இவர் கொரோனா தொற்றுக்கு […]
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ‘குழந்தைகள் உதவி மைய நட்புறவு’ வாரமாக கடைபிடிக்கப்படும். அதன்படி நேற்று முன் தினம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தைகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது பணிகளுக்கிடையே குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் முருகன் கலந்து கொண்டார். அதன்பிறகு பேசிய அவர், குழந்தைகள் உதவி மையம் மூலம் 4,500 குழந்தைகள் […]
நாக சைதன்யா குடும்ப விருந்தில் சமந்தா கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா மற்றும் நாகசைதன்யா தென்னிந்தியாவின் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் ஆவர். சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருவதை நாம் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் சில விஷயங்களும் நடந்து வருகிறது. அதன் படி நாகசைதன்யா நடித்த லவ் ஸ்டோரி படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பிரபல பாலிவுட் […]
25 ஆண்டுகளுக்கு பின் பழைய மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில் 1996-98 பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வரான கிரேனா ராஜாத்தி தலைமை தாங்கினார். இதனையடுத்து பள்ளியின் முன்னாள் பேராசிரியர்கள் முனியசாமி, கனகசபை, கலைச்செல்வி, நல்லாசிரியர் விருது பெற்ற சுரேஷ்குமார், ஆசிரியர்கள் ஜோசப், ஜெபராஜ், காந்தராஜ்,ரமேஷ், ஜான் பாரதிராஜா மற்றும் பெரும்பாலானோர் […]
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் தான் அர்ச்சனா. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவர் திடீரென மூளை அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து தற்போது உடல்நலம் தேறிய அர்ச்சனா புதிதாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அந்த நிகழ்ச்சி […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு குடையை விரிப்பதற்கு போராடிய வீடியோ வெளியாகி இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் போரிஸ் ஜான்சன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வழக்கமாக, பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பரபரப்பும் கட்டுப்பாடுகளும் நிறையவே இருக்கும். இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொண்ட விழாவில் திடீரென்று மழை பெய்துவிட்டது. எனவே, பிரதமர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து நபர்களுக்கும் குடை கொடுத்துள்ளார்கள். அனைவரும் குடையை விரித்து தங்களை காத்துக்கொண்டனர். ஆனால், பிரதமருக்கு மட்டும் குடையை […]
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் இயற்கையை பாதுகாக்காமல் விட்டால் அதற்குரிய விலையை உலகம் கொடுக்க வேண்டிவரும் என்று கூறியிருக்கிறார். உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் பேசுகையில், புவி வெப்பமயமாதலால் உலக நாடுகள் முழுவதும் கடும் பாதிப்படைந்துள்ளது. எனினும் நீர் தேவைக்காக பனிப்பாறைகளை நம்பியுள்ள நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. எங்களது 80 சதவீத நீர் தேவை பனிப்பாறைகளை நம்பிதான் உள்ளது. ஆனால் பனிப்பாறைகள் விரைவாக உருக தொடங்கியுள்ளது. இந்த […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிக்கொட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவிற்கு உட்பட்ட அரளிக்கோட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் கபசுரக் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். அதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் கபசுர குடிநீரைப் பெற்றுக் கொண்டனர். மேலும் கபசுரக் குடிநீர் […]
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். அதே போல் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் புதிதாக ஒரு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. அதன்படி இந்நிகழ்ச்சிக்கு ‘பூவா தலையா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்டது […]
நான்காயிரம் பேர் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சியில் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் வருகின்ற மே 11ம் தேதி மிகவும் பிரபலமான ‘பிரிட்’ இசை விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி லண்டனில் உள்ள ‘ஓ2’ என்ற அரியானாவில் நடைபெற உள்ளது. இதில் 4000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அப்படி கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரங்கத்திற்கு […]
சிவகங்கை மாவட்டத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி காளையார்கோவில் வாரச்சந்தை வாசல் அருகே நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் வாரச்சந்தை வாசல் அருகே காளையார்கோவில் செஞ்சிலுவை சங்க கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்றும் முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காளையார்கோவில் தாசில்தார் ஜெய நிர்மலா தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் செஞ்சிலுவை சங்கத்தலைவர் தெய்வீக சேவியர், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகுத்தனர். இந்த […]
பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மான் கி பாத்திலும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடுவார். அது மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவது குறிப்பிட்ட மொழிகளில் தொலைக்காட்சிகளில் வெளியாகும். 10 மாநில டிடி தொலைக்காட்சியில் பிரதமர் மோடியின் மான் கி பாத் உரை மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பொதிகையில் மட்டும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பப்பட்டது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தின நிகழ்ச்சி திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ச்சி என்.சி.சி. சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அதிகாரி சந்தீப்மேனன் தலைமை தாங்கினார். இதில் என்.சி.சி. மாணவர்களுக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் தொடர்பாக குறும்படம் காண்பிக்கப்பட்டது. அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியாததால் அதனை தவிர்ப்பது குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். […]
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா பாதிப்பு தற்போது சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் தினசரி 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கை வாரச்சந்தையில் கொரோனா பரவலை தடுக்க ஒமேகா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் இணைந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிக்கு முககவசம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கையில் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இலவசமாக 2000 முககவசங்கள் வழங்கப்பட்டது. […]
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. நான்கு சீசன்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார்.இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீஸனில் முகின், நான்காவது சீசன் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கப்பட […]
சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் எப்படி மாபெரும் ஹிட் அடிக்கிறதோ அதே போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலமாக ஆகிறது. அதற்கேற்றவாறு இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்காக பிரபல நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப் படுகின்றன. இதற்காக தேர்வு செய்யப்படும் நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் ஒளிபரப்பப்படும் கோடீஸ்வரர் சீசன் 5 ஐ தொகுத்து வழங்குவதற்காக ஜூனியர் என்டிஆர் என்ற தெலுங்கு […]
கனடாவில் உள்ள டொரோண்டோ நகரில் நடப்பு ஆண்டின் ஜூலை மாதம் வரை வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கனடாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக கனடா தினத்தையொட்டி நடைபெற இருந்த அணிவகுப்புகள், திருவிழாக்கள், வானவேடிக்கைகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகள் போன்றவை ஜூலை 1 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் டொரோண்டோ நகர அரசு நிர்வகிக்கும் சாலைகள், […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது இளமை பருவத்தில் நடத்த மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா “Renegades” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஒபாமா, அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான Bruce Springsteen என்பவருடன் தனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதில், ” சிறுவயதில் நானும் என் நண்பனும் ஒன்றாக சேர்ந்து கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது எங்களுக்கு இடையே […]
தனது நண்பர் ஒபாமாவும் தன்னுடன் இணைந்து நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார் இந்த வருடம் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஜோ பிடன் இதுகுறித்து கவலை இன்றி காணொளி மூலம் […]
கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிதி திரட்ட ஹாலிவுட் நடிகர் நடிகைகள் நேரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ்க்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். இந்நிலையில் தொற்றை தடுக்க அனைத்து நாடுகளும் ஊரடங்கு திட்டத்தை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ள சூழலில் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் நிதி திரட்டி வருகின்றன. உணவு, மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் […]